மனம் போன போக்கில்

Archive for அக்டோபர் 2009

நடமாடும் சலூன்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 29, 2009

’அப்படியே தூக்கிட்டுப் போய் எங்க வேணும்ன்னாலும் வெச்சு வெட்டலாம்-ங்க’ என்றார் கடைக்காரர் – தலைமுடியைதான் சொல்லியிருப்பார் என நம்புகிறேன்.
(பெங்களூர் – 25 அக்டோபர் 2009 – மாலை 4:16)

***
என். சொக்கன் …
29 10 2009

அர்த்த(மில்லாத) ஜாமம்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 28, 2009

நேற்று இரவு (அல்லது அதிஅதிகாலை) இரண்டு பதினெட்டுக்கு எனக்கு ஓர் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்தது:
நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்ம சத்யமூர்த்திக்கு மகன் பிறந்திருக்கிறான். தாய், சேய் நலம். இப்படிக்கு, மனோஜ்குமார்
சத்யமூர்த்தி, மனோஜ்குமார் இருவரும் நல்ல நண்பர்கள், எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியர்கள்.
மனோஜ்குமாரின் எஸ்.எம்.எஸ். வந்தபோது நான் செம தூக்கத்தில் இருந்தேன். ஆனாலும் அந்த ‘டொய்ங் டொய்ங்’ சத்தத்தில் விழிப்பு வந்துவிட்டது. மப்பு கலையாமலே தலைமாட்டில் இருக்கும் செல்ஃபோனை இயக்கிச் செய்தியைப் படித்தேன், சந்தோஷம்.
அதோடு, [...]

ஏழாவது அவதாரம்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 16, 2009

நான் எழுதிய Infosys நாராயணமூர்த்தி வாழ்க்கை வரலாறு தற்போது ஹிந்தியில் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்தவர்: மகேஷ் ஷர்மா. வெளியீடு: பிரபாத் பிரகாஷன் (நியூ ஹொரைசான் மீடியா வழியாக), டெல்லி. விலை: ரூ 200/-

’நாராயண’மூர்த்தி என்று பெயர் வைத்ததால்தானோ என்னவோ, ஏற்கெனவே இந்தப் புத்தகம் தமிழில் மூன்று, ஆங்கிலத்தில் இரண்டு, மலையாளத்தில் ஒன்று என ஐந்து ஆறு அவதாரங்கள் எடுத்திருக்கிறது. இப்போது ஏழாவதாக ஹிந்தி அவதாரம். இன்னும் மூன்றுதான் பாக்கி
… …
… [...]

ஊரைக் கெடுத்தவர்கள் யார்?

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 11, 2009

சென்ற வாரம் மும்பையில் அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.
’நான் குடியிருக்கிற வீட்டு ஓனருக்கு என்மேல பயங்கர கோவம்’
’ஏன், என்னாச்சு? வாடகை பாக்கி வெச்சுட்டீங்களோ?’
‘அதெல்லாம் இல்லை, எங்க வீட்ல ஒரு குழாய் ரிப்பேர், ப்ளம்பரைக் கூட்டிவந்து ரிப்பேர் செஞ்சேன்’
’இதுக்குப்போய் யாராச்சும் கோவப்படுவாங்களா?’
’கோவம் அதுக்கில்ல, ரிப்பேரைச் சரி செஞ்சதுக்கு அந்த ப்ளம்பர் நூத்தம்பது ரூபாய் கேட்டார், கொடுத்தேன், அதுதான் எங்க ஓனருக்குப் பிடிக்கலை’
‘ஏன்? உங்க காசைத்தானே கொடுத்தீங்க?’
‘ஆமாம், ஆனா இனிமே இந்த வீட்ல எந்தக் குழாய் [...]

தாண்டிச் சென்ற பஸ்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 1, 2009

அலுவல் நிமித்தம் மும்பை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்கேதான் ஜாகை.
பெங்களூரிலிருந்து விமானத்தில் மும்பை வருவதற்கு ஒன்றரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று சேர்வதற்குச் சுத்தமாக இரண்டே கால் மணி நேரம்.
நேற்று மாலை, நானும் என் அலுவலக நண்பரும் விமான நிலையம் செல்கிற பேருந்துக்காகக் காத்திருந்தோம். சுவாரஸ்யமான அரட்டையில் நேரம் ஓடியதே தெரியவில்லை.
ஐந்தே முக்கால் மணிவாக்கில், எதேச்சையாக அவர் கடிகாரத்தைப் பார்த்தார், ‘யோவ், ரொம்ப லேட் ஆயிடுச்சுய்யா, [...]


ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்

இதுவரை

  • 70,448 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

அக்டோபர் 2009
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031