Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 22, 2011
சமீபத்தில் மங்கையின் பள்ளியில் ‘பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு’க்குச் சென்றிருந்தோம். அவளுடைய ஆசிரியை ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொன்னார். ‘இந்த வயசுல குழந்தைகளுக்கு நிறைய கோவம் வரும், நாம அதைப் பெரும்பாலும் கவனிக்கமாட்டோம். ஆனா அவங்க சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட நம்மேல எரிச்சலாவாங்க, கண்டதையும் தூக்கி வீசுவாங்க, எதையாவது போட்டு உடைப்பாங்க, அது வெறும் குறும்பு-ன்னு நாம நினைப்போம், முதுகுல நாலு வைப்போம், அது அவங்களைக் கட்டுப்படுத்தாது, கோபத்தை இன்னும் அதிகமாக்கும்.’ ‘அதுக்குப் பதிலா, அவங்களோட கோபத்துக்கு [...]
Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 18, 2011
சமீபத்தில் ஒரு நெட்புக் வாங்கினோம். தக்கனூண்டு சைஸ், அதனினும் தக்கனூண்டு கீபோர்ட், அந்தக் காலத்து வீடியோ கேஸட்டைவிடக் கொஞ்சமே கொஞ்சம்தான் பெரியது, அசந்தால் பேன்ட் பாக்கெட்டில் செருகிக்கொண்டு நடந்துவிடலாம், எடை அதிகமில்லை, எல்லோரும் பயமுறுத்திய அளவு பர்ஃபார்மென்ஸும் மோசமில்லை. அது நிற்க. இந்தப் பதிவின் நோக்கம் நெட்புக் விற்பது அல்ல. ஒரு வாரமாக அந்த நெட்புக்கின் மேலுறை(பவுச்)சைக் காணவில்லை. மேலுறை இல்லாமலும் நெட்புக் அழகுதான். ஆனால் அதைத் தூக்கிக்கொண்டு சுற்றுவது சிரமம். தெருவில் நம்மைப் பார்ப்போர் அநாவசிய [...]
Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 17, 2011
’அது தஞ்சாவூர் பெயின்டிங்தானே?’ ஃபோனில் மெயில் மேய்ந்துகொண்டிருந்தவன் அந்தக் கடைசிக் கேள்விக்குறியில்தான் கவனம் கலைந்து நிமிர்ந்தேன். பரபரப்பாக வெளியே பார்த்தால் சுவர் போஸ்டரில் கன்னட ஹீரோ ஒருவர்தான் முறைத்தார். ‘எந்த பெயின்டிங்? எங்கே?’ ’அந்தத் தெரு முனையில ஒரு சின்னக் கடை வாசல்ல’ என்று பின்னால் கை காட்டினார் மனைவி. ‘நீ பார்க்கறதுக்குள்ள டாக்ஸி திரும்பிடுச்சு!’ ‘சரி விடு, அடுத்தவாட்டி பார்த்துக்கலாம். இப்ப திரும்பிப் போகவா முடியும்?’ எங்கள் வீட்டிலிருந்து ரயில்வே நிலையம் செல்லும் வழியில் இருக்கும் [...]
Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 15, 2011
முன்குறிப்பு: இது மெகாசீரியல் இயக்குனர்களைப் பற்றிய பதிவு அல்ல ஓர் உயரமான மனிதர். அவரைவிட உயரமான குச்சி. அதன் உச்சியில் துணி பொம்மை ஒன்று. அதன் கால் பகுதியில் குண்டாகத் தொடங்கும் இரு வண்ணங்கள் பின்னிப் பிணைந்த மிட்டாயைப் பாலித்தீன் பேப்பர் கொண்டு மறைத்திருப்பார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து கீழே ஒரு வால்மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை இழுத்தால்அதே இரட்டை வண்ண stripesஉடன் கச்சிதமாக ஒரு நாடா நீண்டு வரும். ஆனால் இதை யார் வேண்டுமானாலும் [...]
Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 14, 2011
’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’ ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது. ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். [...]
Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 6, 2011
மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரான பால் ஆலென் (பில் கேட்ஸின் இளம் பருவத் தோழர்) சுயசரிதை ‘Idea Man‘ வாசித்துக்கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமான, திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை. ஆனால் கொஞ்சம் போரடிக்கும் பாடப் புத்தக நடை. (ஆச்சர்யமான விஷயம், ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான Steve Wozniak எழுதிய iWoz என்ற சுயசரிதையும் எனக்கு இப்படிதான் தோன்றியது – பில் கேட்ஸ் / ஸ்டீவ் ஜாப்ஸ் தங்களுடைய சுயசரிதைகளை எழுதினால், ஒருவேளை இந்தக் கணிப்பு மாறலாம்) பால் ஆலென் புத்தகத்தின் நடை [...]
Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 5, 2011
நேற்று சூப்பர் ‘மோர்’க்கெட் ஒன்றில் பற்பசை வாங்கச் சென்றிருந்தேன். ஒரு ஷெல்ஃப் நிறைய ஏகப்பட்ட options, பல வண்ணங்கள், சுவைகள், மவ்த்வாஷ், ஃபயர் அண்ட் ஃப்ரீஜ் இன்னபிற innovations, சிறுவர்க்கு, டீனேஜருக்கு, 100% சைவருக்கு (அசைவ, வைணவ வெரைட்டிகளும் இருக்கக்கூடும்?) முதியோருக்கு, மூலிகைப் பிரியருக்கு எனப் பல specialisations…. பிரமித்து நின்றேன். ஒரே பிரச்னை, இவற்றை ஒப்பிடுவது பெரும்பாடாக உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு எடை, வெவ்வேறு விலை, எதுவும் ரவுண்டாக இன்றி 170 கிராம் 38 ரூ, [...]