Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 27, 2011
இன்றைய Random பாட்டு, ‘ஆனந்த ராகம், கேட்கும் காலம்’. ராஜா இசையில் உமா ரமணன் எத்தனையோ அருமையான பாடல்கள் பாடியிருந்தாலும் இந்தப் பாடல் அவரது வாழ்நாள் சாதனை. எனக்குப் பிடித்த அவரது மற்ற சில பாடல்கள்: பூங்கதவே தாள் திறவாய், செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, மஞ்சள் வெயில், கண்ணனே நீ வரக் காத்திருந்தேன், கஸ்தூரி மானே, பொன்மானே கோபம் ஏனோ, ஊருறங்கும் சாமத்திலே, கீதம் சங்கீதம், ஆகாய வெண்ணிலாவே, ஏலேலங்குயிலே, ஹோ உன்னாலே நான், and [...]
Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 26, 2011
ட்விட்டர் நண்பர் கவிராஜன் (https://twitter.com/#!/kavi_rt) பெங்களூரு வந்திருந்தார். இன்னொரு ட்விட்டர் நண்பர் சுரேஷ் (https://twitter.com/#!/raaga_suresh) ஏற்பாட்டில் அவரைச் சந்திக்கமுடிந்தது. இரண்டு மணி நேரம் நல்ல அரட்டை. வழக்கமாக வெளியூர் நண்பர்கள் பெங்களூரு வந்தால் ஏதேனும் ஒரு Shopping Mall Food Courtல் சந்திப்பதுதான் வழக்கம். இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, ஓர் antique shopல் சந்தித்தோம். காரணம், கவிராஜன் வினைல் ரெக்கார்டுகளைச் சேகரித்துவருகிறார். பெங்களூரு அவென்யூ ரோட்டில் உள்ள ஒரு பழம்பொருள் கடையில் கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் வினைல் ரெக்கார்டுகள் [...]
Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 21, 2011
நேற்று இணையத்தில் ஒரு திரைப்பட விமர்சனம் வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி: ‘படத்தில் சில நிமிடங்களே வருகிற சின்னச் சின்னக் கதாபாத்திரங்களைக்கூட இயக்குனர் கவனித்துச் செதுக்கியிருக்கிறார்.’ இதைப் படித்தபோது (வழக்கம்போல்) எனக்கு ஒரு பாட்டுதான் நினைவுக்கு வந்தது: ’அன்னக்கிளி’ புகழ் தேவராஜ் – மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘வெத்தல வெத்தல வெத்தலயோ’! மிஞ்சிப்போனால் ஆறு நிமிடம்மட்டுமே ஒலிக்கும் பாடல் இது. ஆனால் அதற்குள் ஒரு கிராமத்தின் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பார்த்துவிடமுடியும். அந்தக் கிராமத்தின் பெயர் [...]
Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 17, 2011
இன்றைய Random பாடல், ’ஒரு கிளி உருகுது, உரிமையில் பழகுது, ஓ மைனா, மைனா.’ (படம்: ஆனந்தக் கும்மி, இசை: இளையராஜா, எழுதியவர்: வைரமுத்து) இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. யார் நடித்தது, என்ன கதை என்று எந்தத் தகவலும் தெரியாது. ஆனால் இந்தப் பாட்டின்மீது படுமோசமான மயக்கம் உண்டு. இதுவரை கிட்டத்தட்ட ஐநூறு தடவையாவது கேட்டிருப்பேன். ஒருமுறைகூட ‘ஒன்ஸ்மோர்’ கேட்காமல் அடுத்த பாடலுக்குச் சென்றது கிடையாது. பாடலின் தொடக்கத்தில் வருகிற முன்னிசையிலேயே ராஜ வைத்தியம் ஆரம்பமாகிவிடுகிறது. [...]
Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 14, 2011
’சமஸ்’ எழுதிய ‘சாப்பாட்டு புராணம்’ என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களோ, தெரியாது. நான் மனப்பாடமே செய்திருக்கிறேன். தஞ்சை, சுற்றுவட்டாரங்களில் உள்ள அட்டகாசமான ‘சாப்பாட்டு’க் கடைகளைச் சுவாரஸ்யமான மொழியில் வர்ணனை செய்து அடையாளம் காட்டும் புத்தகம் அது. ‘சாப்பாட்டு புராண’த்தைப் படித்தபின்னர் அந்தப் பக்கம் பயணம் செல்வது என்றாலே இதில் உள்ள கடைகளை லிஸ்ட் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக டேஸ்ட் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. அநேகமாக ஒன்றுகூட சோடை போனதில்லை. எனக்குத் தெரிந்து ‘சாப்பாட்டு புராணம்’ இப்போது அச்சில் இல்லை. என்னிடம் [...]
Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 13, 2011
இன்றைய Random பாட்டு, ‘இரு பறவைகள் மலை முழுவதும்’. நிறம் மாறாத பூக்கள்’ என்ற படத்தில் ராஜா இசையில் கண்ணதாசன் எழுதி ஜென்ஸி பாடியது. ஜென்ஸி எனக்கு ரொம்பப் பிடித்த பாடகி. ராஜாவின் இசையில் மிக நல்ல பாடல்களைமட்டுமே பாடிய அதிர்ஷ்டசாலிகளில் அவர் ஒருவர். (மற்ற இருவர் பி. ஜெயச்சந்திரன், ஷ்ரேயா கோஷல்) மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடினாலும், தடாலென்று பாடுவதையே நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் அவருக்கென்று ஒரு நிரந்தர ரசிகர் வட்டம் [...]
Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 8, 2011
மதியம் சாப்பிடச் செல்லும்போது வழக்கமான ராஜா கலெக்ஷனைக் காதில் ஓடவிட்டிருந்தேன். அதில் ஒரு பாட்டு, தர்மதுரை படத்திலிருந்து ‘சந்தைக்கு வந்த கிளி’. இதுவரை இந்தப் பாடலைக் குறைந்தபட்சம் நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால் இந்தமுறை அனுபல்லவியில் வரும் ‘குத்தாலத்து மானே, கொத்துப் பூ வாடிடும் தேனே’ என்ற வரி கொஞ்சம் உறுத்தியது. அதென்ன ‘பூ வாடிடும் தேனே’? பூ வாடினால் அதில் ஏது தேன்? அநேகமாக அந்த வரி ‘பூ ஆடிடும் தேனே’ என்றுதான் இருந்திருக்கவேண்டும். பூவில் [...]
Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 5, 2011
கல்லூரியில் நான் படித்தது Production Engineering. அது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் உடன்பிறவாச் சகோதரி. சும்மா ஓர் உலக (தமிழக ) வழக்கம் கருதியே ‘சகோதரி’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தினேன், மற்றபடி இவ்விரு எஞ்சினியரிங் பிரிவுகளுமே பெரும்பாலும் சேவல் பண்ணைகள்தாம், பெண் வாசனை மிக அபூர்வம். எங்கள் வகுப்பில் 30 பையன்கள், 2 பெண்கள், பக்கத்து மெக்கானிக்கல் வகுப்பில் 60 பையன்கள், ஒரே ஒரு பெண். இந்தப் பொருந்தா விகிதத்துக்குக் காரணம், இயந்திரங்களுடன் போராடப் பழக்கும் இந்த சப்ஜெக்ட்கள் [...]
Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 2, 2011
’அலை பாயுதே’வில் எல்லோருக்கும் பிடித்த ‘ரகசிய சிநேகிதனே’ பாட்டில் வைரமுத்து எழுதிய ஒரு வரி: உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் இந்தப் படம் வந்த அதே நேரத்தில் (அல்லது சில மாதங்கள் முன் பின்னாக) ‘மின்னலே’ என்ற படத்தின் ஒலிநாடா வெளியானது. அதில் ஹாரிஸ் ஜெயராஜ் என்ற புதுமுகம் ‘தாமரை’யின் பாடல் வரிகளுக்கு இசையமைத்திருந்தார். அதிலும் ‘ரகசிய சிநேகிதனே’போல் ஒரு female-solo பாட்டு, ‘வசீகரா’ என்று தொடங்கிய அந்தப் பாடலிலும் இதேமாதிரி ஒரு வரி: சில [...]