மனம் போன போக்கில்

Archive for மார்ச் 2011

ஒரு விரல் போதுமா?

Posted by: என். சொக்கன் on: மார்ச் 28, 2011

உங்களைப்போலவே, எனக்கும் நிஜ நண்பர்களைவிட டிஜிட்டல் நண்பர்கள்தான் அதிகம். இவர்களில் பெரும்பாலானோரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. ஆனால் ஈமெயில், சாட், ட்விட்டர், ப்ளாக், இப்போது ஃபேஸ்புக் என்று பலவிதங்களில் தினசரிப் பழக்கம். எனது ஆன்லைன் நண்பர்களில் பலர், வெளிநாட்டுவாசிகள். அவர்களோ, அவர்களது நண்பர்கள் (அ) உறவினர்களோ இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் என்னைச் சாட்டிலோ, ஈமெயிலிலோ அழைத்து அன்பாகக் கேட்பார்கள் ‘பாஸ், உங்களுக்கு இங்கிருந்து ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா?’ இந்தக் கேள்வி என்னை எப்போதும் திகைப்பில் ஆழ்த்தும். காரணம், [...]

காலி நோட்டுகள் (அல்லது) காலிப் பள்ளிகள்

Posted by: என். சொக்கன் on: மார்ச் 26, 2011

ட்விட்டரில் எழுதியது, சில மாற்றங்களுடன் இங்கே சேமித்துவைக்கிறேன்: நங்கைக்குப் பள்ளி முடிந்தது. அத்தனை நோட்டுகளிலும் அவள் மீதம் வைத்திருக்கும் காலிப் பக்கங்களைப் பார்த்தால் கண்ணில் ரத்தம் வருகிறது. அநேகமாக எல்லா நோட்டுகளிலும் 20 பக்கங்களே எழுதப்பட்டுள்ளன. மீதம் காலி. ஆனால் அடுத்த வருடம் கட்டாயம் புது நோட்டுகள் வாங்கணும். ரஃப் நோட்கள் உள்பட. அதுவும் வெளியே வாங்கக்கூடாது – அவர்கள் தரும் நோட்டுகளைதான் வாங்கவேண்டும் – அவர்கள் சொல்லும் அதே விலையில். யூனிஃபார்ம் கிழியாமல் அளவு மாறாமல் [...]

கார்(ப்)பரேட் கனவுகள்

Posted by: என். சொக்கன் on: மார்ச் 21, 2011

நண்பர் கிரி ராமசுப்ரமணியன் எழுதிய ‘கார்(ப்)பரேட் கனவுகள்’ புத்தகம் கடந்த சனிக்கிழமை (19 மார்ச் 2011) சென்னையில் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்துக்கு நான் எழுதிய அணிந்துரையை இங்கே பதிவு செய்துவைக்கிறேன். நான் BPO ஊழியன் அல்லன். அதற்குச் சில படிகள் மேலே இருக்கிறவன். என்னடா எடுத்தஎடுப்பில் இப்படி ஓர் அடாவடி ஸ்டேட்மென்ட் விடுகிறானே என்று தப்பாக நினைத்துவிடவேண்டாம். எங்களுடைய அலுவலகம் ஒரு BPO அலுவலகத்தின் மேல்மாடியில் இருக்கிறது. அதைத்தான் அப்படி பந்தாவாகச் சொல்லிப்பார்த்தேன் . ஆக, நான் [...]

தீவாந்திர சிட்சை

Posted by: என். சொக்கன் on: மார்ச் 9, 2011

இன்று காலை ஒரு வித்தியாசமான தொலைபேசி அழைப்பு. வலங்கைமான் என்ற ஊரில் இருந்து ஒரு முதியவர் பேசினார். அவர் தனது பெயரைச் சொல்லவில்லை. எப்படி என்னுடைய தொலைபேசி எண் கிடைத்தது என்பதையும் சொல்லவில்லை. பரபரவென்று தன்னுடைய சொந்தக் கதையை விவரித்துச் சென்றார். அந்தக் காலத்தில் அவருடைய தந்தை யாரிடமோ நூற்றைம்பது ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அதை ஒழுங்காகத் திரும்பச் செலுத்தமுடியவில்லை. கடன் கொடுத்தவன் போலிஸில் புகார் தந்துவிட்டான். அவர்கள் இவரைப் பிடித்துச் சிறையில் போட்டார்கள். அப்போது நூற்றைம்பது [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 109 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 196,103 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

மார்ச் 2011
தி செ பு வி வெ ஞா
« Feb   Apr »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Follow

Get every new post delivered to your Inbox.

Join 109 other followers