மனம் போன போக்கில்

புலி வால் (அல்லது) எலி வேட்டை

Posted on: January 7, 2009

கல்லூரி நண்பன் ஒருவனை நீண்ட நாள்களுக்குப்பின் சந்தித்தேன். டெல்லி அருகே குர்காவ்னில் வேலை செய்துகொண்டிருக்கிறான், மனைவி, ஆறு வயதுப் பெண் குழந்தையுடன் அங்கேயே வசிக்கிறான்.

நான் பணி நிமித்தம் மூன்று முறை குர்காவ்ன் சென்று திரும்பியிருக்கிறேன், மற்றபடி அந்த ஊரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆகவே குர்காவ்ன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அவனிடம் விசாரித்தேன்.

’என்ன வாழ்க்கையோ போ’ என்று சலித்துக்கொண்டான்.

இந்த பதிலை அவனிடம் நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவனும் அவனுடைய மனைவியும் காதலித்து மணந்தவர்கள், பெரிய நிறுவனமொன்றில் நல்ல வேலையில் இருக்கிறார்கள், நிச்சயமாக இந்தியர்களின் சராசரி வருமானத்துக்குப் பலபடிகள் மேலேதான் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள், குர்காவ்னில் சொந்த வீடு, கார், பக்கத்திலேயே குழந்தையைச் சேர்க்க சர்வதேசப் பள்ளி, வேறு என்ன வேண்டும் மனிதனுக்கு?

என்னுடைய கருத்தை அவன் ஏற்கவில்லை, ‘இங்கெல்லாம் எவ்வளவு சம்பாதிச்சாலும் போதாதுப்பா’ என்றவன், அதற்கு ஓர் உதாரணமும் சொன்னான்.

அவனுடைய மகள், ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறாள், அவளுடைய மாதப் பள்ளிக் கட்டணத்தில், நாங்கள் இருவரும் எஞ்சினியரிங் முழுக்கப் படித்து முடித்துவிட்டோம்.

விஷயம் அதில்லை, அந்தச் சிறுமி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பள்ளி சென்றால், சக மாணவர்கள், மாணவிகள் கேட்கிறார்களாம், ‘இந்த வெகேஷனுக்கு நீங்க புதுசா எந்த நாட்டுக்குப் போனீங்க?’

ஆறு வயதில் இதுபோன்ற Peer Pressure தொடங்கினால், இது எங்கே போய் முடியும்?

***

என். சொக்கன் …

07 01 2009

15 Responses to "புலி வால் (அல்லது) எலி வேட்டை"

“ராமலிங்க ராஜூ’ வில் போய் முடியலாம்.

msathia,

ஆச்சர்யம், நானும் அதேதான் நினைத்தேன், ஆனால் ரொம்ப வலிய நுழைத்ததுபோல் இருக்கும் என்று பதிவில் எழுதவில்லை!

புலி வால் சரி.. ஆனால் எலி வேட்டை பிரியலியே.. கொஞ்சம் சபீனா கிடைக்குமா?

Bee’morgan,

எலி வேட்டை = Rat Race (For Survival / Salary😉

புலிவால் அல்லது எலிவேட்டை அல்லது திரிசங்கு சொர்க்கம்😉

ஓ.. அதைத்தான் சொன்னீங்களா.. நானும் யோசிச்சேன்..😉 ஆனா, race ம் வேட்டையும் கொஞ்சம் இடிச்சது.. அதான்..

Bee’morgan,

எலிப் பந்தயம்ன்னு சொல்லியிருக்கலாம், வேட்டை இன்னும் ‘அழுத்த’மா இருக்கும்ன்னு நினைச்சேன், சரியா வரலைபோலிருக்கு🙂

//“ராமலிங்க ராஜூ’ வில் போய் முடியலாம்.//

நீங்க தான் புலி வால் என்று தெளிவாக கூறிவிட்டீர்களே.

அங்கு தான் முடியும்

அது சரி

நீங்க பொறியியல் படிக்க எவ்வளவு செலவாகியது🙂🙂

மாதக்கட்டணம் அதை விட அதிகம் இருக்க முடியாதே (அதிகபட்சம் மாதம் 15,000 இருக்கலாம்)

புருனோ,

//நீங்க பொறியியல் படிக்க எவ்வளவு செலவாகியது :)//

எங்கப்பாவைக் கேட்டால் பைசா சுத்தமாகக் கணக்குச் சொல்வார், நான் குத்துமதிப்பாகச் சொல்கிறேன், வருடம் சுமார் 6000 முதல் 8000 என்று நினைவு (தேர்வுக் கட்டணம் உள்பட)

ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் பில் தனி, அது படிப்புக் கணக்கில் வராதே😉

//மாதக்கட்டணம் அதை விட அதிகம் இருக்க முடியாதே (அதிகபட்சம் மாதம் 15,000 இருக்கலாம்)//

அட நீங்க வேற, பெங்களூர்ல சில பள்ளிகளில் 5 லட்சம் வருடக் கட்டணமாம், மாதம் 40000க்குமேல் வருது!

பணம் வந்துட்டா அந்தஸ்தைக் காட்டிக்கிறதுக்கு அப்படித்தான் புலம்புவாங்க. இங்க அரசாங்க பள்ளிகள் எல்லாம் நல்லாத்தான இருக்கு. நண்பர் என்ன சர்வதேசப் பள்ளிக்கூடத்திலேயாப் படிச்சி குர்காவுன் போனாரு?

குர்கான் குரங்கு🙂

//நண்பர் என்ன சர்வதேசப் பள்ளிக்கூடத்திலேயாப் படிச்சி குர்காவுன் போனாரு?//

நண்பரும் சரி, நானும் சரி, அரசாங்கப் பள்ளியில் தமிழ் மீடியம் படித்தவர்கள்தான்,. இப்போது அவருடைய சிந்தனை வேறு தளத்தில் இருக்கிறது என்று சொல்ல வந்தேன்!

//இங்க அரசாங்க பள்ளிகள் எல்லாம் நல்லாத்தான இருக்கு//

அரசாங்கப் பள்ளிகளும் சரி, கொள்ளைக் கட்டணம் பிடுங்காத நடுத்தர நிலைத் தனியார் பள்ளிகளும் சரி, நன்றாகவே இருப்பதாகதான் நான் நினைக்கிறேன். படிக்கிற பிள்ளை எங்கேயும் படிக்கும்🙂

ஆனால், நாம் சம்பாதிப்பதெல்லாம் குழந்தைகளுக்காகதானே என்று நினைக்கிறவர்கள், இருப்பதிலேயே சிறந்த பள்ளிக்குச் செலவழிக்கத் தயங்குவதில்லை, அதன்மூலம் தங்களுடைய ‘பொறுப்பை’ நிறைவேற்றிவிடுவதாகக் கருதுகிறார்கள், அதன்பிறகும் குழந்தை படிக்காவிட்டால் தைரியமாகத் திட்டலாம் பாருங்கள்😉

அப்புறம் இப்படிப் புலம்புதல் உப-கௌரவம்😉

இந்தப் பதிவுபற்றி கூகுள் அரட்டையில் ஒரு நண்பர் சொன்னதாவது:

‘மாசம் இருபதாயிரம், இருபத்தைந்தாயிரம் செலவு பண்ணி ஏன் படிக்கணும்? ஏன் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்? அதை அப்படியே 15 வருஷம் சேர்த்துவெச்சா பேங்க்ல போட்டு வட்டிக் காசிலே நல்லா உட்கார்ந்து சாப்பிடலாமே’
😉

//இங்கெல்லாம் எவ்வளவு சம்பாதிச்சாலும் போதாதுப்பா’

இது தான் பிரச்சனையின் ஆரம்பம்.

குந்தவை,

//இது தான் பிரச்சனையின் ஆரம்பம்.//

உண்மை. துரதிருஷ்டவசமாக, முடிவும் அதுதான், புலி வால் சங்கிலி🙂

அன்பின் சொக்கன்

உங்களை மகளை அடுத்த வருடம் ஜெ.பி நகரில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பள்ளியில் சேர்க்கலாம்

வருட கட்டணம் ரூ 10000 மட்டுமே.அதுவும் இரு தவணையில் கட்டலாம். இடையில் வேறு எதற்கும் பணம் கேட்க மாட்டார்கள்.

பேருந்து வசதி உண்டு.கட்டணம் தூரத்திற்கேற்ப..

நேரடியாக முதல்வரை பார்த்து உங்கள் மகளை பள்ளியில் சேர்க்கலாம்.

பிள்ளைகளை அடிப்பதில்லை.

CBSE,ICSE என்ற பாட வகைகள் உண்டு,

அன்புடன்
அரவிந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 492 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 417,389 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: