மனம் போன போக்கில்

Archive for ஜூலை 2011

மொபைல் பேக்கரி

Posted by: என். சொக்கன் on: ஜூலை 31, 2011

பெங்களூர்த் தெருவோரங்களில் தள்ளுவண்டி பேக்கரிகளில் வேகும் பிஸ்கட்கள். சுடச்சுட வாங்கி ருசிக்கலாம். விலை: 100 கிராம் ரூ 15/- *** என். சொக்கன் … 31 07 2011

கணக்கு

Posted by: என். சொக்கன் on: ஜூலை 30, 2011

பக்கத்து வீட்டுக்காரர் தன் மகனை மீண்டும் இன்னொரு வருடம் எல்கேஜியிலேயே சேர்க்கிறாராம். ‘ஏன்? மினிமம் ஏஜ் பிரச்னையா?’ என்று கேட்டேன். இல்லையாம். ஆச்சர்யமான தொலைநோக்குடன் ஒரு விநோதமான காரணம் சொன்னார். அவரது மூத்த மகன் 2ம் வகுப்பாம், இப்போது இளையவனை (வயதுப்படி) யுகேஜி சேர்த்தால், மூத்தவன் +2 படிக்கையில் இவன் 10ம் வகுப்பு படிப்பானாம். ஒரே நேரத்தில் ரெண்டு பேரையும் கவனித்து(?) பப்ளிக் எக்ஸாம் எழுதவைக்கமுடியாதாம். ஆகவே இளையவனை இன்னொரு வருடம் எல்கேஜி படிக்கவைத்து ‘அட்ஜஸ்ட்’ செய்கிறாராம். [...]

btpl

Posted by: என். சொக்கன் on: ஜூலை 29, 2011

பெங்களூரில் வசிக்கும் ட்விட்டர் பயனாளிகள் சிலர் (சுமார் 10 பேர்) ஞாயிற்றுக்கிழமை காலைகளில் சும்மா ஜாலி கிரிக்கெட் விளையாடி வருகிறோம். ஆர்வம் இருந்தால் நீங்களும் வரலாம் – ட்விட்டர் பயன்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை, கிரிக்கெட் ஆடத் தெரியவேண்டும் என்றுகூட கட்டாயம் இல்லை :> இடம்: Marathahalli, Outer Ring Road, Near JP Morgan Office / CROMA show room நேரம்: ஞாயிறுதோறும் காலை 7 மணிக்கு ஷார்ப்பாக (நீங்கள் 9:45க்குக்கூட வரலாம் கூடுதல் [...]

தூறல் நின்னு போச்சு

Posted by: என். சொக்கன் on: ஜூலை 28, 2011

கடந்த 3 மாதங்களாக இந்த வலைப்பதிவில் ‘கார்காலம்’ என்ற தொடர்கதையை எழுதிவந்தேன். அதிகப் பேர் படித்திருக்கமாட்டார்கள் – தினமும் 300 பேர் வருகிற ஒரு வலைப்பதிவில் கதை படிக்கிறவர்கள் 30 பேர் இருந்தால் அதிகம் என்பதே உலக எதார்த்தம், அந்தக் கதை ஒன்றிரண்டு page downsல் முடிந்துவிடாமல் பல அத்தியாயங்களுக்குத் தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துவிடும் – கடைசியாக நான் தொடர்கதை படித்துச் சில வருடங்கள் ஆகிவிட்டன எனும்போது, என் தொடர்கதையை அதிகப் பேர் படிக்கவில்லை [...]

தொலைபதிவு

Posted by: என். சொக்கன் on: ஜூலை 28, 2011

ஃபோனிலிருந்தே நேரடியாகப் பதிவு எழுதும் தொழில்நுட்பம் வந்துவிட்டதாம். ஜாலி! இனி இங்கே ட்வீட்டும் இல்லாத, பதிவும் இல்லாத குறும்பதிவுகளை நிறைய எதிர்பார்க்கலாம், ஜாக்கிரதை :> *** என். சொக்கன் … 28 07 2011

கார்காலம் – 12

Posted by: என். சொக்கன் on: ஜூலை 18, 2011

முன்கதை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ஜில்லென்ற அந்த வெண்ணிறத் துண்டை முகத்தில் பரப்பி ஒற்றியெடுத்தபோது கை நிறைய பனிக்கட்டிகளை அள்ளிப் பூசிக்கொண்டாற்போல் இதமாக இருந்தது அரவிந்தனுக்கு. மும்பையின் ராட்சஸப் போக்குவரத்தில் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்ததில் முகமெல்லாம் எரிந்துகொண்டிருந்தது. ஆகவே இந்தச் செயற்கைப் பனிப்பூச்சை இன்னும் சிறிது நேரம் அனுபவிக்கவேண்டும்போல் ஏக்கமாக இருந்தது அவனுக்கு. வீட்டுக்குத் திரும்பும் எல்லாப் பயணங்களுமே இன்பமயமானவைதான். [...]

கார்காலம் – 11

Posted by: என். சொக்கன் on: ஜூலை 11, 2011

முன்கதை 1, 2, 3, 4, 5 6, 7, 8, 9, 10 ஞாயிற்றுக்கிழமை காலை செல்வியைத் தொலைபேசியில் அழைத்தபோது அவள் ஓரளவு உற்சாகமான மனோநிலையில் இருப்பதாகவே தோன்றியது. ‘ஜுரம் போயே போச்’ என்றாள் சிரித்து. ‘அப்புறம்? ரெண்டு நாளா என்ன செஞ்சே?’ செல்பேசியைத் தோளிடுக்கில் பொருத்திக்கொண்டிருந்த அரவிந்தன் ரொட்டியில் ஜாம் தடவியபடி கேட்டான். ‘எப்பவும்போல சும்மாதான் இருக்கேன்’ என்றாள் அவள். ‘உனக்குதான் சனி, ஞாயிறு விசேஷம். நீ ஊர்ல இல்லாட்டி எனக்கு எல்லா நாளும் [...]

புது வூடு

Posted by: என். சொக்கன் on: ஜூலை 8, 2011

வேர்ட்ப்ரெஸ்ஸில் ஒரு புது வூடு கட்டியிருக்கிறேன். ஒருமுறை எட்டிப்பார்த்தால் சந்தோஷப்படுவேன். வீட்டைப்பற்றி ஓர் அறிமுகம்: http://365paa.wordpress.com/about/ முகவரி: http://365paa.wordpress.com/ *** என். சொக்கன் … 08 07 2011

கார்காலம் – 10

Posted by: என். சொக்கன் on: ஜூலை 6, 2011

முன்கதை அத்தியாயங்கள்: 1, 2, 3 4, 5, 6 7, 8, 9 அரவிந்தன் அறைக்குத் திரும்பும்போது நள்ளிரவு தாண்டியிருந்தது. படுக்கைக்கு அருகிலிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு திகைத்தவன் பிறகு தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். ‘நாளைக்குச் சனிக்கிழமைதானே? விருப்பப்படி தூங்கலாம், லேட்டா எழுந்திருக்கலாம். எந்தப் பயலும் கேள்வி கேட்கமுடியாது!’ உடை மாற்றக்கூடத் தோன்றாமல் படுக்கையில் விழுந்தான். கைக்கடிகாரத்தைக் கழற்றிக் குறு மேஜைமீது வைத்தபோது அங்கிருந்த செல்வியின் புகைப்படம் கீழே விழுந்தது. நிமிர்த்திவைத்தான். அந்த நிழற்படத்தில் [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 109 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 196,103 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

ஜூலை 2011
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   Aug »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Follow

Get every new post delivered to your Inbox.

Join 109 other followers