மனம் போன போக்கில்

சென்னை புத்தகக் கண்காட்சி 2009: இது புதுசு

Posted on: December 22, 2008

இந்த வருடம் (2009) சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி எனது நான்கு புத்தகங்கள் வெளியாகின்றன, அவைபற்றிய சிறுகுறிப்புகள் இங்கே:

1. எனக்கு வேலை கிடைக்குமா?

 Enakku Velai Kitaikkuma

குங்குமம் இதழில் எட்டு வாரங்கள் ‘லட்சத்தில் ஒருவர்’ என்ற பெயரில் வெளியான தொடரின் விரிவான புத்தக வடிவம்.

‘லட்சத்தில் ஒருவர்’ தொடர், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதியவர் வேலை பெறுவதற்கான சில வழிகளைமட்டுமே எடுத்துக்காட்டியது. ஆனால் இந்தப் புத்தக வடிவத்தை, ஒரு குறிப்பிட்ட துறையுடன் நிறுத்திக்கொள்ளாமல் எல்லோருக்கும் பொருந்தும்வகையில் மாற்றி அமைத்திருக்கிறோம்.

இந்நூலில் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அம்சம் ’Soft Skills’ எனப்படும் மென்கலைகளைப்பற்றிய விரிவான அறிமுகம், அவைகுறித்த விளக்கங்கள், பயிற்சிமுறைகள், சின்னச் சின்ன உதாரணக் கதைகளுடன்.

மேலும் விவரங்கள் இங்கே

2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை

Amul

குஜராத் மாநிலப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற நீளமான பெயர், அடையாளம் கொண்ட அமுலின் வெற்றிக் கதை.

அமுல், இந்தியாவின் முதல் கூட்டுறவுப் பால் பண்ணை அல்ல. எனினும், மற்ற யாரும் அடையாத வெற்றியை அது பெற்றது, வெண்மைப் புரட்சிக்குக் காரணமாகவும் அமைந்தது. இதற்கான பின்னணிக் காரணங்கள், அமுலின் நிறுவனத் தலைவரான திரிபுவன் தாஸ், அதன் முதன்மைப் பிதாமகராக இயங்கிய தலைவர் வர்கீஸ் குரியன், தொழில்நுட்ப வெற்றிக்குக் காரணகர்த்தாவாக அமைந்த ‘கில்லி’கள், வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் அமுல் சந்தித்த பிரச்னைகள், சவால்கள், வில்லன்கள், அவர்களை எதிர்கொண்ட விதம் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் விரிவாக உண்டு.

3. ரதன் டாடா

ratan-tata

டாடா குழுமத்தின் இப்போதைய தலைவர் ரதன் டாடாவின் விரிவான வாழ்க்கை வரலாறு.

பிரச்னை என்னவென்றால், டாடா நிறுவனத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாருடைய வாழ்க்கை வரலாறையும் தனியாகச் சொல்லவே முடியாது. ஏதோ ஒருவிதத்தில் அவர்களுடைய கதை முந்தைய தலைமுறையினர், டாடா நிறுவனர்களுடன் பின்னிப் பிணைந்து காணப்படும்.

ஆகவே, ரதன் டாடாவின் கதையைச் சொல்லும் இந்நூல், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வரலாறையும் தொட்டுச் செல்கிறது. ரதன் டாடாவின் அமெரிக்க வாழ்க்கை, இந்தியாவுக்குத் திரும்பிய கதை, ஆரம்ப காலத் தடுமாற்றங்கள், பலத்த போட்டிக்கு நடுவே அவர் டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்படும்வரை நிகழ்ந்த போராட்டங்கள், ஜே. ஆர். டி. டாடாவின் ஆளுமை, ருஸி மோடியின் உள் அரசியல், டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸில் ரதன் டாடா கொண்டுவந்த முன்னேற்றங்கள், இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப அவர் டாடா குழுமத்தில் செய்த மாற்றங்கள், and of course, Tata Indica, அதன் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் நுட்பம், இனி வரப்போகும் Tata Nano, மேற்கு வங்காளத்தில் நானோ தொழிற்சாலை சந்தித்த பிரச்னைகள்,. நிஜமாகவே ரதன் டாடாவின் வாழ்க்கை வண்ணமயமானதுதான்.

4. அம்பானிகள் பிரிந்த கதை

ambani-brothers

கிழக்கு பதிப்பகத்தின் முதல் புத்தகம், நான் எழுதிய ‘அம்பானி: ஒரு வெற்றிக் கதை’. கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சிபோல் இப்போது இந்தப் புத்தகம் உருவாகியிருக்கிறது. கிழக்கின் ஜுனியர் ‘மினிமேக்ஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது.

அந்த திருபாய் அம்பானியின் வாழ்க்கைக் கதையில், அவருடைய மகன்கள் லேசாக எட்டிப் பார்த்துவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் இங்கே, அவர்கள்தான் கதை நாயகர்கள், அல்லது வில்லன்கள், முகேஷ், அனில் அம்பானி இருவரின் தனிப்பட்ட ஆளுமையில் தொடங்கி, அவர்களுடைய மனைவிகள், அப்பா, அம்மாவுடன் அவர்களுக்கிருந்த உறவு நிலை எனத் தொடர்ந்து, பிஸினஸில் யார் எப்படி, எவருடைய கோஷ்டி எங்கே என்ன செய்தது, எப்படிக் காய்களை நகர்த்தியது என்று சுட்டிக்காட்டி,. இந்தியாவின் ‘First Business Family’யில் அப்படி என்னதான் நடந்தது என்று முழுக்க முழுக்கத் தகவல்களின் அடிப்படையில் சொல்லும் முயற்சி.

பரபரப்பாக எழுதவேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய? அம்பானி என்று தொடங்கினாலே ஏதோ ஒருவிதத்தில் அந்தப் புத்தகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டுவிடுகிறது 🙂

***

என். சொக்கன் …

22 12 2008

9 Responses to "சென்னை புத்தகக் கண்காட்சி 2009: இது புதுசு"

உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
[பெங்களூரில் எப்போது கிழக்கு சிவக்கும்? 🙂 ]

ஆதித்தன்,

//பெங்களூரில் எப்போது கிழக்கு சிவக்கும்?//

எனக்குத் தெரிந்து கிழக்கு புத்தகங்கள் பெங்களூரில் எங்கும் விற்பனைக்குக் கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன், வானதி, விகடன் பிரசுர நூல்கள் லாண்ட்மார்க், ஹிக்கின் பாதம்ஸில் கிடைக்கின்றன, கிழக்கை எங்கும் காணேன், ஹரன் பிரசன்னாவோ பத்ரியோ பதில் சொன்னால்தான் உண்டு

கிழக்கைத் தேடி பலமுறை forumல் உள்ள லாண்ட்மார்க்கிற்கு சென்றிருக்கிறேன். அங்கே அபிதான சிந்தாமணி, பெரியபுராண விளக்கவுரை போன்ற யாரும் பொதுவாக வாங்காத நூல்கள் சிலவற்றை ஒரு ஓரத்தில் வைத்திருக்கிறார்கள்.

உங்களுடைய
1]அம்பானி
2]கூகுள்
இரண்டையும் திருநெல்வேலிக்கு சென்ற ஒரு நண்பியிடம்
சொல்லி வாங்கினேன்.

அண்மையில் பலஸ் கிரவுண்டில் நடந்த புத்தகத்திருவிழாவில் சில தமிழ்ப்பதிப்பகங்கள் கடைவிரித்து நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. சிலர் ‘கிழக்கு பதிப்பகம் வந்திருக்காங்களா?” என்று கடைப்பொறுப்பாளர்களை கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஆதித்தன்,

பேலஸ் கிரவுண்ட் புத்தகக் கண்காட்சிக்குக் கிழக்கு பதிப்பகம் ஒவ்வோர் ஆண்டும், வரும், இந்த வருடம்தான் மிஸ்ஸிங்

ஆனால், மற்ற ஸ்டால்களில் கிழக்கு புத்தகங்கள் கிடைத்ததே, நீங்கள் கவனிக்கவில்லையோ?

ஆம்! சில புத்தகங்கள் இருந்தன.
குறிப்பாக டாலர்தேசம் வாங்கலாமா என்று யோசித்தேன்.
ஆனால் கடைவரிசையில் முந்திக்கொண்டு கடைபோட்ட
விகடன் பிரசுரம் செய்த சதியால்,
பணப்பையில் இருந்த திருமகள் ஏற்கனவே முற்றுமுழுதாக கலைமகளாக மாறி முதுகில் ஏறிவிட்டாள்.

மிஞ்சி இருந்த 50ரூபாய்க்கு “டாலர் தேசத்தை” விலைகேட்டால்
பாரா அடிக்கவே வந்துவிடுவார் என்றெண்ணி திரும்பிவிட்டேன்.

ஆதித்தன், சொக்கன்: கன்னிங்ஹாம் சாலையில் (Indian Express Junction அருகில்) இருக்கும் “ரிலையன்ஸ் டைம் அவுட்” -ல் கிழக்கு பதிப்பகப் புத்தகங்கள் கிடைக்கின்றன. புதிய புத்தகங்கள் கிடைப்பதில்லையென்றாலும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் ஓரளவு உள்ளன.

தகவலுக்கு நன்றி ஐயா! தேடிப்பார்க்கிறேன்.

[…] சென்னை புத்தகக் கண்காட்சி 2009: இது புது… […]

[…] கிழக்கு வழியாக வெளியாகும் என்.சொக்கன…: 1. எனக்கு வேலை கிடைக்குமா?, 2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை 3. ரதன் டாடா 4. அம்பானிகள் பிரிந்த கதை […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 531 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 595,918 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: