களிமண், மூளை
Posted December 19, 2008
on:சென்ற வாரத்தில் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு மிகச் சுவாரஸ்யமானது, மனவியல் குறித்த பல விஷயங்களை விரிவாகக் கற்றுக்கொண்டோம். அவற்றை இங்கே விரிவாக எழுதினால் காபிரைட் வழக்குப் போடுவேன் என்று என்னுடைய மரியாதைக்குரிய குருநாதர் மிரட்டுவதால், வேறு விஷயம் பேசலாமா?
இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கும்போது, எங்களுடைய மேஜையில் ஒரு சிறிய உலோகக் குவளை வைத்திருந்தார்கள். அதனுள் இரண்டு களிமண் உருண்டைகள்.
களிமண் என்றால் நிஜக் களிமண் இல்லை, குழந்தைகள் விளையாடுமே அந்த பொம்மை / செயற்கைக் களிமண், பல வண்ணங்களில்.
இந்தப் பயிற்சி வகுப்புக்கும் களிமண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தபடி குவளையைக் கவிழ்த்தால், சில வயர்கள், ஐஸ் க்ரீம் மர ஸ்பூன்கள் வந்து விழுந்தன. சிறிய, ஆனால் வண்ணமயமான ஒரு குப்பைத் தொட்டியைப் பார்ப்பதுபோல் இருந்தது.
‘இதெல்லாம் எதற்கு?’ என்று குருநாதரிடம் விசாரித்தோம்.
‘சும்மா’ என்றார், ‘என் வகுப்பு போரடித்தால், இதை வைத்து விளையாடுங்கள், ஜாலியாகப் பொழுது போகும்’
அவர் வகுப்பு ஒரு விநாடிகூடப் போரடிக்கவில்லை. ஆனால் நாங்கள் பாடம் கேட்டபடி ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தோம். களிமண்ணில் வெவ்வேறு உருவங்கள் செய்து பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருந்தது.
அதுமட்டுமில்லை, அக்கம்பக்கத்தில் ஒவ்வொருவரும் அதை என்னென்னவிதமாக வனைக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனூண்டு களிமண், அதோடு மனித மூளையும் கொஞ்சம் ஆர்வமும் சேர்ந்துகொள்கிறபோது, எத்தனையோ உருவங்கள் பிறந்துவிடுகின்றன!
எந்நேரமும் பரபரப்பின் உச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஐடி, மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள், இதுபோல் மேஜையில் நான்கைந்து களிமண் உருண்டைகளை வைத்துக்கொள்ளலாம், அவ்வப்போது கொஞ்சம் சத்தமில்லாமல் விளையாடி ரிலாக்ஸ் செய்யலாம், தினமும் 5 அல்லது 10 நிமிடம் போதும் என்றார் குருநாதர்.
ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின்போது, இந்தக் களிமண் சிற்பங்களைப் படம் பிடித்துத் தொகுத்துவைத்தேன், இங்கே அவற்றை ஒரு சிறிய ஆல்பமாகத் தந்திருக்கிறேன்.
ஒரு விஷயம், செல்ஃபோனில் பிடிக்கப்பட்ட படங்கள் என்பதால், அத்தனை தெளிவாக இருக்காது.
இன்னொரு விஷயம், இதில் மூன்று பொம்மைகள்மட்டும் நான் செய்தவை. அவை எவை என்று பின்னூட்டத்தில் மிகச் சரியாகச் சொல்லும் முதல் நண்பருக்கு, ஒரு புத்தகப் பரிசு 😉
#1. அடி ஆத்தி, ஆஆஆஆடு
#2. இதென்ன? குலோப் ஜாமூனா?
#3. களிமண்ணில் சார்மினார்
#4. குச்சி ஐஸ்
#5. முயலே முயலே வா வா
#6. ’எலி’மையான பொம்மை
#7. கோன் ஐஸ்க்கு எதுக்குய்யா குச்சி? அபத்தம்!
#8. இது பெங்குவினாம்! உங்களுக்கு அப்படித் தெரியுதா?
#9. (கொஞ்சம் உடைந்துபோன) கண்ணாடி
#10. நுணுக்கமான வேலை, ஆனா பார்க்கப் பயமா இருக்கே!
#11. இதுவும் பயமுறுத்துது
#12. இது என்ன? வேற்றுகிரகவாசியா?
#13. பாடகர் … டிசம்பர் சீஸனுக்கு அல்ல
#14. இது ஆமையாம், பார்க்க நட்சத்திர மீன்மாதிரி இருக்கு
#15. பகடை பகடை
#16. இது தொப்பியா? அல்லது திருவோடா?
முக்கியமான பின்குறிப்பு: தலைப்பில் உள்ள இரு வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துவிடவேண்டாம், அர்த்தமே மாறிவிடும்!
***
என். சொக்கன் …
19 12 2008
15 Responses to "களிமண், மூளை"

#4, #15, #16


மனவியல் குறித்து தாராளமாய் பதிவு எழுதுங்கள்.
குருநாதர் வழக்கு போடுவேன் என்று மிரட்டினால்….,
அதுக்கென்ன்?
ஒரு அஞ்சு வருசம் உள்ள இருந்திட்டு வாங்களேன்.
பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் கம்பிஎண்ணிதான்,
பெரிய பெரிய ஆளுங்களா ஆனாங்களாம்.
😀
நீங்க இப்பவே பெரீய[ 😀 ] ஆளா இருக்கிறீங்க!
வாழ்க்கையில
இன்னும் பெரீய நிலைக்கு போகலாம்!


hello sir
ennai nyabagam irukaa?


பகடை, ஆமை, குச்சி ஐஸ்


2) குலாப் ஜாமூன் சாப்பிட்டால்
3) பல்வலி வரும்
4) ஐஸ்க்ரீம் சாப்பிட முடியாது
என களிமண்ணில் மெசேஜோடு சிறுகதை வடித்த அண்ணன் சொக்கன் வாழ்க!! 🙂
டிஸ்கி: போன போட்டிக்குப் போட்ட விடையே சரியான்னு சொல்லலை!!


ரிசல்ட் என்ன ஆச்சு? பாசா பெயிலா 🙂


அது என்ன புத்தகம் என்றாவது சொல்லிவிடுங்கள் 😦


கொழும்பு தமிழ்ச் சங்க நூலகத்தில் யாரோ ஒரு ரஷ்ய எழுத்தாளர் எழுதிய “போரும் அமைதியும்” என்று “மாபெரும்” புத்தகத்தை கண்டிருக்கிறேன். இந்த ஜென்மத்தில் அதை வாசித்து முடிக்கமுடியாது என்பதால் அதை தொட்டதில்லை.
அந்தப் புத்தகத்தை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
அதுதான் உங்களுக்கு சரியான தண்டனை
ஹி ஹி ஹி 😀

1 | Bee'morgan
December 19, 2008 at 2:26 pm
computer G lock 😛 A) பெங்குவின்,B) பகடை, C)குச்சி ஐஸ்