Posted by: என். சொக்கன் on: April 27, 2011
சில வருடங்களுக்கு முன்னால், கலீல் கிப்ரன் எழுதிய பல குட்டிப் புத்தகளின் தொகுப்பாக ஒரு தலையணைப் புத்தகம் கிடைத்தது. துண்டு துண்டாகப் படித்துக்கொண்டிருந்தேன். சிலது புரிந்தது, பலது புரியவில்லை. முக்கியமாக, அந்தத் தொகுப்பில் ஆங்காங்கே எதிர்ப்பட்ட குட்டிக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன – அரை பக்கம், ஒரு பக்கம், மிஞ்சிப்போனால் ஒன்றரைப் பக்க அளவே கொண்ட தக்கனூண்டு கதைகள் அவை. உண்மையில், அவற்றைக் கதைகள் (Stories) என்று பொதுவாகச் சொல்வதுகூட சரியாகாது, ஆங்கிலத்தில் ‘Fables’ என்று [...]