மனம் போன போக்கில்

நவீன மனுநீதி

Posted on: December 9, 2008

’அப்பா, நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’

’சொல்லும்மா’

‘இது நம்ம ப்ளெங்கூர் கதை இல்லை, தமிழ் நாட்டிலே நடந்தது, சரியா?’

‘ஓகே’

‘உனக்கு தமிழ் நாடு தெரியுமா? நம்ம தாத்தா இருக்கால்ல? அதுதான் தமிழ் நாடு, இது தமிழ் நாடு இல்லை, ப்ளெங்கூர்’

‘சரிம்மா, நீ கதையைச் சொல்லு’

’தமிழ் நாட்டில ஒரு ராஜா இருந்தாராம், அவர் பேரு … அவர் பேரு எனக்கு மறந்து போச்சு’

’பரவாயில்லை, வெறும் ராஜான்னு வெச்சுக்கலாம், நீ மேலே கதையைக் கவனி’

’அந்த ராஜாவுக்குக் குழந்தையே இல்லையாம், ரொம்ப நாள் கழிச்சு ஒரு குழந்தை பிறந்ததாம், பையன் குழந்தையாம்’

‘சரி’

‘அந்தக் குழந்தைமேல ராஜாவுக்கு ரொம்ப ஆசையாம், ஆனா அவன் சரியான நாட்டி பாய்’

’உன்னைமாதிரியா?’

‘நடுவில டிஸ்டர்ப் பண்ணாதேப்பா, கதை மறந்துடும்,. அந்த ராஜாவோட வீட்ல ஒரு பெரிய மணி கட்டியிருக்கும், டிங் டாங் பெல் புஸ்ஸீஸ் இன் தி வெல் பாட்டிலே வருமே, அந்தமாதிரி மணி’

‘ஓகே, அந்த மணி எதுக்கு?’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனா, ஒரு நாள் அந்த மணியை ஒரு மாடு முட்டிச்சாம்’

‘முட்டிச்சா, இல்லை அடிச்சுச்சா?’

‘முட்டிச்சுப்பா, உனக்குத் தெரியாது, நான் சொல்றேன் கேளு, மாடு மணியை முட்டிச்சா? ராஜா வந்து பார்த்தாராம், மாடு அவரை இழுத்துகிட்டுப் போச்சாம், காடு, மலையெல்லாம் கடந்து போனாங்களாம், கடைசியில பார்த்தா அங்கே ஒரு கன்னுக்குட்டி செத்துக் கிடந்ததாம்’

‘அச்சச்சோ, கன்னுக்குட்டிக்கு என்ன ஆச்சு?’

‘இந்த ராஜாவோட குழந்தை, ஒரு நாட்டி பையன் சொன்னேன்ல? அவன்தான் வேகமா டிராக் ஓட்டி இந்தக் கன்னுக்குட்டியைக் கொன்னுட்டான்’

‘ஓஹோ, உடனே ராஜா என்ன பண்ணார்?’

‘அவர் ஒண்ணுமே பண்ணலையாம்’

‘ஏய், நல்லா யோசிச்சுச் சொல்லு’

’எனக்குத் தெரியும்பா, நான் கதை சொல்லும்போது நீ டிஸ்டர்ப் பண்ணாதே, ஓகே?’

‘ஓகேம்மா, அப்புறம் அந்த மாட்டுக்கு என்ன ஆச்சு?’

’ராஜா எதுவும் பண்ண்லையா, அந்த மாட்டுக்குச் சரியான கோவம் வந்துச்சாம், நேராப் போய் அந்த நாட்டி பாயை முட்டிக் கொன்னுடுச்சாம்’

***

என். சொக்கன் …

09 12 2008

15 Responses to "நவீன மனுநீதி"

it was really nice. this is sth creative

ராஜா டிராக் எல்லாம் வந்ததால வழக்கம்போல ரெம்பிளேற் பின்னூட்டம் போட வந்தேன். ஆனா இது கலக்கல்!🙂

Kennedy, இலவசக் கொத்தனார்,

நன்றி!

இதை டைப் செய்ததுதவிர வேறெதும் என் பங்களிப்பு அல்ல🙂

– என். சொக்கன்,
பெங்களூர்.

அருமையா.. அருமை.

இப்படி புதுசா யோசிக்கனும்.

கதையில் இருந்து கிடைத்த நீதி:

1. கைவசம் துப்பாக்கியுள்ள மெய்காப்பாளர்களை ராஜா உடன் வைத்திருக்க வேண்டும். பையனை மாடு முட்ட வந்தால் சுட்டு விடலாம்.

2. தப்பு செய்தால் அம்மா மாட்டுக்கு தெரியாமல் செய்யத் தெரிய வேண்டும் என்பதை மகவுக்கு ராஜா கற்றுக் கொடுக்க வேண்டும்.

3. மணியை மாடு முட்டினவுடனேயே பீஃப் கபாபும் பெப்பரோனி பிட்சாவும் சமைக்க வைக்க வேண்டும்.

LOL, இது இன்னும் நவீனமா இருக்கேம்மா🙂

சமீபத்தில ‘Beef’ன்னு ஒரு புத்தகம் பார்த்தேன், நம்ம பா.ரா. ‘ஆயில் ரேகை’மாதிரி, உலக மாமிசச் சந்தை, போட்டி, பொறாமை, இன்னபிற அம்சங்களைச் சுவாரஸ்யமா எழுதியிருக்காங்க (இன்னும் படிக்கலை!)

– என். சொக்கன்,
பெங்களூர்.

கிளைமாக்ஸ் மாத்துறதுதான் இப்போதைக்கு fashion போல,🙂

🙂 குழந்தை சொல்லும் பாங்கு ரொம்ப அழகா இருக்கு..

thanks for your support..

thamizhstudio.com

உங்கள் மகள் சமூக நீத்துறைக்குபோனால் ஒரு பெரியாராகவோ
அல்லது விஞ்ஞானத்துறைக்குப் போனால் ஒரு நியூட்டனாகவோ வருங்காலத்தில் வர வாய்ப்பிருக்கிறது.
மாறுபட்ட சிந்தனாசக்தி பலருக்கும் வருவதில்லை.
சிலருடைய மூளைகளுக்கே அந்த அதிஷ்டம் அடிக்கிறது.

nalla irukku. Priya sonna kathayaa ithu?

சொக்கன், உங்க எழுத்துக்களிலேயே பிளாக் கட்டுரைகள்தான் ரொம்ப சுவாரசியமா இருக்கு.

பொதுவா படிக்க சுவாரசியமான பிளாக்குகள் ரொம்பக் குறைவு. பத்துகூட தேறாது. அந்தக் குறையை உங்க பிளாக் தீர்த்திருக்கு.

அங்கங்கே தெரிக்கிற உங்க நக்கல் எனக்குப் புதுசு. இந்தச் சொக்கனை நான் இப்பத்தான் பாக்கறேன்.

இப்ப மணி இரவு 12.30. உங்க சைட்ல சும்மா ஒரு வட்டம் இட்டுட்டு அசோகமித்திரனுக்குள்ளேயோ சுஜாதாவுக்குள்ளேயோ மூழ்கலாம்னுதான் உங்க சைட் பக்கம் எட்டிப் பார்த்தேன். ஆனா நீங்க என்னைக் கட்டிப் போட்டுட்டீங்க. சரளமான நடை, வித்தியாசமான அனுபவஙகள்னு ஒவ்வொரு கட்டுரையும் படிக்க அவ்வளவு ருசியா இருக்கு. சுயவிளம்பரம் (குறிப்பா உங்க புத்தகங்களுக்கான வெளம்பரம்) எதுவும் இல்லாம உங்க இணையத்தளம் இருப்பது முற்றிலும் புதுமை.

கணேஷ் சந்திரா, இளா, பினாத்தால் சுரேஷ், Boo’Morgan, ஆதித்தன், சுஜல், ச ந கண்ணன்,

நன்றி!

சுஜல்,

ஆமாம் (ப்ரியா / நங்கை சொன்ன கதை)

ச ந கண்ணன்,

ஒருகாலத்தில் நான் இப்படிதான் நிதானமாக எழுதிக்கொண்டிருந்தேன் (சிறுகதைகள் / இணையத்தில் எழுதிய மின்னஞ்சல்கள் / ’தினம் ஒரு கவிதை’யில் ‘மனம் போன போக்கில்’ பத்தி), பிறகு அ-புனைவு எழுதத் தொடங்கியபிறகு, வேறுவிதமான எழுத்து வந்துவிட்டது, இப்போது இரண்டையும் கலந்து முயற்சி செய்கிறேன், என்ன ஆகப்போகிறதோ, கடவுளுக்குதான் வெளிச்சம்!

அப்புறம் அந்தப் புத்தக விளம்பரங்கள், அதான் வலது பட்டையில் லிங்காக இருக்கிறதே, அது போதும், அளவுக்கு மிஞ்சினால் திகட்டிவிடும், அவ்வப்போது என் புதிய புத்தகங்கள் வந்தால்மட்டும் ஒரு சின்ன அறிமுக போஸ்ட் போடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

– என். சொக்கன்,
பெங்களூர்.

சரியான நாட்டி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 492 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 417,222 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: