மனம் போன போக்கில்

நொறுக்குத் தீனி – 1

Posted on: December 11, 2008

(முன்குறிப்பு: வாசிக்கும் புத்தகங்கள், பத்திரிகைகளில் சுவாரஸ்யமான பகுதிகள், சம்பவங்கள், குறிப்புகள் தென்பட்டால் டைரியில் குறித்துவைப்பேன், அதில் சிலதைச் சேர்த்து ‘நொறுக்குத் தீனி’ என்ற தலைப்பில் இங்கே பகிர ஆசை – உரிய ஆசிரியர், இதழ் பெயருடன், வாரம் ஒன்று, மாதம் இரண்டு என்றெல்லாம் கணக்கு வைத்துக்கொள்ளாமல்.

அந்த வரிசையில் இது முதல் தொகுப்பு, வரவேற்பு இருந்தால், தொடருவேன். 

– என். சொக்கன், பெங்களூர்)

ஜி. டி. நாயுடு கோவையில் நடத்திவந்த ஹாஸ்டலில் இப்படியொரு விதியை அமல்படுத்தியிருந்தார்: ‘ஒவ்வொரு மாணவரின் எடை, மாத இறுதியில் 5 பவுண்ட்களுக்குமேல் குறைந்திருக்கக்கூடாது, ஒவ்வொரு சமையல்காரரின் எடை, 5 பவுண்ட்களுக்குமேல் ஏறியிருக்கக்கூடாது’

(தகவல்: பா. அச்சுதன் – ஓம் சக்தி – டிசம்பர் 2008)

*********

‘ழ’ உச்சரிப்பு
அழகாய் வருகிறது
குடிகாரனுக்கு

(சு. கணேஷ்குமார் – குமுதம் – 10 டிசம்பர் 2008)

*********

லால் பகதூர் சாஸ்திரியின் உறவினர் ஒருவர் வீடு தேடி வந்தார், ‘என் பையன் உங்க போலீஸ் பரீட்சையெல்லாம் பாஸ் செய்துட்டான், உயரம் கொஞ்சம் கம்மியாம், நீ சொன்னாப் போதும், செலக்ட் ஆயிடும்’

‘போலீஸ் வேலைக்கெல்லாம் இவ்வளவு உயரம், இவ்வளவு மார்பளவுன்னு ரூல்ஸ் இருக்கு, அதை எல்லாம் மாற்ற முடியாது, மாற்றக்கூடாது!’

‘நீ நாலரை அடிகூட இல்லே! நீ போலீஸ் மந்திரி. எம் பையன் ஏதோ அரை அங்குலமோ, ஓரங்குலமோதான் குறைவு. அவன் போலீஸ்காரனாகக் கூடாதா?’

சாஸ்திரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது, ‘அம்மா, போலீஸ் மந்திரின்னா இவ்வளவு உயரம் இருக்கணும்ன்னு விதிமுறைகள் எதுவும் கிடையாது. நான் மூணடியா இருந்தாலும் மந்திரியா இருந்திருப்பேன். ஆனா போலீஸ் உத்தியோகத்துக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு. அதை மாத்தக்கூடாது, அந்த அதிகாரம் யாருக்கும் இல்லை’

வந்தவர் சாஸ்திரியின் பேச்சில் சமாதானமானார்.

(’மேதை’ டிசம்பர் 2008 மாத இதழிலிருந்து)

*********

குறிஞ்சித் தேனின் இனிமை, முல்லைப் பாலின் சுவை, மருத நிலத்தின் வளம், நெய்தலின் உழைப்பு, பாலையின் சகிப்புத்தன்மை ஆகியவை சேர்ந்து அமைவதுதான் வாழ்க்கை.

(தொல்காப்பியரின் மணிமொழிகள் – ‘சிந்தனையாளர் தொல்காப்பியர்’ என்ற நூலிலிருந்து – லோ. சுப்ரமணியன் – பிரேமா பிரசுரம் – விலை ரூ 12/-)

*********

கவிஞர் பழமலய் வீட்டு வரவேற்பறையில் காணப்படும் வாசகம்:

வருக – வணக்கம்
அமர்க – அருந்துக
வந்தது எதற்கோ? – முந்தி அதைப் பேசுவோம்
வினை முடிப்பீர் – வேலைகள் உள
நேரம் போற்றுக – நிறைவுடன் செல்க

(தகவல்: அ. யாழினி பர்வதம் – பெண்ணே நீ – டிசம்பர் 2008)

15 Responses to "நொறுக்குத் தீனி – 1"

லால் பகதூர் சாஸ்திரி – ஜி. டி. நாயுடு துணுக்குகள் அருமை.

துவேஷம் – மொக்கை – காழ்ப்பு – மேதாவிதனம் இல்லாமல் வலைப்பதிவு படிக்கிறது எவ்வளவு சுகமா / இனிமையா இருக்கு…

வரவேற்க என்ன செய்யணும்? பூர்ண கும்பம்? 🙂

சார்…. நீங்கள் தான் … கிழக்கு பதிப்பகத்தின் கூகிள் தேடு எழுதியவரா?

இது நல்லா இருக்கே. இந்த மாதிரியே தொடரவும்.

கணேஷ் சந்திரா, iLa,

நன்றி,

இலவசக் கொத்தனார்,

பூர்ண கும்பமெல்லாம் வேண்டாம், யாரும் திட்டாம இருந்தாலே நான் தொடர்வேன், அதில வெக்கம், மானமெல்லாம் பார்க்கிற பழக்கம் கிடையாது 😉

Hari,

//நீங்கள்தான் கூகுள் தேடு எழுதியவரா?//

ஆமாம், ஏன்? அடிக்க அட்ரஸ் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? 🙂

– என். சொக்கன்,
பெங்களூர்.

குறிஞ்சித் தேனின் இனிமை-னு ஆரம்பிக்கற அந்த சிறுகுறிப்பு படிச்சுட்டு, எதுவும் எது சார்ந்த இடமும் எது-னு யோசிச்சு, குழம்பிப் போயி, +2-வில் பிரெஞ்சு எடுக்கமாட்டேன்னு அடம் பிடிச்சு தமிழ் படிச்சேனே, அது இதுக்குத் தானான்னு நொந்து….புண்ணியம் கட்டிக்கிட்டீங்க சாமி!

//ஆமாம், ஏன்? அடிக்க அட்ரஸ் தேடிக்கொண்டிருக்கிறீர்களா?//

இல்லை சார்… 🙂 . நல்ல புத்தகம். நேற்று உங்களின் பில்கேட்ஸ் , நாராயணமூர்த்தி, அம்பானி போன்ற புத்தகங்கள் வாங்கினேன். 🙂

வருக! வருக!!. தங்கள் நொறுக்குத்தீனி அரிதாகவும் சுவையாகவும் இருந்தது. தொடரட்டும் தங்கள் பணி.
சங்கர்லால்

வரவேற்பு வரவேற்பு வரவேற்பு!

Hari,

நன்றி, படித்துவிட்டு நல்லது, கெட்டதுகளை எழுதுங்கள், இங்கேயோ, அல்லது ஈமெயிலிலோ (nchokkan@gmail.com)

Sankarlal55,

நன்றி!

பினாத்தல் சுரேஷ்,

உங்களை மாதிரியே அச்சு அசல் ஒருத்தரை இங்கே பெங்களூர்ல இன்னிக்கு பார்த்தேன் … எப்படி? 🙂

– என். சொக்கன்,
பெங்களூர்.

உமா,

குழப்பமே வேண்டாம்:

1. மலையிலே பூக்கும் பூ குறிஞ்சி
2. காட்டில் பூப்பது முல்லை
3. வயலில் பூப்பது மருத மலர்
4. கடலில் நெய்தல் மலர்
5. ’பாலை’க்கு விளக்கமே வேணாம் 😉

இதையெல்லாம் தெளிவா விளக்கி யாரானும் ஒரு சினிமாப் பாட்டு எழுதிட்டாங்கன்னா, நாம எப்பவும் மறக்கமாட்டோம்!

– என். சொக்கன்,
பெங்களூர்.

1] ஜி. டி. நாயுடு விடுதியில் படிக்கும் காலத்தில் சமையல்காரர்களால் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு இருக்கலாம்.
[சாம்பார் என்று சொல்லி பெங்களூரில் ஊற்றப்படும் இனிப்புக்கஞ்சி அவருக்கு அளிக்கப்பட்டிருக்கலாம்.]

2] குடிகாரன் மற்றொரு சொல்லையும் பிற தமிழர்களிடமிருந்து மாறுபட்டவகையில் உணர்ச்சியும் நறுமணமும் பொங்கிவழிய சொல்கின்றான்
“உவ்வே….. உவ்வ்வே!!!”

3]லஞ்சம், ஊழல், காக்காய்பிடித்தல் போன்றவை எல்லாம்
மகாத்மா காந்தி இறந்தபின்புதான் இந்தியாவுக்குள்வந்தன
என்று கொழும்பில் படித்துக்கொண்டிருந்த காலங்களில்
அப்பாவித்தனமாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

இப்பத்தான் எல்லாம் விளங்குது!!!:-D
“வ்ந்தார்கள் வென்றார்கள்” எழுதிய மதனை வைத்து
மேற்சொன்ன குற்றங்களின் தோற்றுவாய் என்ன
எப்படி, எந்தக்காலத்திலிருந்து வளர்ந்ததன? என்று
புத்தகம் போடச்சொல்லலாம்!
அதற்கு “தந்தார்கள் வென்றார்கள்” என்று பெய்ர்வைக்கலாம்.

4]குறிஞ்சி மலைகளின் “ஏற்றத்தாழ்வு”,
முல்லைக்காட்டின் “இருள்”,
மருத வயலின் “களைகள்”,
நெய்தற்கடற்புரத்தின் “புயற்காற்று”,
பாலையின் “கடும் வெம்மை”
எல்லாம் சேர்ந்து துன்புத்துகின்றன என்பது உண்மைதான்.
ஆனால் அவைதான் மனத்தை பக்குவப்படுத்துகின்றன.

5] சட்டங்கள் பெரும்பாலும் சட்டங்களாகவும்
வாசகங்கள் பெரும்பாலும் வாசகங்களாகவுமே
இருக்கின்றன.
நம்பாவிட்டால் அன்புமணி ராமதாஸ் அவர்களை
கேட்கவும்!

———————————————————————–
நான் உங்கள் எழுத்தில் நான் படித்தவை இரண்டு.
1]அம்பானி வெற்றிக்கதை
2]கூகுள்
இரண்டிலுமே கலக்கிவிட்டீர்கள்.

மற்றப்புத்தகங்களை வாங்க காசுசேர்த்துக்கொண்டிருக்கின்றேன். 😀

வருக வருக என வரவேற்கிறோம்..! 🙂

முத்தாரம்-ல எடிட்டர் போஸ்ட்டுக்கு முயற்சி பண்ணுறீங்களோன்னு சந்தேகமா இருக்குது? என்னவோ போங்க!

ஆதித்தன், Bee’morgan,

நன்றி!

முகில்,

ப்ளாக்ல குமுதம், விகடன், வண்ணத்திரை இருந்தாப் போதுமா? முத்தாரம், கல்கண்டு வாணாமா? ஏதோ நம்மால முடிஞ்சது!

– என். சொக்கன்,
பெங்களூர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 498 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 420,788 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: