மனம் போன போக்கில்

Archive for ஜனவரி 2009

ஜனாதிபதி வருகை

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 31, 2009

ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்காக இன்று அப்போலோவுக்குச் சென்றிருந்தோம்.
வழக்கமாக அப்போலோ ரிசப்ஷனில் பச்சை, நீலம், வெள்ளை யூனிஃபார்ம் வண்ணங்கள்தான் தென்படும். ஆனால் இன்றைக்கு, எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டைகள், தொப்பிகள்.
‘என்ன விசேஷம்?’ என்று விசாரித்தபோது, பக்கத்திலிருந்த ஒருவர் விளக்கினார், ‘ஜனாதிபதி வர்றாங்க சார், அதான் பாதுகாப்பெல்லாம் பலமா இருக்கு’
ஜனாதிபதி வருகிறார் என்றால், நிஜமாகவே பெரிய விஷயம்தான். ஆனால், டெல்லியில் இருக்கவேண்டிய அந்த அம்மையார், ஏன் வேலை மெனக்கெட்டு பெங்களூருக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்?
‘ஏய் மக்கு’ என்று தலையில் குட்டினார் [...]

அன்னபூரணி

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 31, 2009

ஒரு வாரமாக வீட்டில் டிவிடி ப்ளேயர் இயங்கவில்லை.
இது ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம், எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இது பெரிய, மிகப் பெரிய விஷயம்தான்.
காரணம், டிவிடி ப்ளேயர் என்பது எங்கள் வீட்டில் வெறுமனே பொம்மை காட்டுகிற சாதனமாக இல்லை. அது ஓர் அன்னபூரணியாகவே இயங்கிவந்திருக்கிறது.
எங்கள் மகள்கள் இருவருக்கும், வாய் என்பது சத்தம் போட்டுக் கத்துவதற்குமட்டுமே உருவாக்கப்பட்ட உறுப்பு என்கிற எண்ணம், அதைப் பயன்படுத்திச் சாப்பிடவும் செய்யலாம் என்பதை அவர்கள் மனம் அவ்வளவாக ஏற்பதில்லை.
ஆகவே, சாப்பாட்டுத் தட்டைப் [...]

சிபாரிசு

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 30, 2009

இன்றைக்கு ஒரு பழைய நண்பரைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.
‘பழைய நண்பர்’ என்பதை ஒற்றை வார்த்தையாகவும் சொல்லலாம், ‘பழைய’ நண்பர், அதாவது இப்போது நண்பர் இல்லை என்கிற அர்த்தத்தில் இரண்டு வார்த்தைகளாகப் பிரித்தும் சொல்லலாம். இரண்டுமே அவருக்குப் பொருந்தும்.
அந்த நண்பரின் நிஜப் பெயர் முக்கியமில்லை, சும்மா ஒரு பேச்சுக்கு ’திவாகரன்’ என்று வைத்துக்கொள்வோம்.
பல வருடங்களுக்குமுன்னால், நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். அவருக்கு என்னைவிட வயது, அனுபவம், சிந்தனை முதிர்ச்சி எல்லாமே அதிகம். ஆனால் அவர் என்னுடைய Boss இல்லை, கூடுதல் [...]

’மணிக்கொடி’யைத் தவறவிட்டவர்

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 29, 2009

சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தென்பட்ட ஒரு தகவல் மிகவும் ஆச்சர்யம் அளித்தது.
அந்தப் புத்தகத்தைப்பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இப்போது அதிலிருந்து ஒரு சின்னப் பகுதிமட்டும் இங்கே:
சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடு வீட்டில் பட்டினி கிடந்த சமயம், பக்கத்துத் தெருவில் வசித்து வந்த பழம் பெரும் எழுத்தாளர் சி. சு. செல்லப்பாவிடம் தன் கதைகள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்திருந்தார். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல கதைகளும் கவிதைகளும் இருந்தன. [...]

தீப்பெட்டி பஸ்

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 27, 2009

‘பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’
கடைசியாக அந்தக் குரலைக் கேட்டு எட்டு வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும், அதை இப்போது நினைத்தால்கூட உள்ளுக்குள் ஏதோ சிலிர்க்கிறது.
எப்போதும் இப்படிதான். அந்த வயதுப் பையன்களின் உடையாத குழந்தைக் குரல்களைக் கேட்கிறபோதெல்லாம் எனக்கு என்னவோ ஆகிவிடுகிறது. சில விநாடிகளுக்கு எதுவும் செய்ய முடியாதவனாகிப் போகிறேன். ஏதோ இனம் புரியாத சோகம், அதற்குக் காரணம் என்னவென்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.
இப்படிதான் ஹைதராபாத் சென்ற புதிதில் ஒருநாள். ஏழெட்டு நண்பர்களுடன் ஹோட்டலில் கும்பலாகப் போய் உட்கார்ந்து ஜாலியாகப் [...]

பாட்டி பாரதம்

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 24, 2009

போன வாரத்தில் ஒரு நாள், வழக்கம்போல் மதியச் சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்தேன். கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும்போதே உற்சாகக் கூக்குரலுடன் ஓடி வந்தாள் நங்கை, ‘அப்பா, பாட்டி வந்திருக்காங்களே’
’பாட்டியா? அவங்க எப்படி இங்கே வருவாங்க? சும்மா விளையாடாதேம்மா’ என்றபடி செருப்பைக் கழற்றினேன்.
ஆனால், நங்கை சொன்னதுதான் உண்மை. நிஜமாகவே அவளுடைய பாட்டி அவளைப் பார்க்கப் புறப்பட்டு வந்திருந்தார்.
அப்பா, அம்மாவைவிட, ஏனோ குழந்தைகளுக்குப் பாட்டிகளைதான் அதிகம் பிடிக்கிறது. காரணம், அவர்களுக்குதான் குழந்தைகளுடன் செலவிட அதிக நேரமும் பொறுமையும் இருக்கிறது.
நாலு வாய்ச் [...]

பழைய வீடு

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 22, 2009

நான்கரை கிலோ மீட்டர்களைக் கடக்க ஒருவருக்கு எத்தனை நேரமாகும்?
சற்றே வேகமாக நடந்தால், நாற்பது நிமிடம், மிஞ்சிப்போனால் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ,. படுசோம்பேறியாக இருந்தால்கூட நாலு மணி நேரம், அதற்குமேல் ஆகாது.
ஆனால் எனக்கு, முழுசாக மூன்றரை வருடங்கள் ஆனது.
சொந்த வீடு கட்டிக்கொண்டு பிடிஎம் லேஅவுட் வந்தபிறகு, நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த பழைய ஜே.பி. நகர் வீட்டைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. கடந்த சில ஆண்டுகளில், ஒருமுறை என்றால் ஒருமுறைகூட அந்தப் பக்கம் போகும் வாய்ப்பே [...]

மலேசியா: மீதமிருக்கும் குறிப்புகள்

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 21, 2009

மலேசியாவிலிருந்து திரும்பி வந்தாகிவிட்டது. ஆனால் எழுத நினைத்த சில குறிப்புகள் இன்னும் மீதமிருக்கின்றன. அவற்றை முழுப் பதிவாக எழுதினால் பழைய வாடை அடிக்கும். ஆகவே இங்கே சுருக்கமாகப் பட்டியல் போட்டுவிடுகிறேன்.

மலாய் மொழியில் ஆங்கில வார்த்தைகளுக்குக் குழப்படியாக ஸ்பெல்லிங் மாற்றிவிடுகிறார்கள். அதுவும் யோசித்துப் பார்க்க ஜாலியாகதான் இருக்கிறது. உதாரணமாக, நண்பர் முகேஷுடன் காரில் சென்றபோது கோலா லம்பூர்ச் சாலைகளில் நான் பார்த்த சில வார்த்தைகள் – இவை ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் எதைக் குறிக்கின்றன என்று யோசியுங்கள்: Ekspress, Sentral, [...]

எல்லாம் வல்ல ஜனார்த்தன்

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 21, 2009

முந்தாநாள் காலையில், சிங்கப்பூரிலிருந்து சில பெருந்தனக்காரர்கள் வந்திருந்தார்கள்.
எல்லாம் நம் ஊர்க் காரர்கள்தான். போன தலைமுறையில் அங்கே செட்டிலாகிவிட்டவர்கள். ஏதோ பெரிய தொழில் செய்து சௌக்கியமாக வாழ்கிறார்கள்.
அவர்களுடைய தொழிலை அடுத்த நிலைக்கு விரிவுபடுத்த, இணைய தளம் தேவைப்படுகிறது. அதில் அவர்களின் தயாரிப்புகளைப்பற்றி விரிவாகப் படிக்கும் வசதி, கடன் அட்டை பயன்படுத்தி வாங்கும் வசதி, ஏற்கெனவே வாங்கியவர்கள் குற்றம், குறை சொல்லும் வசதி எனச் சகலமும் வேண்டும் என்று கேட்டு வந்திருந்தார்கள்.
’வருக வருக மகா ஜனங்களே’ என்று நாங்கள் அவர்களை [...]

நெரிசல்கள்

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 18, 2009

நேற்றே கோவிலுக்குச் செல்வதாகத் திட்டம், குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் இன்றைக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
ஜுரத்தில் சோர்ந்து படுத்திருந்த குழந்தை, இன்றைக்குப் பழையபடி எல்லோரையும் மிரட்டத் தொடங்கிவிட்டதால், உம்மாச்சியை ஏமாற்றவேண்டாமே என்று கோவிலுக்குக் கிளம்பினோம், கூடவே பக்கத்திலிருக்கும் பூங்காவும் திட்டத்தில் சேர்ந்துகொண்டது.
நாங்கள் ஆட்டோவில் சென்று இறங்கியபோது, கோவில் வாசல் திறந்திருக்கவில்லை. ’நல்லதாப் போச்சு’ என்று பூங்காவினுள் நுழைந்தோம்.
பெங்களூரில், குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளில் ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தபட்சம் ஒரு பூங்காவேனும் இருக்கிறது. காலையில் இரண்டு, மாலையில் இரண்டு எனச் சரியாக தினமும் நான்கு [...]


ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்


  • Jawahar: //’இந்தக் கஷ்டமருங்களும் அதுமாதிரிதான். எட்டு வருஷ எக்ஸ
  • Prakash: என்ன இது குட்டியா பதிவு போட்டுகிட்டு , ஃபுல் மீல்ஸா போடு
  • Chakra: இந்த தில்லாலங்கடி வேலை தெரிஞ்சு தான், அவங்க கேட்கும் போ

இதுவரை

  • 68,378 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

ஜனவரி 2009
தி செ பு வி வெ ஞா
« டிச   பெப் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031