மனம் போன போக்கில்

Archive for பெப்ரவரி 2009

தொடர்?

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 28, 2009

சென்ற வாரம் சென்னையில் ஒரு பத்திரிகை நண்பரைச் சந்தித்தபோது சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை எழுப்பினார்:
‘இன்றைய தமிழ் தினசரி, வார, மாதப் பத்திரிகைகள்ல, நீங்க தவறாம படிக்கிற, அடுத்த அத்தியாயம் எப்ப வருமோன்னு பதைபதைப்போட எதிர்பார்க்கிற, ஒருவேளை தவறவிட்டுட்டா மனம் வருத்தப்படறமாதிரி தொடர் கதை அல்லது தொடர் பகுதி (Non-fiction Series) ஏதாவது இருக்கா?’
அவர் கேட்டுவிட்டாரே என்பதற்காக எவ்வளவோ யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம், எதுவும் தோன்றவில்லை. நேர்மையாக அன்றி, சும்மா பாவ்லாவுக்காகக்கூட ஒரு பதில் சொல்லமுடியவில்லை.
உங்களுக்கு எப்படி?
***
என். சொக்கன் [...]

சிம்ம வம்சம்

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 28, 2009

இலங்கையில் ஓர் அரசன். அவனுக்கு இரண்டு மகன்கள்.
தன்னுடைய மகன்களுக்கு நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுக்க நினைத்த அரசன், ஐநூறு புத்த பிட்சுகளை அழைக்கிறான். அவர்களுக்கு நல்ல விருந்துச் சாப்பாடு போட்டு உபசரிக்கிறான்.
விருந்து முடிந்தபிறகு, பிட்சுக்கள் எல்லோரும் சாப்பிட்டு மீதி இருக்கும் உணவை அரசன் மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறான். அதைத் தனித்தனி தட்டுகளில் வைத்துவிட்டு, தன் மகன்களை அழைக்கிறான்.
’கண்ணுங்களா, நம்ம குடும்பத்தை, குலத்தைப் பாதுகாக்கிறவர்கள் இந்த பிட்சுகள்தான். அவர்களை எப்போதும் மறக்கமாட்டோம்-ங்கற நினைப்போட இந்த முதல் தட்டில் உள்ள [...]

ரங்கநாதன் தேரு

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 23, 2009

நேற்றிலிருந்து ஒரு வாரம் சென்னையில் ஜாகை. வழக்கம்போல் ’ட்ரெய்னிங்’தான், வேறென்ன?
ஞாயிற்றுக் கிழமை காலை செம டென்ஷனுக்கு நடுவே சதாப்தி எக்ஸ்பிரஸைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். முதல் இரண்டு மணி நேரம் படு வேகம், அடுத்த மூன்று மணி நேரம் ஆமை வேகம் என்று சதாப்தி செம போர்.
ரயிலில்மட்டுமில்லை, அதன்பிறகு ஹோட்டல் அறையிலும் நாள்முழுக்கச் சும்மா உட்கார்ந்திருந்ததில் வெறுத்துப் போனேன். மாலை நேரத்தில் எங்காவது உலாத்தலாமே என்று வெளியே வந்து, தி. நகரின் உலகப் புகழ் (?) [...]

தினசரி ஐம்பது ரூபாய்

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 18, 2009

எங்கள் அடுக்ககத்தில் (அபார்ட்மென்ட்) மொத்தம் எட்டே வீடுகள்.
தரைத் தளத்தில் ஒன்று, மூன்றாவது மாடியில் ஒன்று, இடையில் உள்ள இரு மாடிகளிலும் தலா மூன்று. ஆகமொத்தம் எட்டு வீடுகள். நாங்கள் இருப்பது முதல் மாடியில்.
இப்படி ஒரு ‘சிறிய’ அபார்ட்மென்டில் இருப்பது பலவிதங்களில் வசதி. கிட்டத்தட்ட தனி வீட்டின் சவுகர்யம் உண்டு, அதைவிடக் கூடுதல் பாதுகாப்பு.  அதேசமயம், நூறு, இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்ககங்களில் பக்கத்து, எதிர் வீட்டுக்காரர்களின் பெயரோ முகமோகூடத் தெரிந்துகொள்ளாமல் ஒரே வளாகத்தினுள் பல வருடங்கள் வாழ்ந்துவிடுவது [...]

’அண்ணா’ந்து பார்

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 17, 2009

திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய அண்ணா நூற்றாண்டு இலக்கியப் போட்டிகளில் நான் எழுதிய   ‘அண்ணாந்து பார்’ (அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு) நூல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
’அண்ணா’ந்துபார் உள்பட, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஏழு நூல்கள் இந்தப் பரிசுக்குத் தேர்வாகியுள்ளன. முழுப் பட்டியல் இங்கே: http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_17.html
கூடுதல் விவரங்கள், புத்தகம் வாங்க:
http://nhm.in/shop/978-81-8368-006-6.html
http://www.amazon.com/Annandhu-Paar-Tamil-Mr-Chokkan/dp/8183680062/ref=sr_1_5?ie=UTF8&s=books&qid=1234843714&sr=1-5
***
என். சொக்கன் …
17 02 2009

மகாராணியின் ரயில் வண்டி

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 17, 2009

சென்ற வார இறுதியில் திடீர்ப் பயணமாக மைசூர் கிளம்பினோம்.
இந்த இடங்களையெல்லாம் பார்த்தாகவேண்டும் என்பதுபோல் எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் ‘சும்மா சுற்றிவிட்டு வரலாமே’ என்று புறப்பட்டது. ஆகவே டென்ஷனின்றி நிம்மதியாகப் போய்த் திரும்ப முடிந்தது.
பெங்களூர் மைசூர் புதிய நெடுஞ்சாலை வெண்ணெயாய் வழுக்குகிறது. அதில் பாய்ந்து செல்கிற வாகனங்களும் காலை வெய்யிலில் புத்தம்புதுசுபோல் பளபளக்கின்றன.
ஆனால், சாலையோரங்கள்? ஒரு சூப்பர் மார்க்கெட்டை விலைக்கு வாங்கி, அதில் இருக்கும் பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாகத் தின்றுவிட்டு வீசி எறிந்துகொண்டே நடந்து போனால் எப்படி இருக்கும்? அதுபோல [...]

விசுவாசம்

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 16, 2009

இந்தப் பதிவில் எழுதிய மலையாள மனோரமா – கள்ளுக்கடை சம்பவம், இந்த வார(22/02/09)க் கல்கியில் ‘விசுவாசம்’ என்கிற சிறுகதையாக வெளியாகியிருக்கிறது – ஒருசில ‘மசாலா’ மாற்றங்களுடன்
வாய்ப்புள்ளவர்கள் வாசித்துக் கருத்துச் சொல்லவும். நன்றிகள்!

***
என். சொக்கன் …
26 02 2009

கண்ணுக்குத் தெரியாத ஒரு குழந்தை

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 13, 2009

சென்ற புதன்கிழமை, (பெங்களூரு) ஜெயநகரில் உன்னி கிருஷ்ணன் கச்சேரி.
ஆறு மணிக்கு ஆரம்பமாகவேண்டிய கச்சேரியைப் பத்து நிமிடம் முன்னதாகவே தொடங்கிவிட்டார் உன்னி. ஆனால் ஒலி ஏற்பாடுகள் அநியாயத்துக்குச் சொதப்பியதால், பத்து நிமிடம் அவரை வெறுமனே சிரித்துக்கொண்டு மேடையில் உட்காரவைத்துவிட்டு ‘ஹலோ மைக் டெஸ்டிங், ஒன், டூ, த்ரீ’ என்று எல்லோருடைய பொறுமையையும் சோதித்தார்கள்.
உன்னி கிருஷ்ணன் ஜம்மென்று ஜிப்பா போட்டுக்கொண்டு, பெயருக்கு ஏற்ற சின்னக் கண்களால் எல்லோரையும் உன்னித்துக்கொண்டிருந்தார். அவருடைய மைக்கிற்குமுன்னால் வெள்ளைவெளேர் ஸ்டாண்டில் ஓர் ஐபாட் கம்பீரமாக உட்கார்ந்திருந்தது [...]

சார், ஒரு காபி குடிக்கறீங்களா?

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 11, 2009

இரண்டு வாரம் முன்னால் நடந்த கூத்து இது.
வழக்கம்போல், எங்கள் அலுவலகத்துக்கு ஒரு புதுப் பிரமுகர் வந்திருந்தார். பெருந்தலைகள் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தன, ‘மீட் மிஸ்டர் ….., இவங்க கம்பெனிதான் அமெரிக்காவிலே காபிக்கொட்டை விக்கறதில நம்பர் 1’
இதுபோன்ற அலட்டல் அறிமுகங்களைக் கேட்டு வாய் பிளப்பதை நாங்கள் எப்போதோ நிறுத்திக்கொண்டாகிவிட்டது. எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் ’நம்பர் 1’தான்.
தவிர, வருகிறவன் காப்பி தயாரிக்கிறானா, பீப்பி தயாரிக்கிறானா என்பதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்களுக்கு என்ன தேவை, அதைமட்டும் கேட்டு ஒழுங்காகச் செய்து [...]

இசை எனும் கலை

Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 8, 2009

நண்பர் நெப்போலியன் (http://www.neps.in) இணைய தளத்திலிருந்து ஒரு செய்தி.
நம் ஊரில் இசை ரசிகர்கள் நிறைய. ஆனால் இசை எனும் கலையை, அதன் நுணுக்கங்களை நாம் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பது கொஞ்சம் சந்தேகம்தான், ‘கேட்க நல்லா இருக்கு, அது போதும்’ என்கிற அளவில் என்னைப்போன்றோரின் இசை விருப்பங்கள் நின்றுவிடுகின்றன.
ரசிக்கவும் சரி, இசைக்கவும் சரி, அந்தக் கலைபற்றிய ஓர் அடிப்படைப் புரிதல் தேவைப்படுகிறது. ஆனால் அதை யார் நமக்குச் சொல்லித்தருவார்கள்? வெளிப்படையாகக் கேட்டால் மற்றவர்கள் சிரிப்பார்களோ, கேலி செய்வார்களோ [...]


ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்

இதுவரை

  • 72,652 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

பெப்ரவரி 2009
தி செ பு வி வெ ஞா
« Jan   மார் »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728