Posted by: என். சொக்கன் on: December 31, 2008
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
Posted by: என். சொக்கன் on: December 29, 2008
முதன்முறையாக கொல்கத்தா சென்றபோது, சற்றே பெரிய கிராமம்போலிருந்த அதன் தன்மை எனக்குக் கொஞ்சம் பயமூட்டியது. குறிப்பாக, கொல்கத்தா மழைக் காலங்கள் மிகக் கொடுமையானவை, நான்கு தூறலுக்கே சாலையெல்லாம் சாக்கடையாகிவிடும். தரையடிப் பாலத்தில் இறங்கி ரயில்வே பிளாட்ஃபாரங்களில் ஏற நினைக்கிறவர்களுக்கு நிறைய சகிப்புத்தன்மை தேவைப்படும். நகரம்(?)முழுவதுமே, நவீனம் ஆங்காங்கே திட்டுத்திட்டாக எப்போதாவதுதான் தென்பட்டது, மற்றபடி கட்டட அமைப்பில் தொடங்கி, மக்களின் உடை அலங்காரம், பேசும் விதம்வரை சகலமும் கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களை நினைவூட்டியது. கொல்கத்தாவில் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் [...]
Posted by: என். சொக்கன் on: December 29, 2008
கோகுலம் ஜனவரி 2009 இதழில் தொடங்கி, ‘அறிவியல் கதைகள்’ என்ற தலைப்பில் அறிவியல் உலகின் புகழ் பெற்ற நிகழ்வுகள், கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களைக் கதை வடிவில் எழுதவிருக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் வாசித்துக் கருத்துச் சொல்லுமாறு வேண்டுகிறேன்! *** என். சொக்கன் … 29 12 2008
Posted by: என். சொக்கன் on: December 28, 2008
சமீபத்தில் என் நண்பர் ஒருவர் சென்னை சென்று திரும்பினார், அவரிடம் தொலைபேசியில் விசாரித்தேன், ‘என்னப்பா, எப்படி இருந்தது ட்ரிப்?’ ‘எல்லாம் நல்லாதான் இருந்தது, கிளம்பற நேரத்தில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்’ ‘அச்சச்சோ, என்னாச்சு?’ ‘சிக்னல்ல நிக்கும்போது ஒரு தடிமாடு கார் மேலே வந்து மோதிட்டான், ஒரு லைட் உடைஞ்சுபோச்சு’ ‘அடடா, அப்புறம்?’ ‘ஒரு மணி நேரம் அவனோட சண்டை போட்டு எழ்நூறு ரூபாய் வாங்கிட்டுதான் விட்டேன்’ என்று பெருமிதமாகச் சொன்னார் நண்பர், ‘ஆனா, இந்த எழ்நூறு ரூபாய் [...]
Posted by: என். சொக்கன் on: December 28, 2008
எனது ‘அம்பானி: ஒரு வெற்றிக்கதை’ புத்தகத்தின் விமர்சனம்: ’வினவு, வினை செய்’ தளத்திலிருந்து: அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை [...]
Posted by: என். சொக்கன் on: December 27, 2008
கல்லூரி நாள்களில் தொடங்கி, தடி தடியான ஆங்கிலப் புத்தகங்கள் என்றால் எனக்கு அலர்ஜி. அவ்வளவு சிரமப்பட்டு அவற்றைப் படிக்கத்தான் வேண்டுமா என்று அலுத்துக்கொள்வேன். பன்னிரண்டாம் வகுப்புவரை நான் படித்தது தமிழ் மீடியம். ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடம்தவிர வேறு எதற்காகவும் ஏ, பி, சி, டி எழுத்துகளை அணுகியதே கிடையாது. இதனால், கல்லூரி சென்ற புதிதில் ரொம்பச் சிரமப்பட்டேன். ’எஞ்சினியரிங் பாடமெல்லாம் ஆங்கிலத்தில்தான் நடத்தவேண்டும் என்று என்ன கட்டாயம்?’ என்றெல்லாம் சுயநலமாக ஆத்திரப்பட்டிருக்கிறேன். கல்லூரியில் என்னுடன் படித்த [...]
Posted by: என். சொக்கன் on: December 26, 2008
எனது ‘சல்மான் ரஷ்டி’ புத்தகத்தின் மினி விமர்சனம்: ’கிறுக்கல்கள்’ தளத்திலிருந்து: ரஷ்டியை பத்து வருடங்களாக தொடர்ந்த அந்த ஃபத்வா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டமும் நடையுமாக தொடங்கும் இந்த புத்தகம் செல்வது சீரான வேகத்தில். ரஷ்டி அவரின் வாழ்க்கையை பற்றி முன்பே எழுதியிருந்தாலும், சொக்கன் காட்டும் ரஷ்டி கொஞ்சம் புதிதானவர். பம்பாயை காதலிக்கும் சாதாரண மனிதராக, காதல் மன்னனாக, தாய்நாட்டை விட்டு தொலைந்து போனவராக, போராளியாக. நம் வாழ்க்கை மொத்தமும் கதைகளின் தொகுப்பு தான் என்னும் [...]
Posted by: என். சொக்கன் on: December 25, 2008
ஒரு சட்டை தேய்க்க இரண்டரை, பேன்ட்டுக்கும் அஃதே, புடவை என்றால் ஆறு ரூபாய், பட்டுப் புடவைக்கு அது எட்டாகும். ஆடைகளை அயர்ன் செய்யச் செலவு அதிகம் பிடிப்பதில்லை. ஆனால் இதையே முழு நேரத் தொழிலாக வைத்துப் பிழைக்கிறவர்கள் அநேகமாக எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். எங்கள் தெருவிலும் ஓர் அயர்ன் தொழிலாளி இருக்கிறார். அந்த ரோட்டின் நடு மத்தியில் ஒரு சிறிய மரத்தடியில் குடிசை அமைத்து, பக்கத்திலேயே தள்ளு வண்டியை வைத்து எந்நேரமும் விடாமல் தேய்த்துக்கொண்டிருப்பார். அவருடைய வண்டியில் [...]
Posted by: என். சொக்கன் on: December 24, 2008
திருவல்லிக்கேணியிலுள்ள ஓர் ஓட்டலில், ‘இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாது’ என போர்ட் மாட்டியிருந்தார்கள். அங்கு காபி சாப்பிடப் போன நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு கப் காபிக்கு ஆர்டர் கொடுத்தார். சர்வர் காபி கொண்டுவந்ததும், அதைத் தள்ளிவைத்துவிட்டு, இன்னொரு காபி ஆர்டர் கொடுத்தார். ’இதுக்கு சர்க்கரை போடுய்யா’ என்றார் ராதா. சர்வர் மறுத்துவிட்டு போர்டைக் காட்டினார். உடனே ராதா, ‘தெரியுதுப்பா. இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாதுன்னுதானே போட்டிருக்கு, ரெண்டாவது காபிக்கு சர்க்கரை கொண்டா’ [...]
Posted by: என். சொக்கன் on: December 23, 2008
‘இந்த ரயில் மைசூருக்குப் போகுமா ?’ தெளிவான கன்னடத்தில் அவர் நிறுத்தி, நிதானித்துதான் கேட்டார். என்றாலும், எனக்கு சரியாய்ப் புரியவில்லை. காரணம், ஒரு வார்த்தைக்கும், இன்னொரு வார்த்தைக்கும் இடையில் அவர் விடுத்த அதீத இடைவெளிதான் – ரயில் நன்றாக வேகம் பிடித்திருந்த காரணத்தால், அந்த இடைவெளிகளில் ஜன்னலோரக் காற்று தாராளமாய்ப் புகுந்துகொள்ள, ‘மைசூர்’ என்பதைத்தவிர, வேறேதும் எனக்கு அர்த்தமாகவில்லை. ‘என்ன கேட்டீங்க ?’, அவருடைய முகத்தை நெருங்கினாற்போல் விசாரிக்கையில், குப்பென்று மதுபான வாடை என்னைத் தாக்கியது. சட்டென [...]
Posted by: என். சொக்கன் on: December 22, 2008
சுமார் நான்கரை வருடங்களுக்குமுன்னால் நடந்த சம்பவம். இன்றைக்கும் நினைவில் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். காரணம், அதில் இருக்கும் லேசான அமானுஷ்யத் தன்மை என்று நினைக்கிறேன். அன்றைக்கு நானும் எனது நண்பன் கிஷோரும் கோரமங்களாவில் இருக்கும் ஒரு பெரிய புத்தகக் கடைக்குச் செல்லக் கிளம்பினோம். கிஷோரின் பைக் மாலை நேர டிராஃபிக்கில் ஊர்ந்து செல்வதற்குள் மணி ஏழரையைத் தாண்டிவிட்டது. பிரச்னை என்னவென்றால், கிஷோர் எட்டரை மணிக்கு ஒரு டாக்டரைச் சந்திக்கவேண்டும். அதற்குமுன்னால் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டுதான் போவேன் என்று [...]
Posted by: என். சொக்கன் on: December 22, 2008
Posted by: என். சொக்கன் on: December 21, 2008
மேடையேறி ஆடுவது குழந்தைகள், பாடுவது குழந்தைகள், ரைம்ஸ் சொல்லுவது குழந்தைகள், தொகுத்து வழங்குவதுகூடக் கொஞ்சம் பெரிய குழந்தைகள்தான். ஆனால், விழாவுக்கு ஏனோ ‘பெற்றோர் தினம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நங்கைக்குப் புது உற்சாகம் பிறந்துவிடும். தூங்கும் நேரம் தவிர்த்து நாள்முழுக்க விதவிதமான நடன அசைவுகளை நிகழ்த்திக் காட்டியபடி இருப்பாள். வெறுமனே ஆடினால்மட்டும் பரவாயில்லை, நாங்கள் கவனிக்காவிட்டால் கண்டபடி திட்டு விழும், கோபத்தில் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடிமுன் ஆடுவாள். [...]
Posted by: என். சொக்கன் on: December 19, 2008
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு புதிய வங்கிக் கிளை திறந்திருக்கிறார்கள். இந்த வங்கியில் எனக்குச் சேமிப்புக் கணக்கு இல்லை. ஆனால் வீட்டுக்கு நெருக்கமாக ஓர் ஏடிஎம் இயந்திரம் இருந்தால் நல்லதுதானே? ஒரு சுபயோக சுபதினத்தில் நான் அவர்களுடைய அலுவலகத்தினுள் நுழைந்தேன், ‘ஒரு சேவிங்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிக்கணும்’ முழுசாகச் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றார்கள். மெத்மெத் நாற்காலியில் உட்காரவைத்துத் தங்களுடைய வங்கியின் அருமை, பெருமைகளை விளக்கினார்கள். இந்தக் கதையெல்லாம் எனக்கு எதற்கு? வங்கிக் கணக்கு [...]
Posted by: என். சொக்கன் on: December 19, 2008
சென்ற வாரத்தில் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு மிகச் சுவாரஸ்யமானது, மனவியல் குறித்த பல விஷயங்களை விரிவாகக் கற்றுக்கொண்டோம். அவற்றை இங்கே விரிவாக எழுதினால் காபிரைட் வழக்குப் போடுவேன் என்று என்னுடைய மரியாதைக்குரிய குருநாதர் மிரட்டுவதால், வேறு விஷயம் பேசலாமா? இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கும்போது, எங்களுடைய மேஜையில் ஒரு சிறிய உலோகக் குவளை வைத்திருந்தார்கள். அதனுள் இரண்டு களிமண் உருண்டைகள். களிமண் என்றால் நிஜக் களிமண் இல்லை, குழந்தைகள் விளையாடுமே அந்த பொம்மை / செயற்கைக் களிமண், [...]
Posted by: என். சொக்கன் on: December 17, 2008
பதினான்கு. சம்பந்தமில்லாமல் ஏன் இந்தப் பதிவைப் பதினான்கு என்கிற வார்த்தையுடன் தொடங்குகிறேன் என்று குழம்பவேண்டாம். நிஜத்தில் இந்த விமர்சனக் கட்டுரை அடுத்த பேராவில்தான் ஆரம்பமாகிறது. தொடக்கத்திலேயே ‘பதின்மூன்று’ என்று அபசகுனமாக வேண்டாமே என்று சும்மா உல்லுலாக்காட்டிக்கு இந்த அறிமுகம். பதின்மூன்று என்கிற எண், எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அசுத்தமாகவும் பிடிக்காது. என்னுடைய மெயில் இன்பாக்ஸில்கூட 13 மெயில்கள் இருந்தால், ஒன்றை டெலீட் செய்து 12 ஆக்குவேன். இல்லாவிட்டால் அடுத்தமுறை மெயில் பார்க்கமுடியாமல் ஏதாவது நேர்ந்துவிடும் என்று ஒரு [...]
Posted by: என். சொக்கன் on: December 16, 2008
எங்கள் அடுக்ககத்தில் நேற்று ஒரு சின்ன திருட்டுச் சம்பவம். காலை ஏழு மணியளவில் எல்லா வீட்டு வாசல்களிலும் பால் பாக்கெட்கள் போடப்படும். அவரவர் சோம்பேறித்தனத்தின் அடிப்படையில் மக்கள் எட்டு, எட்டரை, அல்லது ஒன்பது மணிக்கு அந்த பாக்கெட்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள். சனி, ஞாயிறு என்றால் நிலைமை இன்னும் மோசம், மாலை நாலு, ஐந்துவரைகூடப் பாக்கெட்கள் சில வீடுகளின் வாசலில் பரிதாபமாகக் கிடக்கும். அவற்றைப் பார்க்கையில், எனக்கு ஒரு விநோதமான கற்பனை தோன்றும். இப்போது கிளியோபாட்ரா உயிரோடு [...]
Posted by: என். சொக்கன் on: December 16, 2008
நேற்று ஒரு மென்திறன் (Soft Skill) பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்தேன். பேச்சுவாக்கில், இந்திய சினிமாக்களின் சண்டைக் காட்சிகளைப்பற்றி விவாதம் வந்தது. எங்களுக்குப் பயிற்சி தருகிறவர் ஒரு மனவியல் நிபுணர். அவர் பெயர் எரிக் (http://www.humanfactors.com/about/eric.asp). என்னுடன் உட்கார்ந்திருக்கிற மாணவர்கள் பலர், இவர் பேசுவதைக் கேட்பதற்காகவே பம்பாய், டெல்லி, கல்கத்தாவிலிருந்து பயணம் செய்து வந்திருந்தார்கள். சுவாரஸ்யமான இந்தப் பயிற்சியைப்பற்றிப் பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன். இப்போது நாங்கள் பேசிய ‘சண்டை’ விஷயம். ஒருவர் சொன்னார், ‘இந்திய சினிமாக்களில் சண்டைக் [...]
Posted by: என். சொக்கன் on: December 15, 2008
அத்தை வந்திருந்தார். எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இப்படி மொட்டையாகச் சொன்னால் யாருக்கும் புரியாது, எந்த அத்தை என்று விளக்கவேண்டும். என் அப்பாவுக்கு நிறைய சகோதரிகள். ஆகவே, ‘அத்தை’ என்ற பொதுப் பதம் எங்களுக்குப் போதவில்லை. ஒவ்வோர் அத்தையையும் அடையாளம் காட்டக்கூடிய ஒரு தனிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது. சில அத்தைகள், தங்களுடைய சொந்தப் பெயரால் அறியப்பட்டார்கள். உதாரணமாக, வெள்ளம்மா(அ)த்தை, கண்ணம்மா(அ)த்தை. இன்னோர் அத்தை ஆசிரியையாக வேலை பார்த்தார். ஆகவே அவர் ‘டீச்சரத்தை’ ஆனார். கொத்தாம்பாடி, காரைக்குடி என்கிற ஊர்களில் [...]