Posted by: என். சொக்கன் on: December 26, 2011

எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன. அவைபற்றிய சிறு அறிமுகம் இங்கே:
1. மொஸாட்
ஏற்கெனவே சிஐஏ, கேஜிபி ஆகிய உளவுத்துறைகளின் சரித்திரத்தை எழுதியுள்ளேன், அந்த வரிசையில் இஸ்ரேல் உளவுத்துறையாகிய மொஸாட் குறித்த விரிவான அறிமுக நூல் இது. ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் தொடராக வெளியானது.
2. திருப்பு முனைகள்
கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கி 2010ம் ஆண்டுவரை 107 வாரங்களுக்கு ‘முத்தாரம்’ இதழில் ‘திருப்பு முனை’ என்ற தொடரை எழுதிவந்தேன். வாரம் ஒரு பிரபலமான ஆளுமையை எடுத்துக்கொண்டு அவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த திருப்புமுனைச் சம்பவம் ஒன்றை கதை வடிவில் கொடுத்த இந்தத் தொடர் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது அதன் ஒரு பகுதி (50 கதைகள்மட்டும்) நூல் வடிவம் பெறுகிறது, மீதமுள்ள கதைகள் அடுத்த பாகமாகப் பின்னர் வெளிவரும்.
3. விண்டோஸ் 7 கையேடு
சென்ற வருடம் விண்டோஸ் XP குறித்த எளிய கையேடு ஒன்றை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, இப்போது விண்டோஸ் 7க்கான இந்த நூல். டெக்னிகல் மொழியில் அன்றி எவரும் வாசிக்கக்கூடிய மொழியில் கணினியைப் பயன்படுத்தும் நுட்பங்களை எழுத முயன்றுள்ளேன், கிட்டத்தட்ட dummies guideமாதிரி என்று வைத்துக்கொள்ளலாம்.
இந்த மூன்று புத்தகங்களையும் ‘மதி நிலையம்’ வெளியிடுகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் 018 மற்றும் 019 ஆகிய ஸ்டால் நம்பர்களில் இவற்றை வாங்கலாம். விலை விவரம் எனக்குத் தெரியவில்லை, தெரிந்ததும் இங்கே அப்டேட் செய்கிறேன்.
இவைதவிர, எனது இன்னும் சில நூல்கள் தயாரிப்பு நிலையில் உள்ளன. அவை புத்தகக் கண்காட்சிக்கு வருமா என்பது நிச்சயமாகத் தெரியாததால் இங்கே சேர்க்கவில்லை, தெரிந்ததும் சொல்கிறேன்.
என்னுடைய மற்ற பெரும்பாலான புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும். அவர்களது ஸ்டால் நம்பர்: F7 மற்றும் F20.
***
என். சொக்கன் …
26 12 2011
3 | GiRa
December 26, 2011 இல் 1:12 பிற்பகல்
மூன்று புத்தகங்களும் மூன்று விதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தகவல்களைச் சொல்கிறது.
இப்படி எந்த வகையானாலும் கலந்து கட்டுவது சிறப்பு.
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்களிடம் ஒரு உதவி வேண்டும். மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
6 | Kannabiran Ravi Shankar (KRS)
December 27, 2011 இல் 12:25 பிற்பகல்
வாழ்த்துக்கள்…திருப்பு முனைகள் வாசகன் என்ற முறையில்:)
இந்தப் புத்தகத்தைக் கண்காட்சியில் வாங்கப் போறேன், சென்னைக்கு வரும் போது!:)
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Theme: Albeo by Design Disease.
1 | கிரி ராமசுப்ரமணியன்
December 26, 2011 இல் 1:04 பிற்பகல்
’3’ வாழ்த்துகள் சார்!