Posted by: என். சொக்கன் on: ஜனவரி 1, 2011
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
பொதுவாக இதுமாதிரி விசேஷ நாள்களில் நான் டிவி முன்னால் சிக்காமல் தப்பி ஓடிவிடுவேன். ஆனால் இன்றைக்கு எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டேன். இரண்டே நிகழ்ச்சிகள், அதுவும் தலா பத்து நிமிடங்கள்தான் பார்த்தேன், அவற்றில் பொங்கி வழிந்த போலித்தனம் டிவியைத் தூக்கிப் போட்டு உடைத்துவிடலாமா என்கிற ஆத்திரத்தை உண்டாக்கியது.
இதைப்பற்றி ஒரு நண்பரிடம் புலம்பிக்கொண்டிருந்தபோது, ‘கவலைப்படாதீங்க. உங்க காயத்துக்கு மருந்து போடறதுக்காகவே ஓர் இயல்பான பேட்டி நிகழ்ச்சியோட வீடியோ பதிவை அனுப்பிவைக்கறேன். என்சாய்!’ என்றார்.

(Image Courtesy: http://rajarasigan.blogspot.com/2009/11/jency-songs-in-ilayaraja-music.html)
அந்தப் பேட்டி, பிரபல பாடகி ‘ஜென்ஸி’யுடையது. எப்போதோ ஜெயா டிவியில் வந்தது. மிகச் சுமாரான ரெக்கார்டிங். இரைச்சல் தாங்கவில்லை. சில நிமிடங்களுக்குள் காது வலி. ஹெட்ஃபோனே கதற ஆரம்பித்துவிட்டது, சத்தத்தை மிகவும் குறைத்துவைத்து அவரைக் கிசுகிசுப்பு ரகசியம் பேசவைத்து ஒருவழியாகப் பேட்டியைக் கேட்டு முடித்தேன்.
இத்தனை தொழில்நுட்ப அவஸ்தைகளுக்கும் நடுவிலும், அந்தப் பேட்டி ஒரு முத்து. கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் இவ்வளவு இயல்பாக ஒருவர் பேசக் கேட்பது மிகவும் இதமாக இருந்தது. ஜென்ஸி பேசியது 90% மலையாளம் என்பதுகூட உறுத்தவே இல்லை.
ஒரே ஒரு குறை, பேட்டி கண்டவர் ஜென்ஸியைக் கோர்வையாகப் பேசவிட்டிருக்கலாம். ஓர் ஒழுங்கே இல்லாமல் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று தொடர்ந்து தாவிக்கொண்டே இருந்ததால் புதிதாகப் பார்க்கிறவர்களுக்கு அவரைப்பற்றிய ஒரு முழுமையான பிம்பம் கிடைத்திருக்காது.
ஏதோ என்னால் முடிந்தது, இந்தப் பேட்டியின்மூலம் தெரிந்துகொண்ட விஷயங்களை இங்கே ஒழுங்குபடுத்தித் தொகுத்துவைக்கிறேன். (அந்த வீடியோவைக் கொடுத்து உங்கள் காதுகளை ரணப்படுத்த விருப்பமில்லை. தைரியமிருந்தால் நீங்களே யூட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்!)
இந்தப் பேட்டியில் நான் முக்கியமாகக் கவனித்த ஒன்று, ஜென்ஸி ஓர் அபூர்வமான வாய்ப்பை ஜஸ்ட் லைக் தட் இழந்திருக்கிறார். அவர்மட்டும் தமிழில் தொடர்ந்து பாடியிருந்தால் இன்னும் பெரிய உயரங்களுக்குச் சென்றிருக்கக்கூடும். அந்த ஆதங்கம் அவருக்கு லேசாக இருக்கிறது. ஆனால் அதை எண்ணி அவர் (இப்போதும்) புலம்புவதில்லை. ’நா(ஞா)ன் எடுத்த முடிவு தவறாகவே இருந்தாலும் சரி. அதன் பலனை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்’ என்கிற தொனி இருக்கிறது. இது ஓர் அபூர்வ குணம் இல்லையோ?
தலைப்புக் காரணம்: பேட்டியின் இடையில் ஓர் இடத்தில் ’ரசிகை’ என்று சொல்வதற்குப் பதிலாக ஜென்ஸி பயன்படுத்திய (‘நான் SPB சாரோட பெரிய ஆராதகி’) இந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. லவுட்டிக்கொண்டேன்!
***
என். சொக்கன் …
01 01 2011
வார்த்தை அழகாய் இருக்கிறது ! ஜென்சியின் பாடல்கள் பற்றிய சமீப காலத்தில் நிறைய பதிவுகளில் பகிரப்பட்டு பாடல்கள் கேட்டு,இடைவெளி விட்டு மீண்டும் பாட இருக்கின்றார் என்ற செய்தியில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்! – புடிச்ச ஃபீல்ட விட்டுட்டு போயிட்டு திரும்பவும் வாய்ப்பு கிடைச்சு வரும்போது மனசு எப்படி ஃபீல் செய்யும் – சரவெடின்னு படத்தோட பேராம்!
நன்றி சாரே!
நல்ல பதிவு.. (என் கருத்தை சொல்லி பதிவின் ஆன்மாவை கெடுக்க விரும்பவில்லை )
தகவலுக்காக அண்ணன் ஆஸி தங்கம் கானாபிரபா பதிவின் சுட்டி http://radiospathy.blogspot.com/2010/07/blog-post_19.html
(To கானா பிரபா —> போஸ்டரெல்லாம் ஒட்டியிருக்கேன் பெருசு பார்த்து எதாச்சும் செய்யுங்க)
good, the title content and the person
நல்ல பகிர்வு தல
நாக்ஸ், ரசிகைக்கான மலையாள வார்த்தை “ஆராதிக”(ஆராதகி அல்ல). ரசிகருக்கான வார்த்தை “ஆராதிகன்”.
ஆனந்த விகடன் பேட்டிக்கு முன்பே ஜான் மகேந்திரன் ஜென்சியைப் பாடவைத்திருக்கிறார். ஏனென்றால் விகடன் பேட்டியிலேயே இதைச் சொல்லியிருக்கிறாரே?
ஜான் மகேந்திரனுடன் உள்ள என் பூர்வ தொடர்பில் (ஆணிவேர்
இந்தப் பேட்டியைக் கேட்டு விட்டு அவரிடம் ஜென்சியின் செல் போன் இலக்கம் வாங்கி வைத்திருக்கிறேன். 2 வருசமாச்சு அவங்களோட பேசவே ஒருவித பதற்றம். எவ்வளவு அதியற்புதமான குரல் அவருடையது
நானும் ஜென்சியைப் போல கொஞ்சம் குழம்பி போய் விட்டேன். ரசிகை = ஆராதிக. ரசிகன் = ஆராதகன் (தங்கமணிதான் திருத்தினார்)
. ஜென்சி அனேகமாக ஆராதகனின் பெண்பால் ஆராதகி என நினைத்து விட்டார் போல…
சில நேரங்களில் வீட்டில் கொஞ்சமாகப் பரிமாறப்படும் சில உணவு வகைகள் மறக்கவியலாத சுவையில் இருக்கும்.
கொஞ்சமே கொஞ்சம் சுடச்ச்சுட தரப்படும் பெருமாள் கோவில் பொங்கலின் சுவை நினைத்தாலே நாவில் நீரூறச் செய்யத் தக்கது.
அப்படித்தான் தமிழ் இசை உலகில் பாடகி ஜென்சி அவர்களின் பங்கும். கொஞ்சமே கொஞ்சம் போதும் அவர் பாடற்சுவையின் சிறப்பைப் பறைசாற்ற!
அவர் இன்னும் இன்னும் பாடியிருந்தால் இந்த விடியோவும், அந்த சில பேட்டிகளும் அவசியமற்றுப் போயிருக்கும்.
ஜென்சி அவர்களிடம் இசை பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாழ்வின் இப்படிப்பட்ட ஒருவரிடம் இசை பயிலும் மகோன்னத வாய்ப்பை இழந்திருப்பார்களோ என்னவோ?
இப்படியெல்லாம் நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான்!
1 | தமிழ்ப்பறவை
ஜனவரி 1, 2011 இல் 11:58 பிற்பகல்
நற்பகிர்வு…