Posted by: என். சொக்கன் on: April 27, 2011
சில வருடங்களுக்கு முன்னால், கலீல் கிப்ரன் எழுதிய பல குட்டிப் புத்தகளின் தொகுப்பாக ஒரு தலையணைப் புத்தகம் கிடைத்தது. துண்டு துண்டாகப் படித்துக்கொண்டிருந்தேன். சிலது புரிந்தது, பலது புரியவில்லை. முக்கியமாக, அந்தத் தொகுப்பில் ஆங்காங்கே எதிர்ப்பட்ட குட்டிக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன – அரை பக்கம், ஒரு பக்கம், மிஞ்சிப்போனால் ஒன்றரைப் பக்க அளவே கொண்ட தக்கனூண்டு கதைகள் அவை. உண்மையில், அவற்றைக் கதைகள் (Stories) என்று பொதுவாகச் சொல்வதுகூட சரியாகாது, ஆங்கிலத்தில் ‘Fables’ என்று [...]
Posted by: என். சொக்கன் on: April 20, 2011
‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்னுடைய குரல் எனக்கே தெளிவாகக் கேட்காதபடி அந்த நாய் உறுமிக்கொண்டிருந்தது. அதைக் கட்டியிருந்த சங்கிலி இன்னும் சில சென்டிமீட்டர்கள் நீளமாக இருந்திருந்தால், இந்நேரம் என்னைப் பிய்த்துத் தின்றிருக்கும். அந்த வீட்டின் இருட்டான உள்ளறையை நோக்கி மூன்றாவதுமுறையாக ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று கதறினேன். ஐயா சாமிகளே, வீட்டில் யாரேனும் இருக்கிறீர்களா? உங்களுக்குக் கோடி புண்ணியம். கொஞ்சம் தயவு பண்ணி வெளியில் வந்து இந்த ராட்சஸ மிருகத்தை இழுத்துக்கொண்டு போங்கள். அடுத்த சில நிமிடங்களுக்குச் செயலற்றவனாக அங்கேயே [...]