மனம் போன போக்கில்

Archive for ஜனவரி 2010

இருவிழாக் குறிப்புகள்

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 23, 2010

இந்த வாரம் சேலத்தில் ஒன்று பெங்களூரில் ஒன்று என இரண்டு விழாக்களுக்குச் சென்றிருந்தேன். முதலாவது வீட்டு விசேஷம், இன்னொன்று நண்பர் திருமணம். சேலம் விழாவில் பல உறவினர்களை ‘ரொம்ப-நாள்-கழித்து’ப் பார்க்கமுடிந்தது. பாதிப் பேரை எனக்கு அடையாளம் தெரியவில்லை, மீதிப் பேருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எதற்கு வம்பு என்று எல்லோரும் ஒரேமாதிரியாகச் சிரித்து மகிழ்ந்துவைத்தோம். குடும்ப அமைப்பு வாழ்க! என் தம்பி ஒரு ‘touch screen’ மொபைல் வாங்கியிருக்கிறான். இதுமாதிரி மொபைல்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போதுதான் [...]

பொங்கலோ பொங்கல்!

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 14, 2010

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் (புகைப்படங்களில் உள்ளது எங்கள் வாசல் கோலம், இதைத்தான் பதிவில் சேர்க்கவேண்டும் என்று நங்கையின் கட்டளை!) *** என். சொக்கன் … 14 01 2010

தாமதம்

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 11, 2010

சென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார். வழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் [...]

நாளை (10 ஜனவரி 2010, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ”பெப்ஸி” மற்றும் “கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு” நூல்களைப்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. சுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, பெப்ஸி, கோக் நிறுவனங்களின் சரித்திரம், சண்டை, Colawars  உள்ளிட்ட பல விஷயங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். கோலா விளம்பரங்களைப்பற்றி விளம்பரத்துறை நிபுணர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் பேட்டியும் நடுவே இடம்பெறும். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்: சித்ரா. [...]

எனது ‘பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்’ புத்தகத்தின் விமர்சனம்: செந்தில் குமரன் வலைதளத்திலிருந்து: நான் கட்டற்ற மென்பொருள் மற்றும் ரிச்சர்ட் ஸ்டால்மேனின் தீவிர விசிறி, பின்பு ஏன் பில் கேட்ஸைப் பற்றி படிக்க வேண்டும்? “See both sides of the coin”  என்ற பிரபல வாக்கியம் தான் இதற்கு காரணம். இந்த புத்தகம் அதற்கான சிறந்த கருவி, ஏனெனில், இந்த புத்தகம் பில் கேட்ஸை ஒரு தராசில் நிறுத்தி, தேவையான அளவு தெளிவாக இரண்டு பக்கங்களையும் [...]

முதல் போணி

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 1, 2010

இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன். அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 109 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 196,103 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

ஜனவரி 2010
தி செ பு வி வெ ஞா
« Dec   Feb »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Follow

Get every new post delivered to your Inbox.

Join 109 other followers