Posted by: என். சொக்கன் on: April 22, 2010

எனது “KGB: அடி, அல்லது அழி” புத்தகத்தின் விமர்சனம்: ’ரோமியோ’ வலைதளத்திலிருந்து:
KGBக்கு முன்னால் இருந்த மற்ற உளவு நிறுவனங்களை பற்றி அலசி, ஆராய்ந்து எழுதுவதிலேயே முக்கால்வாசி பக்கங்கள் முடிந்துவிடுகிறது. உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளின் பட்டியல், அவர்களின் நோக்கம், அரசுக்கு சாதகமாகவும், எதிரிகளுக்கு பாதகமாகவும் செயல்பட்டது, இத்யாதி இத்யாதி என்று எழுதியதைப் பாதி பக்கங்கள் படித்துத் தாண்டுவதற்குள் கொட்டாவி வருவதை நிறுத்தமுடியவில்லை.உளவு நிறுவனத்தைப்பற்றி எழுதும்போது அவர்களின் சாகசங்களை அங்கே இங்கே என்று சொருகி இருந்தால் சுவாரசியம் கண்டிப்பாகக் கூடி இருக்கும் .. பச், புத்தகத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.
விமர்சனம் + அறிமுகத்துக்கு நன்றி ரோமியோ. நீங்கள் சொல்லும் குறைகளை ஏற்கிறேன் – KGB எழுதும்போது புத்தகத்தின் அளவு காரணமாக அதை ஓர் அறிமுகம் என்பதோடுமட்டும் நிறுத்தவேண்டியிருந்தது. இப்போது எழுதிவரும் ‘கண்ணைப் பார், சிரி’ புத்தகத்தில் உலக உளவுத்துறை நிறுவனங்கள் அனைத்தின் முழுமையான சரித்திரத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறேன். அதில் கேஜிபி கில்லாடிகளின் விறுவிறுப்பான சாகசங்களையெல்லாம் தேவையான விகிதத்தில் சேர்த்துச் சரி செய்துவிடலாம்
இந்த விமர்சனத்தை முழுவதும் படிக்க: http://romeowrites.blogspot.com/2010/04/blog-post_22.html
”KGB: அடி, அல்லது அழி” புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-182-7.html
எனது மற்ற புத்தகங்கள்: http://nhm.in/shop/N.-Chokkan.html
***
என். சொக்கன் …
22 04 2010
2 | மணிவண்ணன்
April 23, 2010 இல் 4:03 மு.பகல்
ரிப்போட்டரில் வந்த்துதானே? ஏன் திடீரென நிறுத்திவிட்டீர்கள்? புத்தகத்தில் ரிப்போட்டரில் வந்ததிலும் பார்க்க கூட இருக்குமா?
3 | என். சொக்கன்
April 23, 2010 இல் 10:14 மு.பகல்
romeo, மணிவண்ணன்,
நன்றி
//ரிப்போட்டரில் வந்த்துதானே? ஏன் திடீரென நிறுத்திவிட்டீர்கள்?//
அதேதான். பத்திரிகைக் கட்டாயங்கள் வேறுவிதமானவை. எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கும் என்பது நிச்சயமில்லை. நிறுத்தச் சொல்லும்போது நிறுத்திக்கொள்ளவேண்டியதுதான்
//புத்தகத்தில் ரிப்போட்டரில் வந்ததிலும் பார்க்க கூட இருக்குமா//
ஆமாம் – அதுதான் இப்போது எழுதிக்கொண்டுள்ளேன்.
4 | Chakra
April 23, 2010 இல் 1:34 பிற்பகல்
தட்டச்சுப் பிழை சார்.
> கோண்டுவர முயற்சி செய்கிறேன் – கொண்டு வர
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Theme: Albeo by Design Disease.
1 | romeo
April 22, 2010 இல் 6:49 பிற்பகல்
\\கேஜிபி கில்லாடிகளின் விறுவிறுப்பான சாகசங்களையெல்லாம் தேவையான விகிதத்தில் சேர்த்துச் சரி செய்துவிடலாம்//
சூப்பர் .. புத்தகம் வந்ததும் தெரியப்படுத்தவும் சாகசங்களை படிப்பதற்கு ஆவலாக உள்ளேன் .