Archive for January 4th, 2009
ஒரு தகவல்
Posted January 4, 2009
on:சில வாரங்களுக்குமுன், இந்திய வங்கி ஒன்றுடன் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம்.
இந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிக்கு என்னுடைய நன்றி!
கெட்டதைச் சொன்னதுபோல் நல்லதையும் சொல்லவேண்டும் என்று இந்தத் தகவலை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.
***
என். சொக்கன் …
04 01 2009