Posted by: என். சொக்கன் on: ஜூலை 30, 2011
பக்கத்து வீட்டுக்காரர் தன் மகனை மீண்டும் இன்னொரு வருடம் எல்கேஜியிலேயே சேர்க்கிறாராம். ‘ஏன்? மினிமம் ஏஜ் பிரச்னையா?’ என்று கேட்டேன். இல்லையாம். ஆச்சர்யமான தொலைநோக்குடன் ஒரு விநோதமான காரணம் சொன்னார்.
அவரது மூத்த மகன் 2ம் வகுப்பாம், இப்போது இளையவனை (வயதுப்படி) யுகேஜி சேர்த்தால், மூத்தவன் +2 படிக்கையில் இவன் 10ம் வகுப்பு படிப்பானாம். ஒரே நேரத்தில் ரெண்டு பேரையும் கவனித்து(?) பப்ளிக் எக்ஸாம் எழுதவைக்கமுடியாதாம். ஆகவே இளையவனை இன்னொரு வருடம் எல்கேஜி படிக்கவைத்து ‘அட்ஜஸ்ட்’ செய்கிறாராம்.
மூளையில் நிரந்தரமா ரூம் போட்டுவெச்சிருப்பாங்களோ!
***
என். சொக்கன் …
30 07 2011
தொலைநோக்கு திட்டம் இருக்க வேண்டியதுதான்.அதுக்குன்னு இப்டியா..?!
அருமை.
உண்மையாகவே தொலை நோக்கு பார்வைதான். எனக்குத் தொன்றாமல் போச்சே:)
உண்மையாவே தொலை நோக்குப் பார்வைதான்..
அருமை.!!!!
//ரூம் போட்டுவெச்சிருப்பாங்களோ//
ம்ஹீம்… ரூம்-க்கு போறதுக்கு முன்னாடி யோசித்திருக்கணும். அநியாயமாக அச்சிறுவனுக்கு ஒரு வருடம் பாழ்.
அட அவனை ஒன்றாம் வகுப்பில் சேர்த் இருக்கலாம்..அப்பதான் அன்னன் புத்தகம் தம்பிகி உதவும். தொடந்து 12 வருடம் செலவு மிச்சம்
பையன் பத்து வருஷங் கழிச்சு, அப்பா ஏன் என் ஒரு வருஷத்தை வீணடிச்சீங்கன்னு கேட்டா !
1 | chinnapiyan v.krishnakumar
ஜூலை 30, 2011 இல் 8:38 மு.பகல்
அப்போ பார்த்து என்ன சீர் பாடத்திட்டம் வந்து,அவரின் திட்டத்தை கொலைக்கபோகிறதோ