மனம் போன போக்கில்

Archive for நவம்பர் 2008

கௌரவம்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 29, 2008

ஜெயநகரிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கையேந்தி பவன். ஏகப்பட்ட கூட்டம்.
காரில் வந்து கையேந்தி பவனில் சாப்பிடுகிறவர்கள் அதிசயம் இல்லை. நான் ஆச்சர்யப்பட்டது, ஒரு ஸ்கூட்டரைப் பார்த்து.
சாதாரண ஸ்கூட்டர் இல்லை, செக்கச்செவேல் பின்னணியில் கொட்டை எழுத்தில் ‘பிட்ஸா கார்னர்’ என்று எழுதிய ஸ்கூட்டர். அதன்மேல் உட்கார்ந்திருந்தவனும் அதே வண்ணத்தில் யூனிஃபார்ம் அணிந்திருந்தான். அலுமினியத் தட்டில் வாழை இலைத் துணுக்கை வைத்து சுவாரஸ்யமாக தோசையை மொசுக்கிக்கொண்டிருந்தான்.
அந்தப் பையனின் மாதச் சம்பளத்துக்குக் கையேந்தி பவன்தான் கட்டுப்படியாகும் என்பது புரிகிறது. ஆனால், [...]

நாமகரணம்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 29, 2008

யாஹூ! நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் உச்சா போகும் அறைகளுக்குக்கூட, புதுமையாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்:

ஆண்கள் டாய்லெட்டின் பெயர், ‘Go-Pee’
பெண்கள் டாய்லெட்டின் பெயர், ‘Go-Pee-Ka’

இதுபோல, நீங்கள் பார்த்த சுவாரஸ்யமான ‘பெயர்’கள் உண்டா?
***
என். சொக்கன் …
29 11 2008

நந்தன் கதை

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 28, 2008

கடைசியாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகைப்படத்தை எங்கே பார்த்தீர்கள்? ஞாபகம் இருக்கிறதா?
போகட்டும், அவர் ராமாயணக் கதையைப் படமாக எடுக்கிறார் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்களே, அந்தத் திரைக் காவியத்திலிருந்து ஏதாவது ஸ்டில் பார்த்தீர்களா?
ம்ஹும், சான்ஸே இல்லை. சாதாரணமாக மணிரத்னம், அல்லது அவருடைய அப்போதைய ‘Work In Progress’ திரைப்படத்தின் புகைப்படம், பேட்டிகளை எங்கேயும் பார்க்கமுடியாது. பத்திரமாக ரகசியம் காப்பதில் மனிதர் ரொம்ப சமர்த்து.
ஆனால் அவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றால்மட்டும், அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் முன்னதாக எல்லாப் பத்திரிகைகளிலும் மணிரத்னம்தான் கவர் [...]

ஃபேஷன்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 27, 2008

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

நசுங்கிப்போன அலுமினியத் தட்டு, திருவோடு ஞாபகம் வருகிறதில்லையா?
ம்ஹும், தப்பு. இது பெங்களூரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடுகிறவர்களுக்கு வைக்கப்படும் ‘புது ஃபேஷன்’ தட்டு. (இன்று மதியம் அலுவலக நண்பர்களுடன் சாப்பிடச் சென்றபோது படம் பிடித்தேன்.)

பாவம், ரொம்ப ஏழைப்பட்ட நட்சத்திர ஹோட்டல் போலிருக்கிறது!
***
என். சொக்கன் …
03 12 2008

மழை

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 26, 2008

பெங்களூரில் எப்போது மழை பெய்யத் தொடங்கும் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.
மூன்றரை மணிவரைக்கும் நன்றாக வெய்யில் கொளுத்திக்கொண்டிருக்கும், பிறகு சட்டென்று பாதரசம் இறங்கிக் குளிர் எடுக்க ஆரம்பிக்கும், ஜில்லென்று ஒரு காற்று நம்மை வருடிப்போகச் சிலிர்த்து முடிப்பதற்குள், சடசடவென்று மழை தொடங்கிவிடும்.
எங்கள் அலுவலகத்தில் எல்லா ஜன்னல்களும் இழுத்து மூடப்பட்டிருப்பதால், மழையின் சுவடுகளைக்கூட நாங்கள் தரிசிக்கமுடியாது. அலுத்துக் களைத்து வீட்டுக்குப் போகலாம் என்று கிளம்பும்போதுதான், ‘தும்ப மழே பர்த்து சார்’ என்று அறிவிப்பார் 24X7 காவல் காரர்.
அப்போதும், எங்களுக்கு [...]

பேசு!: ஏர்டெல் மிட்டல் – என். சொக்கன் – கிழக்கு பதிப்பகம்

பறக்கும் குழந்தைகளுக்கு

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 26, 2008

கிங்ஃபிஷர் நிறுவனம் தனது விமானத்தில் பயணம் செய்கிற குழந்தைகளுக்காக ஒரு புதிய பத்திரிகையை அறிமுகப்படுத்தியிருக்கிறது, ‘Little Wings’ என்ற பெயரில்.
48 பக்கங்கள் முழு வண்ணத்தில் பளபளக்கும் இந்தப் புத்தகம், டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பு. மிக்கி மவுஸ் தொடங்கி, சமீபத்திய Wall-Eவரை அவர்களுடைய பழைய, புதிய கதாபாத்திரங்கள் எல்லோரும் வந்துபோகிறார்கள்.
இந்தப் புத்தகம் மிக எதேச்சையாகதான் என் கைக்குக் கிடைத்தது. விமானத்தில் எனக்குமுன்னால் பயணம் செய்த ஒரு குழந்தை, புத்தகத்தைப் படித்துவிட்டு அங்கேயே விசிறிவிட்டுப் போயிருந்தது. அதை யாரும் கவனிக்கவில்லை, [...]

கலைக் கடை

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 25, 2008

எங்கள் அலுவலகத்தின் அருகே ஒரு கலைப் பொருள் கண்காட்சி. பெரும்பாலும் மரக் குடைவுப் பொருள்கள், ஆங்காங்கே மார்பிள், பிற வண்ணக் கற்களால் ஆன அழகு பொம்மைகள்.
பேனா, பேனா வைக்கிற ஸ்டான்ட், பேனாவோடு பென்சிலும் வைக்கிற குடுவை, இவை எல்லாம் வைக்கிற மேசை, காபி கோப்பையையும் அந்த மேசையையும் பிரிக்கிற சமாச்சாரங்கள், சாவி ஸ்டான்ட், தபால் பெட்டி, குழந்தைகள் விளையாட கார், வேன் முதல் விபத்துக்குள்ளாகாத விமானம் வரை பொம்மைகள், வெள்ளை வெளேரென்று கடவுள் சிலைகள், சாவிக் கொத்துகள், [...]

பழ ரசம்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 24, 2008

ஸ்டீவ் ஜாப்ஸை எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனால் ஓர் அசாத்திய ஆளுமையாகமட்டும். கம்ப்யூட்டர் நிபுணராக அவரை எனக்குச் சுத்தமாகப் பரிச்சயம் இல்லை.
’மாகின்டோஷ்’ அவருடைய பிரமாதமான படைப்பு என்கிறார்கள். இன்றைய கணினி GUIக்கு வழிவகுத்த உத்தம கம்ப்யூட்டர் என்று நிறையப் பேர் போற்றி பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்தப் பெயரைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு ஏதோ பொட்டாஷியம் உர விளம்பரம்தான் ஞாபகம் வருகிறது.
நிற்க. நான் கனவில்கூட மாகின்டோஷ் கணினியைத் தொட்டுப் பார்த்தது இல்லை. அதேசமயம், பில் கேட்ஸ் எனக்கு தூரத்து [...]

பத்தொன்பது பேர்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 23, 2008

என் முன்னே அமர்ந்திருப்பவர்கள் பத்தொன்பது பேர்.
அனைவரும், மிகச் சமீபத்தில்தான் கல்லூரியிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை, கடந்த நான்கைந்து மாதங்களாகத் தொடர் பயிற்சி.
இவர்களில் யாரும் கல்லூரி மனோபாவத்திலிருந்து வெளியே வந்துவிடவில்லை என்பது அவர்களுடைய உடை அலங்காரங்களைப் பார்த்தாலே தெரிகிறது. அதேசமயம், சமீபத்திய மார்க்கெட் சிரமங்களையும் உணர்ந்திருக்கிறார்கள், எதையும் சீக்கிரம் கற்றுக்கொண்டாகவேண்டும் என்கிற துடிப்பு முகத்தில், நடவடிக்கைகளில் சற்று அழுத்தமாகவே தெரிகிறது.
எல்லோரிடமும் தவறாமல் மொபைல் ஃபோன் இருக்கிறது, சிலரிடம் இரண்டு. நவீன மாடலெல்லாம் [...]


ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்

இதுவரை

  • 74,245 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

நவம்பர் 2008
தி செ பு வி வெ ஞா
    Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930