மனம் போன போக்கில்

Archive for செப்டம்பர் 2009

ஓர் ஆச்சர்யம், ஒரு கேள்வி

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 29, 2009

நேற்று நங்கையைக் கூட்டிக்கொண்டு ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். வழியில் தென்பட்ட எல்லாப் பொருள்களைப்பற்றியும் நிமிடத்துக்கு ஏழெட்டு கேள்விகள் என்கிற விகிதத்தில் கேட்டபடி நடந்துவந்தாள், பதில்களை எதிர்பார்க்கக்கூட இல்லை.
கடையில் நாங்கள் வாங்கிய பொருள்களின் மொத்த விலை 56 ரூபாய் ஆனது. நான் அறுபது ரூபாய் கொடுத்தேன்.
‘ஒர் ரூவா சில்லறை கொடுங்க சார்’
பர்ஸுக்குள் தேடினேன். ஒற்றை நாணயம் எதுவும் அகப்படவில்லை, ‘இல்லைங்களே’
‘சரி, அப்ப நாலு ரூபாய்க்கு ஏதாச்சும் வாங்கிக்கோங்க’
‘ஓகே, ஏதாவது சாக்லெட் கொடுங்களேன்’
‘ம்ஹூம்’ என்று மறுத்துவிட்டார் அவர், ‘எங்க கடையில [...]

சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆஹா எஃப்.எம்.மில் ஒலிபரப்பான கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் எனது ‘அம்பானி: ஒரு வெற்றிக் கதை’ புத்தகத்தைப்பற்றிய உரையாடல் இடம்பெற்றது. அதைப்பற்றி ஏற்கெனவே எழுதியிருந்தேன்.
ஆனால் கடைசி நேரத்தில் loka.fm இணைய தளம் செம சொதப்பல், ஆகவே, சென்னைக்கு வெளியில் யாரும் இதைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை!
’நல்லவேளை’ என்று சந்தோஷப்படாதீர்கள், அவ்ளோ சீக்கிரம் விட்றுவோமா?
ஆர்வம் உள்ளவர்கள், பத்ரி சேஷாத்ரி இணைய தளத்திலிருந்து இதை டவுன்லோட் செய்துகொள்ளலாம், அதற்கான இணைப்பு இங்கே:
http://thoughtsintamil.blogspot.com/2009/09/9.html
***
என். சொக்கன் …
24 09 2009

நேவித்யம் (ம்ஹூம், தப்பு – நைவேத்யம்)

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 20, 2009

சென்ற வாரம், சென்னையிலிருந்து ஒரு தோழி / குடும்ப நண்பர் வந்திருந்தார்.
அவர் கிளம்பும்போது, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, வளையல், பொட்டு, தேங்காய், இன்னும் என்னென்னவோ தாம்பூலமாக வைத்துக் கொடுத்தார் என் மனைவி. அவர் அவசரமாக அதைக் கைப்பையில் கொட்டிக்கொண்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுவிட்டார்.
சில மணி நேரம் கழித்து, அவர் சென்னை சென்று இறங்கியபிறகு நாங்கள் அவரைத் தொலைபேசியில் அழைத்தோம், ‘என்னங்க, சவுகர்யமாப் போய்ச் சேர்ந்தீங்களா?’
‘ஓ’ என்றவர் கொஞ்சம் தயங்கினார், ‘உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே’
‘என்னது?’
‘சொன்னா சிரிக்கக்கூடாது’
‘இதில [...]

நாளை (20 செப்டம்பர் 2009, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது “அம்பானி: ஒரு வெற்றிக் கதை” புத்தகம்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

சுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, திருபாய் அம்பானியின் ஆரம்ப கால வாழ்க்கை தொடங்கி, அவரது மகன்களுக்கு இடையிலான வாரிசுச் சண்டைவரை பல விஷயங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். நிகழ்ச்சியின் இடையே, புத்தகத்திலிருந்து சில முக்கியமான பகுதிகளை ஒலி வடிவத்திலும் கேட்கலாம்.
ஆஹா FM சென்னையில்மட்டும்தான் ஒலிபரப்பாகிறது. இணையத்தில் கேட்க [...]

போஸ்டர் காணீரோ – 1

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 16, 2009

’தலையெழுத்து’ என்பது இதுதானா?
(பெங்களூர் – ஜெயநகரில் ஒரு பேருந்து நிறுத்தம்: 14 09 2009)

***
என். சொக்கன் …
16 09 2009

‘ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்’ நூல் விமர்சனம்

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 16, 2009

எனது ‘ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்’ புத்தகத்தின் விமர்சனம்: ’சுவாசிகா’ தளத்திலிருந்து:

வெற்றி கதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகள் எழுதுவதற்கு ISAS(Information Search and Analysis Skills) மிகவும் அவசியம் என்று என்னுடைய கருத்து. அதாவது

ஒரு தலைப்பை பற்றிய விவரங்களை பல விதமான sourceகளில் இருந்து திட்டமிட்டு தேடுதல்
தேடிய தகவல்களை ஆராய்தல்
ஆராய்ந்த தகவல்களை வகைபடுத்துதல்
முக்கியமான/அவசியமான தகவல்களை முன்படுத்தி மற்றவைகளை விலக்குதல் அல்லது அவைகளை வேறு பொதுவான இடத்தில் தொகுத்தல்

முழுவதும் படிக்க: http://swachika.wordpress.com/2009/09/11/ஏ-ஆர்-ரஹ்மான்-என்-சொக்கன்/
புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: [...]

பாரதி நினைவு நாள் (செப்டம்பர் 11)

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 11, 2009

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு ந‌ல்ல‌து வேண்டும்
நெருங்கின‌ பொருள் கைப்பட‌வேண்டும்
க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்
கைவ‌ச‌ம் ஆவ‌து விரைவில் வேண்டும்
த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்
த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்!
க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்!
மண் ப‌ய‌னுற‌ வேண்டும்,
வான‌க‌ம் இங்கு தென்ப‌ட‌ வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும்
ஓம், ஓம், ஓம், ஓம்!

ஊதல் வைபோகமே

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 5, 2009

ஒருவழியாக, கேக் பிரச்னை தீர்ந்தது. அடுத்து, பலூன் ஊதும் வைபவம்.
பர்த்டே பார்ட்டி என்றாலே, மேலும் கீழும் இடமும் வலமும் முன்னும் பின்னும் பல வண்ண பலூன்கள் ஆடிக்கொண்டிருக்கவேண்டும் என்பது நவீன மரபு. சில இடங்களில் வாசல் வரவேற்பு வளையத்தையே பலூன் சரங்களாக அமைத்து அசத்துவார்கள். கூரை, ஜன்னல்கள், மாடிப்படியின் கைப்பிடி விளிம்புகள், மேஜை, நாற்காலிகளின் கால்களில்கூட பலூன்கள் இரண்டு, மூன்றாகச் சேர்த்துப் பூ வடிவத்தில் கட்டிவிடப்பட்டிருக்கும்.
இந்தப் பலூன்களெல்லாம், அந்தந்த விழாக்களுக்கு வருகிற குழந்தைகளுக்குதான். அவர்கள் தங்களுடைய பெற்றோரிடம் [...]

கேக்

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 2, 2009

இந்த வார இறுதியில், எங்கள் இரண்டாவது மகளுக்குப் (அவள் பெயர் மங்கை) பிறந்த நாள் வருகிறது. அதற்காகக் கேக் வாங்கப் போயிருந்தோம்.
தம்பிகள், தங்கைகளுக்கு விவரம் தெரியும்வரை, அவர்களுடைய பிறந்த நாள் கேக் வடிவம், சுவை சகலத்தையும் அவரவர் அக்காக்களோ, அண்ணன்களோதான் தீர்மானிப்பார்கள் என்பது உலக மரபு. இதில் அம்மா, அப்பாவுக்கு எந்தப் பங்கும் இருக்கமுடியாது, வீட்டு நலன், அமைதி கருதி அவர்களும் விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள்.
இதன்படி, மங்கையின் பிறந்த நாள் கேக் எப்படி இருக்கவேண்டும் என்று நங்கைதான் முடிவு செய்தாள், [...]


ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்

இதுவரை

  • 72,652 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

செப்டம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« ஆக   அக் »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930