Posted by: என். சொக்கன் on: December 23, 2011
இணையத்தில் @Ursquizzically என்ற புதிர் நிகழ்ச்சிக்காக என்னைச் சிறு பேட்டி எடுத்தார்கள், அந்தப் பேட்டியைக் கீழே உள்ள லிங்க்கில் கேட்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம், க்விஸ்ஸுக்காக நான் கேட்ட கேள்விகள் பின்னர் வரும், நீங்கள் கலந்துகொண்டு மார்க் வாங்கலாம் (நான் நல்ல வாத்தியாராக்கும், சிம்பிள் கொஸ்டின்ஸ்தான் கேட்பேன் N. Chokkan Interview For Yours Quizzically *** என். சொக்கன் … 23 12 2011
Posted by: என். சொக்கன் on: December 20, 2011
இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்: 1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது 2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி [...]
Posted by: என். சொக்கன் on: December 18, 2011
நங்கையின் பள்ளியில் தமிழ்ப் பாடங்கள் இல்லை. ஆகவே நம் ஊரிலிருந்து ஒண்ணாங்கிளாஸ் தமிழ்ப் புத்தகம் வாங்கித் தந்திருக்கிறோம். இன்று காலை அதில் ஒரு தமிழ்ப் பாடல் / Rhyme (எழுதியவர் பெயர் தெரியவில்லை) எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டிருந்தாள்: மல்லிகைப் பூவே! மல்லிகைப் பூவே! எங்க போறீங்க? மஞ்சள் சாமந்தி பூத்துச்சான்னு பார்க்கப் போறேங்க! சாமந்திப் பூவே! சாமந்திப் பூவே! எங்க போறீங்க? வெள்ளைத் தாமரை பூத்துச்சான்னு பார்க்கப் போறேங்க! தாமரைப் பூவே! தாமரைப் பூவே! எங்க போறீங்க? [...]
Posted by: என். சொக்கன் on: December 18, 2011
நேற்று ட்விட்டரில் எழுதிய 31 ட்வீட்களை நண்பர் டாக்டர் விஜய் (@scanman) தொகுத்துத் தந்தார். மொத்தமாகப் படிக்க செம ஜாலியாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று சில திருத்தங்கள், கூடுதல் குறிப்புகளுடன் இங்கே தொகுத்துவைக்கிறேன்: இன்று மார்கழி 1. வருடாந்திர வழக்கப்படி திருப்பாவை, திருவெம்பாவை 50 பாட்டுகளையும் ஒருமுறை நிதானமாகப் படித்து முடித்தேன். திருப்பாவைப் பாடல்களைவிட, நமக்கு நன்கு தெரிந்த ஆண்டாள் கதையே மேலோங்கி நிற்பதால், சூப்பர் ஸ்டார் படம் பார்க்கும் உணர்வு, ஆனால் திருவெம்பாவையில் அந்தப் பிரச்னை [...]