மனம் போன போக்கில்

Archive for மார்ச் 2009

விலை

Posted by: என். சொக்கன் on: மார்ச் 31, 2009

நேற்று வழக்கமான மாலை நடை நேரம். காதில் ஓர் ஆடியோ புத்தகத்தை மாட்டிக்கொண்டு தினசரிப் பாதையில் போய்க்கொண்டிருந்தபோது யாரோ என்னைக் கை தட்டிக் கூப்பிட்டார்கள். பெங்களூரில் பொதுவாக யாரும் யாரையும் கை தட்டி அழைக்கிற பழக்கம் இல்லை. ஆகவே கொஞ்சம் ஆச்சர்யத்துடன்தான் திரும்பிப் பார்த்தேன். இன்னொரு ஆச்சர்யமான விஷயம், நாராசமான போக்குவரத்து ஒலியைத் தடுப்பதற்காகவே காதுகளில் சத்தமாக எம்பி3 திரை போட்டுக்கொள்வது என்னுடைய வழக்கம். அதையும் மீறி இவர் என்னுடைய கவனத்தைக் கவர்ந்துவிட்டார் என்றால், அவரது கை [...]

வாகனங்கள்

Posted by: என். சொக்கன் on: மார்ச் 26, 2009

நாங்கள் ஹைதராபாதில் தங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரம். அப்போது எங்களுடன் புதுச் சிநேகிதமாகியிருந்த ஒருவன், ஹரி (வழக்கம்போல், நிஜப் பெயரை மாற்றியிருக்கிறேன்). ஹரிக்குச் சொந்த ஊர் கட்ப்பாடி. வேலூர் அருகில் உள்ள ‘காட்பாடி’ இல்லை. ஆங்கிலத்தில் அதே ஸ்பெல்லிங் (Katpadi), ஆனால் இது வேறு ஊர். கர்நாடகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் குக்கிராமமாகிய கட்ப்பாடியை ஹரிக்கு அதிகம் நினைவில்லை. காரணம், அவன் பிறந்து சில  மாதங்களுக்குள் அவனுடைய குடும்பம் மொத்தமும் சென்னைக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துவிட்டது. திருநெல்வேலியில் [...]

’கட்’டடிப்போர் கவனத்துக்கு

Posted by: என். சொக்கன் on: மார்ச் 23, 2009

(முன்குறிப்பு: இது கதை இல்லை, முழு உண்மையும் இல்லை, இதே அரக்கு வண்ணத்தில் இருக்கும் அந்தக் கடைசிப் பகுதிதவிர, மற்றதெல்லாம் இன்று மாலை நிஜமாகவே நடந்தது. சும்மா சுவாரஸ்யத்துக்காகக் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனையைக் கலந்தேன் ) ’உங்களில் எத்தனை பேருக்குத் திருமணமாகிவிட்டது?’, மேடையில் இருந்தவர் கணீர் குரலில் கேட்டார். அந்த அரங்கில் இருந்த பாதிப் பேர் கை தூக்கினார்கள். ’சரி, இதில் எத்தனை பேருக்குக் குழந்தைகள் உண்டு?’ சட்டென்று பாதிப் பேரின் கைகள் கீழே இறங்கின. [...]

தானியங்கிக் குப்பை(த் தொட்டி)

Posted by: என். சொக்கன் on: மார்ச் 23, 2009

வார இறுதிகளில் ஏதேனும் ‘ஷாப்பிங் மால்’களுக்குச் செல்கிறபோதெல்லாம், நான்  எதையேனும் வாங்குகிறேனோ இல்லையோ, புதிதாக என்னென்ன பொருள்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன என்பதைக் கூர்ந்து கவனிப்பது வழக்கம். காரணம், இன்றைய பெருநகர வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு ’ஷாப்பிங் மால்’கள்தான் ஒரே வழி. நகரவாழ் மக்களின் ஆசைகள், விருப்பங்கள், கோபங்கள், பொறாமைகள், சோம்பேறித்தனங்கள், இயலாமைகள், ஏக்கங்கள் என சகலத்தையும் வெளிப்படுத்தக்கூடிய, பூர்த்தி செய்யக்கூடிய பொருள்கள் இங்கே அரங்கேறுகின்றன. இந்தப் பொருள்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு நமக்குத் தேவைப்படாது. ஆனால் இதையும் காசு கொடுத்து [...]

யார் முட்டாள்?

Posted by: என். சொக்கன் on: மார்ச் 19, 2009

இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை. கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக [...]

குருக்களின் டயரி

Posted by: என். சொக்கன் on: மார்ச் 17, 2009

சில மாதங்களுக்குமுன்னால் ஒரு மாலை, நங்கையுடன் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது செல்பேசி மணி ஒலித்தது. என்னுடைய மிகப் பெரிய கெட்ட பழக்கம், தொலைபேசி மணி ஒலித்தால் போச்சு. அந்த விநாடியில் நான் எப்பேர்ப்பட்ட வேலையில் இருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு ஃபோனை எடுக்கவேண்டும் என்று தோன்றும். மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சும்மா இருந்தாலும்கூட கை நடுங்கும், என்ன விஷயமோ, என்ன அவசரமோ என்று பதைபதைக்கும். விஷயம் அவ்வளவு முக்கியம் என்றால் அவர்களே மறுபடி அழைப்பார்கள், பின்னால் பேசிக்கொள்ளலாம் என்று தோன்றாது. [...]

அல்வாத் துண்டு

Posted by: என். சொக்கன் on: மார்ச் 9, 2009

டர்கிஷ் அல்வா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெங்களூரில் ‘ப்ளூ பெல்’ என்ற இனிப்புக் கடையில் கிடைக்கும் விசேஷ சமாசாரம் அது. கிட்டத்தட்ட ரோஸ் மில்க் சுவையில், கெட்டியான சச்சதுரத் துண்டுகளாக மனத்தை மயக்கும். இந்த டர்கிஷ் அல்வாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது, என் மனைவியின் சகோதரர் ராம் குமார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் டப்பா டப்பாவாக அல்வா கொடுத்து, சீக்கிரத்தில் நாங்களும் அந்தச் சுவைக்கு அடிமையாகிவிட்டோம். ரொம்ப நாளைக்கு, அந்த அல்வாவின் பெயர்க் காரணமே எங்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. நிஜமாகவே [...]

நல்ல மனத்துக்காரர்கள்

Posted by: என். சொக்கன் on: மார்ச் 4, 2009

எங்கள் வீட்டில் ஒரு கார் இருக்கிறது, கம்பெனியில் கொடுத்தது. ஆனால் நான் இன்னும் அதனை ஓட்டப் பழகவில்லை. ஒருமுறை கார் ஓட்டும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பத்து நாள் செம மொக்கை போட்டபிறகு, லைசென்ஸ் பரீட்சைக்குப் போனேன். அங்கே நான் சந்தித்த ’வரலாறு காணாத தோல்வி’யைப்பற்றி இன்னொரு நாள் விவரமாக எழுதப்பார்க்கிறேன். இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு. கார் ஓட்டுவதற்கான தகுதியோ திறமையோ எனக்குச் சுத்தமாக இல்லாததால், என்றைக்காவது வெளியே ஷாப்பிங், பிக்னிக் அல்லது [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 101 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 183,725 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

மார்ச் 2009
தி செ பு வி வெ ஞா
« Feb   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Follow

Get every new post delivered to your Inbox.

Join 101 other followers