மனம் போன போக்கில்

Archive for April 2010

சாரல்

Posted by: என். சொக்கன் on: April 25, 2010

இப்போதெல்லாம் பெங்களூரில் தினசரி மழை பெய்கிறது. அதுவும் சாதாரண மழை இல்லை. கன மழை, ஆலங்கட்டி மழை. இந்த ஆலங்கட்டி மழையை நான் நேரில் பார்த்தது கிடையாது. பெங்களூரில் அது பெய்வதாக ஒரு நண்பர் ட்விட்டரில் சொல்ல, ஆவலுடன் அலுவலக ஜன்னல்களைத் திறந்து பார்த்தேன், வெறும் மழைதான் காணக் கிடைத்தது. கொஞ்சம் எக்கித் தேடினால் தற்கொலை நோக்கமோ என்று சந்தேகப்படுவார்கள், அல்லது ‘ஏஸி டிஸ்டர்ப் ஆகுது, ஜன்னலை மூடுய்யா’ என்று கண்டனம் எழும். ஏன் வம்பு? மூடிவிட்டேன். [...]

”KGB: அடி, அல்லது அழி” நூல் விமர்சனம்

Posted by: என். சொக்கன் on: April 22, 2010

எனது “KGB: அடி, அல்லது அழி” புத்தகத்தின் விமர்சனம்: ’ரோமியோ’ வலைதளத்திலிருந்து: KGBக்கு முன்னால் இருந்த மற்ற உளவு நிறுவனங்களை பற்றி அலசி, ஆராய்ந்து எழுதுவதிலேயே முக்கால்வாசி பக்கங்கள் முடிந்துவிடுகிறது. உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளின் பட்டியல், அவர்களின் நோக்கம், அரசுக்கு சாதகமாகவும், எதிரிகளுக்கு பாதகமாகவும் செயல்பட்டது, இத்யாதி இத்யாதி என்று எழுதியதைப் பாதி பக்கங்கள் படித்துத் தாண்டுவதற்குள் கொட்டாவி வருவதை நிறுத்தமுடியவில்லை. உளவு நிறுவனத்தைப்பற்றி எழுதும்போது அவர்களின் சாகசங்களை அங்கே இங்கே என்று சொருகி இருந்தால் சுவாரசியம் கண்டிப்பாகக் [...]

டிஃபன் ரூம்

Posted by: என். சொக்கன் on: April 21, 2010

’பெங்களூர்ல பத்து வருஷமா இருக்கே, இன்னும் எம்.டி.ஆர். மசால் தோசை சாப்டதில்லையா? நீ வேஸ்ட்!’ இப்படிப் பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் உடனடியாக நாக்கில் நீர் ஊறும். பரபரவென்று ஓடிப்போய் ஏழெட்டு எம்.டி.ஆர். மசால் தோசைகளைக் கபளீகரம் செய்யவேண்டும் என்று கைகள், கால்கள் தினவெடுக்கும், இல்லாத மீசைகூடத் துடிப்பதுபோல் டென்ஷனாவேன். ஆனால் ஏனோ, எனக்கும் எம்.டி.ஆர். ஹோட்டல் மசால் தோசைக்கும் ஜாதகம் ஒத்துப்போகவில்லை. நான் (அல்லது நாங்கள்) அங்கே போகும்போதெல்லாம் மதிய உணவு நேரமாகவோ, [...]

பலவீனமாக மூன்று வகுப்புகள்

Posted by: என். சொக்கன் on: April 19, 2010

*** என். சொக்கன் … 19 04 2010

வணக்கம் போடும் துணி க்ளிப்புகள்

Posted by: என். சொக்கன் on: April 9, 2010

*** என். சொக்கன் … 09 04 2010

உதவி தேவை

Posted by: என். சொக்கன் on: April 7, 2010

நண்பர்காள், உங்களிடம் ஒரு சின்ன உதவி. என்னுடைய நண்பர் திரு. முத்துராமன் (நல்ல எழுத்தாளர், பத்திரிகையாளர், முன்பு ‘கிழக்கு’ பதிப்பகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். இப்போது ஒரு வார இதழில் பணிபுரிகிறார். ‘சதுரங்கக் குதிரைகள்’ என்பது இவருடைய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு) தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கடந்த நான்கைந்து மாதங்களாக நண்பர்கள் உதவியுடன் அவருக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை தொடர்ந்துவருகிறது. அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்குள் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை [...]

வாத்தியார்

Posted by: என். சொக்கன் on: April 7, 2010

பக்கத்து வீட்டில் ஒரு பையன். பெயர் அர்ஜுன் என்று வையுங்களேன். ஏப்ரல், மே கோடை விடுமுறையை முன்னிட்டு, அர்ஜுன் வீட்டுக்கு ஒரு வாத்தியார் தினமும் வருகிறாராம். காலை 8 டு 9 அவனுக்கு ஓவியம் வரையக் கற்றுத்தருகிறாராம். இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, நங்கை என்னை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள், ‘என்னையும் ட்ராயிங் க்ளாஸுக்கு அனுப்புப்பா, ப்ளீஸ்!’ ’யம்மாடி, உன்னை க்ளாஸுக்கு அனுப்பறது பிரச்னையே இல்லை. ஆனா, லீவ் நாள்ல காலையில ஒன்பது, ஒன்பதரைவரைக்கும் நீ எழுந்திருக்கமாட்டியே, நீ எப்படி எட்டு [...]

ஆயிஷா

Posted by: என். சொக்கன் on: April 5, 2010

மீடியாவில் சானியா மிர்ஸா – ஷோயப் மாலிக் – ஆயிஷா மும்முனைத் தாக்குதல் அதகளப்படுகிறது. அடுத்தவர் அந்தரங்கத்தில் எட்டிப்பார்ப்பதென்றால் நமக்கெல்லாம் எவ்ளோ சந்தோஷம்! எனக்கென்னவோ, ‘ஆயிஷா’ என்ற பேரை மீடியாவில் கேட்கக் கேட்க, இரா. நடராசன் எழுதிய ஓர் அற்புதமான குறுநாவல்தான் ஞாபகம் வருகிறது. கொஞ்சநேரம் இந்த வம்புதும்புகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, நம்முடைய கல்விமுறையில் இருக்கும் அபத்தங்களை அழுத்தமாகச் சொல்லும் இந்த ‘ஆயிஷா’வை வாசியுங்களேன் – ஆசிரியர் இரா. நடராசன் இணைய தளத்தில் இலவசமாகவே கிடைக்கிறது: தமிழ்: http://www.eranatarasan.com/download/AYEESHA_tamil.pdf [...]

ஆயா

Posted by: என். சொக்கன் on: April 5, 2010

நேற்றைக்குப் பூங்காவில் ஒரு விநோதமான ஜோடியைப் பார்த்தேன். இருவரும் கை கோர்த்துக்கொண்டு ஒன்றாகதான் உள்ளே நுழைந்தார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுக்கிடையிலான வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது. அந்தப் பெண்ணுக்கு வயது இருபத்தைந்து அல்லது முப்பது இருக்கலாம். கிராமத்து முகம், சற்றே உயர்த்திக் கட்டிய கண்டாங்கிச் சேலை, கையில் வயர் கூடை, கழுத்தில் மாட்டித் தொங்குகிற செல்ஃபோன் ஒன்றுதான் அவளிடம் நவீனமாகத் தென்பட்டது. அவளோடு வந்த பையனுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். கொழுகொழு தேகம், [...]

சுழல்

Posted by: என். சொக்கன் on: April 1, 2010

நேற்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது, ‘உன் பொண்ணரசிங்க இன்னிக்கு என்ன பண்ணாங்க தெரியுமா?’ ’என்னது?’ ’ரெண்டு பேருமாச் சேர்ந்து வாஷிங் மெஷின் ட்யூபைப் பிடுங்கி விட்டுட்டாளுங்க!’ ‘அதனால?’ சுவாரஸ்யமே இல்லாமல் கேட்டேன். அடுத்த வாக்கியத்தில் எனக்கு வெடிகுண்டு காத்திருப்பது அப்போது தெரியவில்லை. ‘பெட்ரூம்முழுக்கத் தண்ணி!’ பதறிப்போனேன், ‘கட்டில் என்ன ஆச்சு?’ கட்டில்மீது எனக்கு என்ன அக்கறை? ச்சீய், தப்பா நினைக்காதீர்கள். என் அக்கறை கட்டிலுக்குள் இருக்கும் புத்தகங்களைப்பற்றி. அந்தக் காலத்துக் கட்டில்களுக்கு நான்கு [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 101 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 183,725 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

April 2010
தி செ பு வி வெ ஞா
« மார்   மே »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Follow

Get every new post delivered to your Inbox.

Join 101 other followers