Posted by: என். சொக்கன் on: பெப்ரவரி 28, 2009
சென்ற வாரம் சென்னையில் ஒரு பத்திரிகை நண்பரைச் சந்தித்தபோது சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை எழுப்பினார்:
‘இன்றைய தமிழ் தினசரி, வார, மாதப் பத்திரிகைகள்ல, நீங்க தவறாம படிக்கிற, அடுத்த அத்தியாயம் எப்ப வருமோன்னு பதைபதைப்போட எதிர்பார்க்கிற, ஒருவேளை தவறவிட்டுட்டா மனம் வருத்தப்படறமாதிரி தொடர் கதை அல்லது தொடர் பகுதி (Non-fiction Series) ஏதாவது இருக்கா?’
அவர் கேட்டுவிட்டாரே என்பதற்காக எவ்வளவோ யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம், எதுவும் தோன்றவில்லை. நேர்மையாக அன்றி, சும்மா பாவ்லாவுக்காகக்கூட ஒரு பதில் சொல்லமுடியவில்லை.
உங்களுக்கு எப்படி?
***
என். சொக்கன் …
28 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
Offcourse ..Pa Ragavan Yutham Saranam is belongs to this … for me.
அய்யோ வந்திடுச்சே என்று எல்லோரும் பதைபதைக்கும் தொடர் ஒன்று எனக்கு மிக நெருங்கிய ஒரு எழுத்தாளர் எழுதுகிறார்.
அவர் பெயரை நான் சொல்லப்போவதில்லை. வேண்டுமானால் சிலபல க்ளூக்கள் தருகிறேன்.
1. தொடர் வலையில் வருகிறது.
2. தொடர் 27 வருடங்கள் வரப் போகிறது (இன்ஷா அல்லா, கிருஷ்ணா, ஜீஸஸ்)
3. இதுவரை இரண்டுதான் வந்திருக்கிறது; இன்னும் 998 வரப்போகிறது
4. படித்தவர்கள் எல்லோரும் ஒரு மனதாக மகத்தான கழுத்தறுப்பு என்று பாராட்டுகிறார்கள் (சன் டிவி டாப்டென் வலைத்தொடர் என்று ஒன்றிருந்தால் இந்த தொடரை வாங்கி முதல் நம்பரில் போடுவார்கள் என்றால் புரிந்து கொள்ளுங்கள்).
5. சில பேர் “அய்யோ கொல பண்றாம்பா” என்று கூக்குரல் இடுகிறார்கள்.
6. தொடரின் பெயர் “படித்ததும் பிடித்ததும்” – இன்னும் 27 வருடம் தொடரப் போகும் மகா மெகா தொடர்
இத்தனை க்ளூக்களுக்கும் பிறகு கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக – கடைசி க்ளு – எழுதுபவர் பெயர் – ச வில் ஆரம்பித்து தி யில் முடியும், பெயரின் முதல் பாதிக்கு உண்மை என்று அர்த்தம் வரும், இரண்டாவது பாதிக்கு நீங்கள் உருவம் கொடுங்கள்!
1 | jaggybala
மார்ச் 2, 2009 இல் 12:08 பிற்பகல்
அடுத்த பகுதியை பதைபதைப்புடன் எதிர்பார்க்கும் தொடர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாஞ்சில் நாடனின் ‘தீதும் நன்றும்’ தொடர் பகுதி தமிழ்ச்சுவையுடனும் சமூகச்சிந்தனையுடனும் உள்ளது.