மனம் போன போக்கில்

Archive for அக்டோபர் 2011

உலகத்தோடு சுருங்குதல்?

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 31, 2011

முன்குறிப்பு: இது கட்டுரை அல்ல. கற்பனைக் கதையும் அல்ல. ஆங்காங்கே கவனித்த உண்மைகள் கொஞ்சம், மிகைப்படுத்தல் கொஞ்சம், Rational Thinking கொஞ்சம், கெக்கேபிக்கே சிந்தனை கொஞ்சம், பொதுபுத்தி கொஞ்சம், உணர்ச்சிவயப்’படுத்தல்’ மிச்சம் என எல்லாம் கலந்த ஏதோ ஒன்று. ‘மல்லிகை மகள்’ இதழின் தீபாவளி மலரில் வெளிவந்தது 1 சில வருடங்களுக்கு முன்னால், பெங்களூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழா. அதற்குத் தலைமை தாங்கியவர் கணிதமேதை சகுந்தலா தேவி. ’குழந்தைகளுக்குக் கணக்கில் ஆர்வம் ஊட்டுவது எப்படி?’ என்கிற [...]

புது ரிலீஸ்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 22, 2011

நீஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப்பின் என்னுடைய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஃபேஸ்புக் வெற்றிக் கதை’ (கிழக்கு பதிப்பகம் வெளியீடு : 168 பக்கங்கள் : ரூ 115/-) ’ஃபேஸ்புக்கா? நீ ட்விட்டர் பைத்தியமாச்சே’ என்று கேட்கிறீர்களா? ‘ட்விட்டர் வெற்றிக் கதை’தான் முதலில் எழுதினேன். அதைவிட ஃபேஸ்புக் மிகப் பிரபலம் என்பதாலோ என்னவோ, பதிப்பகத்தார் ‘ஃபேஸ்புக் வெற்றிக் கதை’யை முதலில் வெளியிடத் தீர்மானித்துவிட்டார்கள்போல, ட்விட்டர் அடுத்து வரும் இந்தப் புத்தகம்பற்றி மேலும் வாசிக்கவும் ஆன்லைனில் வாங்கவும் இங்கே செல்லலாம்: https://www.nhm.in/shop/978-81-8493-690-2.html *** என். [...]

சரியும் தவறும்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 21, 2011

என்னுடைய முந்தைய இரண்டு பதிவுகளில் (விழுந்த எண்ணங்கள் & மழை) ஒரு சின்னக் குழப்பம், ஒரு பெரிய குழப்பம். இதுபற்றி இங்கேயும் ட்விட்டரிலும் பலர் கருத்துச் சொல்லியிருந்தார்கள். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் விரிவான மின்னஞ்சல்கூட எழுதியிருந்தார். ஆனால் என்னுடைய வழக்கமான சோம்பேறித்தனத்தால் யாருக்கும் சரியாகப் பதில் சொல்லமுடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். விஷயத்துக்கு வருவோம். அந்த இரண்டு பதிவுகளின் இறுதியில் நான் சொன்ன விஷயங்கள் இவை: 1. ‘மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்று ஒரு பாடலில் வைரமுத்து எழுதியுள்ளார். [...]

விற்பனைப் பிரதிநிதிகள்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 20, 2011

இன்றைக்கு ஒரு விஷயம் படித்தேன். லீ அயகோக்கா (உச்சரிப்பு சரிதானா? எதற்கும் ஆங்கிலத்திலேயே சொல்லிவிடுகிறேன் : Lee Iacocca) பெரிய மேனேஜ்மென்ட் பிஸ்தா. மேல்விவரங்கள் விக்கிபீடியாவில் கிடைக்கும். அல்லது அவர் எழுதிய புத்தகங்களில். எண்பதுகளின் மத்தியில் லீ அயகோக்கா க்ரைஸ்லர் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருடைய பிரபலம் காரணமாக வெளி நிறுவனங்கள், அமைப்புகளெல்லாம் தங்களுடைய விழாக்களில் அவரைப் பேச அழைப்பது வழக்கம். இப்படி ஒரு பெரிய நிறுவனம் லீ அயகோக்காவைத் தொடர்புகொண்டது. ‘நீங்க எங்களோட சீனியர் மேனேஜர்ஸ் [...]

வரிசை

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 19, 2011

நண்பர் விக்கி (விக்னேஷ் அண்ணாமலை https://twitter.com/#!/VickyAnnap) ட்விட்டரில் ஒரு வித்தியாசமான படத்தைப் பிரசுரித்து ‘இது என்ன?’ என்று ஊகிக்கக் கேட்டிருந்தார்: சிறிது நேரம் கழித்து அவரே விடையும் சொன்னார். சென்னை ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட படம் இது. மறுநாள் காலை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான க்யூவுக்காக முந்தின நாளே சிலர் தங்களுடைய பொருள்களை வரிசையாக அடுக்கி வைத்து முன்பதிவு செய்துள்ளனர். அதாவது, ரிஸர்வேஷன் க்யூவுக்கு ரிஸர்வேஷன்! அந்தப் பொருள்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்: துணிக்கடை பை, [...]

மழை

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 19, 2011

சில பாடல்களை எந்நேரமும் கேட்கலாம். வேறு சில பாடல்களை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றும். நிறுத்த மனமே வராது. அடுத்த பாட்டுக்குப் போய்விட்ட எம்பி3 ப்ளேயரை மூக்கணாங்கயிறு போட்டுப் பின்னால் இழுத்து முந்தைய பாட்டை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்போம். நேரம் ஓடுவதும் தெரியாது, செய்யவேண்டிய வேலைகளும் மறந்துபோய்விடும். போனவாரம் அப்படி ஒரு பாட்டில் மாட்டிக்கொண்டேன் : ‘அமுதே தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே’ (http://www.youtube.com/watch?v=errR7iLYuuU). அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்தால் இன்றைக்கு இன்னொரு மூக்கணாங்கயிறு [...]

43 + 36 = 79

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 17, 2011

நீங்கள் கால்குலேட்டர் பயன்படுத்துகிறீர்களா? (மசாலா பொதிந்த எஞ்சினியரிங் கால்குலேட்டர் அல்ல, ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று கணக்குப் போடும் சாதா கால்குலேட்டர்) சிலரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலே கோபித்துக்கொள்வார்கள். ’சாதாரணக் கூட்டல் கழித்தல் கணக்குகளுக்கெல்லாம் கால்குலேட்டர் தேவைப்படும் அளவுக்கு எனக்கு மூளை மழுங்கிவிடவில்லை’ என்று ஆவேசமாகப் பதில் சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன். எனக்குக் கால்குலேட்டர்களின்மீது அவ்வளவு விரோதம் கிடையாது. ஆனால் அதைத் தேடி எடுக்கும் நேரத்தில் மனத்துக்குள் விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று நினைக்கிற சோம்பேறி. கால்குலேட்டர்களை ஏன் [...]

தூது (திடீர் தொடர்)

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 10, 2011

1 ‘நீ யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கியா கதிரு?’ சுகன்யாவின் அந்தக் கேள்வி கதிரேசனைத் தூங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருந்தது. எந்தப் பக்கம் திரும்பிப் படுத்தாலும் சினிமாவில் வருவதுபோல் அந்த ஐந்து வார்த்தைகளும் திரும்பத் திரும்பக் கேட்பதுமாதிரி ஓர் உணர்வு. எதற்காக அப்படிக் கேட்டாள்? எதார்த்தமாகத்தானா? அல்லது ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? என்னவாக இருக்கும்? கதிரேசனுக்கும் சுகன்யாவுக்கு பல வருடப் பழக்கம். காலேஜில் நான்கு வருடங்கள் பக்கத்து பெஞ்ச்களில் உட்கார்ந்து படித்தபின்னர் இங்கே பெங்களூரில் மூன்று வருடங்களாக ஒரே கம்பெனியில் குப்பை [...]

சேலம் புத்தகக் கண்காட்சி

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 9, 2011

நேற்று சேலம் புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். பொன்னுசாமி கவுண்டர் கல்யாண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகே. சுமார் 50 ஸ்டால்கள், அநேகமாக எல்லாப் பதிப்பகங்களும் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல் 10% தள்ளுபடி, அப்பள ஸ்டால், ஒரு மினி அபூர்வ நாணயங்கள் கண்காட்சி, ஓரமாக 50% விலையில் ஒரிஜினல் விசிடி, டிவிடிகள். கண்காட்சியில் பலரையும் ஈர்த்த விஷயம், வருகிற குழந்தைகளுக்கு இலவச உண்டியல் தருகிறார்கள். அதில் வருடம் முழுக்கக் காசு சேர்த்து புத்தகங்கள் வாங்கிக்கொள்ளும் நல்ல பழக்கத்தை ஊக்குவிக்க [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 101 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 183,725 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

அக்டோபர் 2011
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Follow

Get every new post delivered to your Inbox.

Join 101 other followers