மனம் போன போக்கில்

Archive for அக்டோபர் 2010

வல்லினம், மெல்லினம், இடையினம்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 29, 2010

நம்முடைய ஊடகங்களில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறைபற்றி இரண்டுவிதமான பிம்பங்களே உள்ளன. ஒன்று, ‘இங்கே நுழைந்தால் லட்சங்களில் சம்பளம் அள்ளலாம், உலகைச் சுற்றிவரலாம், கோடிகளில் சேமித்து ’பில் கேட்ஸ்’ மாதிரியோ ‘சிவாஜி’ ரஜினிமாதிரியோ சமூக சேவை செய்யலாம். எட்ஸட்ரா எட்ஸட்ரா’. இன்னொன்று ‘ஐடில நுழைஞ்சுட்டா ராத்திரி, பகல் கிடையாது, பொண்டாட்டி, புள்ளயோட நேரம் செலவிடமுடியாது, கண்ணு கெட்டுப்போகும், தூக்கமில்லாம உடம்பு கெட்டுப்போகும், உட்கார்ந்த இடத்தில வேலை பார்க்கறதால முப்பது வயசுல ஹார்ட் அட்டாக் வரும், அப்புறம் மூச்சு [...]

விபத்து

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 23, 2010

சிவப்பு விளக்கு அணைந்து பச்சை ஒளிர்ந்தது. எங்கள் பஸ் வலதுபக்கம் திரும்பி வேகம் பிடிக்கத் தொடங்கிய மறுவிநாடி அந்தச் சத்தம் கேட்டது. முதலில் நான் முன்டயர் வெடித்துவிட்டதாகதான் நினைத்தேன். கவலையோடு ஜன்னலுக்கு வெளியே தலையை நுழைத்தபோது சரேலென்று படுக்கைவசத்தில் தரையோடு உராய்ந்துகொண்டு வழுக்குகிற பைக்கைப் பார்த்தேன். சென்ற விநாடிவரை அதை ஓட்டிக்கொண்டிருந்தவர் இப்போது நான்கடி தள்ளிக் கிடந்தார். அவர் தலையிலிருந்த ஹெல்மெட் கழன்று எகிறி வேறு எங்கோ விழுந்திருந்தது. நான் அவசரமாகத் தலையை உள்ளே இழுத்துக்கொண்டேன். பஸ்ஸிலிருந்த [...]

போஸ்ட் பாக்ஸ்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 18, 2010

’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’ தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன். சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’ ’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’ ’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’ ‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா  வருவோம். [...]

பேட்டி

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 8, 2010

இன்று மாலை 5:30 மணி(இந்திய நேரம்)க்குக் ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் ‘பணம் வரும் நேரம்’ நிகழ்ச்சியில் என்னுடைய (தொலைபேசிப்) பேட்டி ஒன்று ஒளிபரப்பாகிறது. ஆனால், இந்தப் பேட்டி பணம் பற்றியதல்ல. ஹமீஷ் மெக்டொனால்ட் எழுதிச் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘Ambani & Sons’ புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் அல்லது விமர்சனம். வாய்ப்புள்ளவர்கள் பார்த்துகேட்டுவிட்டுச் சொல்லவும். எனக்கு வாய்ப்பில்லை *** என். சொக்கன் … 08 10 2010


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 101 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 183,725 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

அக்டோபர் 2010
தி செ பு வி வெ ஞா
« ஜூலை   நவ »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Follow

Get every new post delivered to your Inbox.

Join 101 other followers