துக்ளக் கார்ட்டூன்கள்
Posted December 1, 2008
on:எனக்கு ஒரு சந்தேகம், வாராவாரம் ‘துக்ளக்’கில் வரும் கார்ட்டூன்களை இந்த ‘துக்ளக்’ சத்யா ராமு, ஒவ்வொரு வாரமும் புதிதாக உட்கார்ந்து வரைகிறாரா? இல்லையா?
என்னுடைய சந்தேகத்துக்குக் காரணம் இருக்கிறது:
- அவருடைய கார்ட்டூன்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட இருபது அல்லது இருபத்தைந்து அரசியல் தலைவர்கள்தான் வந்துபோகிறார்கள்: தமிழகத்தில் கருணாநிதி, அன்பழகன், ஜெயலலிதா, ராமதாஸ், தா. பாண்டியன், தங்கபாலு, வடக்கே மன்மோகன் சிங், சோனியா, அத்வானி, எச்சூரி … அப்புறம் சில போலீஸ் காரர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்
- ஒரு பேச்சுக்கு, இருபது கதாபாத்திரங்கள் என்று வைத்துக்கொள்வோம்
- இந்த இருபது பேரும், சோஃபாவில் (அல்லது மேடையில்) கைகளை அகல விரித்தபடி உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, மேடையில் பேசும் நிலை, எங்கேனும் எட்டிப் பார்க்கும் நிலை … இப்படி 4 நிலைகளில்தான் பெரும்பாலும் வருகிறார்கள்
- ஆக, 20 * 4 = 80 படங்களை ஒரே ஒருமுறை வரைந்தால் போதும், இவற்றையே பலவிதமாக மாற்றி மாற்றி இணைத்து லட்சக்கணக்கான புது கார்ட்டூன்களை உருவாக்கலாம், ஒவ்வொருமுறையும் ’துக்ளக்’ சத்யா (நன்றி: பாரா) தருகிற வசனத்தைமட்டும் புதிதாக எழுதிவிட்டால் ஆச்சு, கார்ட்டூன் ரெடி!
ஒரு மகா கலையை நான் இப்படிக் கொத்துபரோட்டா போடுகிறேனே என்று கோபப்படுகிறவர்கள், இங்கே சென்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், உங்களுக்கும் அதே சந்தேகம் வருகிறதா? இல்லையா? 😉
http://aruvaibaskar.blogspot.com/2008/12/blog-post.html
***
என். சொக்கன் …
01 12 2008
(பின்குறிப்பு: இது சத்தியமா நையாண்டிதானுங்கோ, துக்ளக் (அ) ராமு (அ) சத்யா ரசிகர் மன்றத்தினர் சண்டைக்கு வரவேண்டாம்!
5 Responses to "துக்ளக் கார்ட்டூன்கள்"

/அவருடைய கார்ட்டூன்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட இருபது அல்லது இருபத்தைந்து அரசியல் தலைவர்கள்தான்…. /
திருவாளர். கழுதை ய விட்டுடீங்க..!!

1 | Pa. Raghavan
December 1, 2008 at 5:55 pm
துக்ளக் சத்யா கார்ட்டூனிஸ்ட் அல்லர். அவர் கார்ட்டூனுக்கு ஐடியா கொடுப்பதுடன் சரி. கார்ட்டூன் வரையத்தெரிந்த வேறொருவர் வரைவார்.