Posted by: என். சொக்கன் on: ஜூன் 28, 2011
முன்கதை அத்தியாயங்கள்: 1, 2, 3, 4 5, 6, 7, 8 9 பதற்றத்துடன் இன்னொருமுறை நன்றாக அழுத்தித் திறந்துபார்த்தான் அரவிந்தன். ம்ஹும்! கதவு பிடிவாதமாகத் திறக்க மறுத்தது. பொதுவாக இதுபோன்ற நட்சத்திர ஹோட்டல் அறைக் கதவுகள் உள்பக்கக் கைப்பிடியை லேசாகத் தொட்டாலே திறந்துகொள்ளும். வெளிப்பக்கத்திலிருந்துதான் நமது அனுமதியின்றி யாரும் திறக்கமுடியாது. ஆனால் இந்தக் கைப்பிடியைச் சுமார் 90 டிகிரிக்குமேல் சுற்றியும்கூடக் கதவில் சிறு சலனமும் இல்லை. கதவிடுக்கு வழியே வழிகிற வெளிச்சத்தில் கண் வைத்துப் [...]
Posted by: என். சொக்கன் on: ஜூன் 21, 2011
முன்கதை அத்தியாயங்கள் – 1, 2, 3, 4, 5, 6, 7 8 ‘தலைவிதி’ என்றார் ஞானேஷ்வர் ராவ். ‘இவனுங்ககிட்டேயெல்லாம் குப்பை கொட்டணும்-ன்னு நம்ம தலையில அழுத்தமா எழுதியிருக்கு, வேற என்ன சொல்றது?’ ‘சத்தமாப் பேசாதீங்க சார்’ என்றான் அரவிந்தன். ‘இங்கே யாருக்காவது தமிழ் தெரிஞ்சிருக்கப்போகுது.’ ‘தெரியட்டுமே, என்ன பெரிசா?’ கைகளை அகல விரித்துச் சொன்னார் அவர். ‘ஒவ்வொரு மீட்டிங்லயும் பத்து விஷயம் புதுசாக் கேட்கறானுங்க. எதுக்கும் எக்ஸ்ட்ரா காசு கொடுக்கமாட்டாங்க, இவனுங்களுக்கு இப்படி இலவசமாச் [...]
Posted by: என். சொக்கன் on: ஜூன் 13, 2011
முன்கதை அத்தியாயங்கள் – 1, 2, 3, 4, 5, 6 7 அலாரம் பலமாக ஒலித்து அவனை எழுப்பியபோது மணி எட்டரை. ஆறரைக்கே அலாரம் வைத்திருந்தான். ஆனால் ராத்திரி தூக்கம் வராமல் நெடுநேரம் புரண்டு கொண்டிருந்ததால் ஒருவழியாகக் கண்களை மூடி நித்திரையில் ஆழ்ந்த மறுவிநாடியே அந்த அலாரம் அலறினாற்போலிருந்தது. ஆகவே பாதி சலிப்பு மீதி எரிச்சலுடன் புரண்டு படுத்த அரவிந்தன் ஆறரை மணி அலாரத்தை ஏழு மணிக்கு மாற்றிவைக்க எண்ணினான். ஆனால் தூக்கக் கலக்கத்தில் எட்டரைக்கு [...]
Posted by: என். சொக்கன் on: ஜூன் 10, 2011
ஊர் சுற்றித் திரும்பினோம். வழியில் ஒரு பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கினோம். எனக்கு இரண்டு மகள்கள்: நங்கை மற்றும் மங்கை. இருவருக்கும் பிடித்த சாப்பாட்டுப் பண்டம், அடுத்தவர் கையில் இருப்பது. பிடித்த உடை, அடுத்தவர் அணிந்திருப்பது. ஆகவே எதை வாங்கினாலும் அச்சு அசல் ஒரேமாதிரியாக இரண்டு வாங்கிவிடுவேன். மனிதனால் சாத்தியமாகக்கூடிய அதிகபட்ச டெசிபல் * 2 சத்தத்தில் சண்டை ஒன்றைக் கேட்பதைவிட, கொஞ்சம் கூடுதலாகச் செலவழித்துவிடுவது உத்தமம். ஆக, இந்தக் கடையில் நான் ரெண்டு பாக்கெட் சிப்ஸ் வாங்கி [...]
Posted by: என். சொக்கன் on: ஜூன் 7, 2011
முன்கதை அத்தியாயங்கள் – 1, 2, 3, 4, 5 6 இத்தனை அழுக்காகவும் ஒழுங்கின்றியும் ஒரு நகரம் இருக்கமுடியுமா? அரவிந்தனால் நம்பவே முடியவில்லை. பெரிய மழைகூட அவசியமில்லை, சின்னச் சின்ன தூறல்களுக்கே பம்பாயின் தார்ச் சாலைகள் அகலத் திறந்துகொண்டன. சாலையோரம், நடுரோடு, பிளாட்ஃபாரம் என்று வித்தியாசமில்லாமல் எங்கு பார்த்தாலும் சேறும் அழுக்குத் தண்ணீரும். பம்பாய் மொத்தமுமே ஒரு பெரிய அழுக்குக் குட்டைபோல்தான் அவனுக்குத் தெரிந்தது. சாலையில் நடப்பதற்கே அருவருப்பாக இருந்தது. எங்கு பார்த்தாலும் அழுத்தமான கறுப்புக் [...]