மனம் போன போக்கில்

தினசரி ஐம்பது ரூபாய்

Posted on: February 18, 2009

எங்கள் அடுக்ககத்தில் (அபார்ட்மென்ட்) மொத்தம் எட்டே வீடுகள்.

தரைத் தளத்தில் ஒன்று, மூன்றாவது மாடியில் ஒன்று, இடையில் உள்ள இரு மாடிகளிலும் தலா மூன்று. ஆகமொத்தம் எட்டு வீடுகள். நாங்கள் இருப்பது முதல் மாடியில்.

இப்படி ஒரு ‘சிறிய’ அபார்ட்மென்டில் இருப்பது பலவிதங்களில் வசதி. கிட்டத்தட்ட தனி வீட்டின் சவுகர்யம் உண்டு, அதைவிடக் கூடுதல் பாதுகாப்பு.  அதேசமயம், நூறு, இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்ககங்களில் பக்கத்து, எதிர் வீட்டுக்காரர்களின் பெயரோ முகமோகூடத் தெரிந்துகொள்ளாமல் ஒரே வளாகத்தினுள் பல வருடங்கள் வாழ்ந்துவிடுவது போன்ற அபத்தங்கள் நேராது.

ஆனால், இதற்கு நேர் எதிராக, சிறிய அபார்ட்மென்ட்களுக்கென்றே தனித்துவமான சில பிரச்னைகளும் உண்டு. உதாரணமாக, ஏழெட்டுப் பேர்மட்டும் எல்லாப் பராமரிப்புச் செலவுகளையும் பகிர்ந்து கொள்வதால், மாதந்தோறும் இதற்காகவே ஏகப்பட்ட தொகையை எடுத்துவைக்கவேண்டியிருக்கும். நீச்சல் குளம், உடற்பயிற்சி அறை, பூங்கா, குழந்தைகள் விளையாட்டுக் கூடம் போன்ற ஆடம்பர சவுகர்யங்கள் எவையும் இல்லாமலேயே ‘Maintenance Charge’ ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என்று எகிறும்.

இப்படி எங்கள் அடுக்ககத்தை இப்போது சூழ்ந்திருக்கும் ஒரு புதுப் பிரச்னை, லிஃப்ட் – மின் உயர்த்தி.

மூன்றே மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் லிஃப்ட் அவசியம் இல்லைதான். ஆனாலும் அது இல்லாவிட்டால் வீடுகள் விலை போகாது என்பதால், எங்கள் அபார்ட்மென்டைக் கட்டியவர் மீன் பிடிப் படகொன்றை நிமிர்த்தி வைத்தாற்போல் சின்னதாக ஒரு லிஃப்ட் அமைத்துக் கொடுத்துவிட்டார்.

ஆரம்பத்தில் எல்லாம் ஒழுங்காகதான் சென்றுகொண்டிருந்தது. இரண்டு வருடம் கழித்து, லிஃப்ட் தயாரிப்பு நிறுவனம் வருடாந்திரப் பராமரிப்புக் கட்டணமாகப் பதினேழாயிரத்துச் சொச்ச ரூபாய் கேட்கிறது.

வருடத்துக்குப் பதினேழாயிரம் ரூபாய் என்றால், தினமும் கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய் கணக்கு ஆகிறது. லிஃப்டுக்காக இவ்வளவு செலவழிக்கவேண்டுமா என்று நாங்கள் இப்போது யோசிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

மறுபடியும் எங்களுடைய அபார்ட்மென்ட் கட்டமைப்பை யோசியுங்கள். கீழ்த் தளத்தில் இருப்பவருக்கு லிஃப்ட் தேவையில்லை, முதல் மாடியில் இருக்கும் மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களும் லிஃப்டுக்குக் காத்திருக்கிற, கதவு திறந்து, மூடுகிற நேரத்தில் சட்டென்று படியேறி மேலே வந்துவிடுகிறோம்.

ஆக, இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் உள்ள 4 வீடுகளுக்குதான் லிஃப்ட் தேவை. மற்றவர்கள் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை லிஃப்ட் பயன்படுத்தினால் அபூர்வம்.

இதனால், லிஃப்ட் பராமரிப்புக்காகப் பதினெட்டாயிரம் ரூபாயில் எட்டில் ஒரு பங்கைத் தர நாங்கள் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக லிஃப்டை நிரந்தரமாக மூடி வைத்துவிடலாம் என்பது எங்கள் கருத்து.

ஆனால், மற்ற நான்கு வீடுகளைச் சேர்ந்தவர்களும் இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். அவர்களுக்கு லிஃப்ட் தேவைப்படுகிறது. தம் பிடித்து தினமும் இரண்டு மாடி ஏறி இறங்க அவர்கள் தயாராக இல்லை.

‘சரி, நீங்கள் நாலு பேரும் சேர்ந்து, இந்தப் பதினெட்டாயிரத்தைச் செலுத்திவிடுங்கள், லிஃப்ட் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றேன் நான், ‘நாங்கள், அதாவது மற்ற நாலு வீட்டைச் சேர்ந்தவர்களும் அந்த லிஃப்டைத் தொடமாட்டோம்’

இதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். எல்லோரும் சம அளவு பணம் போட்டு லிஃப்ட் பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்தியே தீரவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.

எப்படி இருக்கிறது கதை? நான் எப்போதாவது பயன்படுத்துகிற லிஃப்டுக்காக, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வெட்டியாகச் செலுத்தவேண்டுமா? என் நெற்றியில் ’இளிச்சவாயன்’ என்று தமிழிலோ, கன்னடத்திலோ எழுதியிருக்கிறதா என்ன? நான் நிச்சயமாகப் பர்ஸைத் திறக்கப்போவதில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த இழுபறி எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இதைச் சுமுகமாகத் தீர்க்க உங்களிடம் ஏதேனும் வழி இருக்கிறதா?

***

என். சொக்கன் …

18 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

27 Responses to "தினசரி ஐம்பது ரூபாய்"

//இதைச் சுமுகமாகத் தீர்க்க உங்களிடம் ஏதேனும் வழி இருக்கிறதா?//

நீங்கள் பணம் செலுத்துவது தான் 🙂 🙂 ஹி ஹி ஹி

ஜோக்ஸ் அபார்ட்

மின்தூக்கி (http://ta.wiktionary.org/wiki/lift) நிறுவனத்திடம் சொல்லி அந்த கட்டணத்தை குறைக்க சொல்லலாம்

//மீன் பிடிப் படகொன்றை நிமிர்த்தி வைத்தாற்போல் சின்னதாக ஒரு லிஃப்ட் அமைத்துக் கொடுத்துவிட்டார்.//

உவமையை ரசித்தேன்

அது தவிர யோசித்து பார்த்தீர்கள் என்றால் வருடம் 17,000
மாதம் 1500

8 வீட்டிற்கு என்றால் அதிக பட்சம் 200

கொடுத்து விட்டு போகிறது சனியன் என்று விட்டு விடுவது நலம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. விஷயம் 200 ரூபாய் அல்ல. ”நான் பயன்படுத்தாத பொருளுக்கு நான் ஏன் பணம் தர வேண்டும்” என்பது தான் உங்கள் கேள்வி என்றால்…..

ஒரு அலுவலகத்தில் 28ஆம் தேதி நாள் பணி சேர்கிறீர்கள்

30ஆம் தேதி பணி ஓய்வு பெறுபவருக்கு அளிக்கப்படும் தங்க கடிகாரம், சந்தன மாலை ஆகியவற்றிற்கு பணம் பிரிக்கையில் நீங்கள் (அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாவிட்டால் கூட) தருவதில்லையா

அது போல் தான் 🙂 🙂

Chokkan,

You won’t like my reply, but here I go:

The ground floor guy has absolutely no use for the lift – he can’t use it even if he wants to on a regular basis. So he is the only guy who can possibly escape sharing the cost (one caveat to this below).

The rest of you – could possibly use it in some circumstances:

1. Elderly people/relatives visiting
2. When ill
3. To go to the terrace for assorted solar activities (caveat from above – this could apply to ground floor guy also)

As importantly, you are participating in the increase in the resale value by virtue of having a lift. Even if it is just first floor, I would hesitate to buy your house without lift because my mom can’t do stairs.

So, sharing it is – 7 ways or 8 ways…

Sorry,

Srikanth

புரூனோ, Srikanth,

நன்றி!

//மின்தூக்கி (http://ta.wiktionary.org/wiki/lift) நிறுவனத்திடம் சொல்லி அந்த கட்டணத்தை குறைக்க சொல்லலாம்//

நல்ல யோசனை. முயற்சி செய்து பார்க்கிறேன் 🙂

//8 வீட்டிற்கு என்றால் அதிக பட்சம் 200
கொடுத்து விட்டு போகிறது சனியன் என்று விட்டு விடுவது நலம்//

உண்மைதான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் நல்லுறவு தொடர்வதற்காக என்று கொடுத்துத் ‘தொலைக்க’லாம் … கடைசியில் இதுதான் நடக்கும் என்று என் மனைவியும் சொல்கிறார் 😉

//You won’t like my reply, but here I go://

There is nothing like I don’t like the reply, I just wanted to get a logical answer to this puzzle, and your detailed explanation really helps – சார் வக்கீலா? 🙂

//So, sharing it is – 7 ways or 8 ways…//

We are working on another plan, We are thinking of moving some part of our maintenance bank account balance to fixed deposit and make the interest cover atleast half of this maintenance, Plus some bargaining from lift maintenance company may reduce our burden!

நான் இதை இங்கே எழுதியதன் நோக்கம், இதுபற்றி நண்பர்கள் எண்ணத்தைக் கேட்பதும், நகர வாழ்க்கையில் நேரும் சுவாரஸ்யமான இழுபறிகளில் ஒன்று என்பதால் இதனைப் பதிவு செய்துவைப்பதும்தான்.

நம்மூரில் இதை சுமுகமாக தீர்க்க முடியும் என்று தோன்றவில்லை. நம் பயன்பாட்டுக்கே என்றாலும், இன்னொருவரிடம் “பீராய” முடியுமா என்று நினைப்பது இங்கு ஒரு பொதுப்புத்தி!

அது போலவே, நிறைய அபார்ட்மெண்ட்கள் இருந்திருந்தால், ஒவ்வொருவர் பங்கும் சின்னதாகவே இருந்திருக்கும். நீங்களும் தர மாட்டேன் என்று அடம் பிடிக்க மாட்டீர்கள், ஏன், முடியாது 🙂

எ.அ.பாலா

சீனியர்,

நீங்கள் சொல்வது ரொம்பச் சரி!

எட்டு வீடு என்பதால்தான் உரசல், நூறு வீடு என்றால் அத்தனை பேருடன் சண்டை போட யாருக்கு நேரம் இருக்கும்? கேட்டதைக் கொடுத்துவிட்டு ஒழிஞ்சது தலைவலி என்று போய்விடுவோமே 🙂

“கிழக்குப்பதிப்பகம்” தவிர்த்து தங்களுக்கு “நட்பு வட்டமே” கிடையாதா?

எ.கொ.இ.சொ ? 😉 (சொ=சொக்கன்) 🙂

சீனியர்,

🙂

அந்த லிஸ்ட், பதிவு ஆரம்பித்த புதிதில் போட்டது, அதன்பிறகு ஒழுங்காக அப்டேட் செய்யவில்லை, இந்த வார இறுதியில் செய்யப் பார்க்கிறேன் 😀

1. லிப்ட் பயன்படுத்தாம இருக்கிறது தான் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. அதனால காசு கொடுத்தால் கூட தொடர்ந்து படியையே பயன்படுத்துங்க 🙂

2. காசு கொடுக்கவேண்டிய (போனா போவுது ) சூழல் வந்தால், அடிக்கடி அந்த லிப்டைப் பயன்படுத்தி மேல் வீட்டுக் காரங்க வீட்டுக்குப் போயி
“லிப்ட் இருக்குல்லயா அதான் சும்மா மேலையும் கீழயும் போயிட்டிருக்கென்னு சொல்லுங்க” அவங்களே லிப்ட் வேணாங்கற முடிவுக்கு வந்துடுவாங்க 🙂

3. இல்லேன்னா லிப்ட்ல ஒரு ஆமையைப் புடிச்சு போடுங்க… “ஆம புகுந்த லிப்ட் ஆகாது” ன்னு ஒரு கதை உடலாம்…

🙂

xavier,

நன்றி 🙂

ரொம்பக் குறும்பு மூட்ல இருக்கீங்க போல 😉 2வது ஐடியாவுக்கு காபிரைட் வாங்கி வைங்க, வடிவேலுவுக்கு ஏத்தமாதிரி இருக்கு 😉

//லிப்ட் பயன்படுத்தாம இருக்கிறது தான் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. அதனால காசு கொடுத்தால் கூட தொடர்ந்து படியையே பயன்படுத்துங்க//

ஆஃபீஸ், வீடு ரெண்டு இடத்திலயும் நான் எப்பவும் லிஃப்டைப் பயன்படுத்தறது இல்லை 🙂 காசு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அதன்மூலம் கொஞ்சம் கலோரி எரியட்டுமே 🙂

//அதன்மூலம் கொஞ்சம் கலோரி எரியட்டுமே//

அதே ! கலோரி ங்கற வார்த்தையைக் கேட்டாலே பயமா இருக்கு 🙂

சேவியர்,

‘கலோ’ரின்னு சொல்லும்போதே ‘கிலோ’ ஞாபகம் வர்றதுதான் காரணம் 😉

சொக்கன்

இது ஒரு பொது வசதி. இதற்கான செலவை எல்லோரும் பகிர்ந்து கொள்வதுதான் முறை. நாளை இது போன்ற மற்ற வ்சதிகளுக்கும் இப்படிப்பட்ட சண்டை வர வாய்பிருக்கிறது. நான் ஒரு மாதம் ஊரில் இல்லை அதனால் நான் பரர்மரிப்பு செலவே தரமாட்டேன் எனச் சொல்வது போல்தான்.

மின் தூக்கி வேண்டும் வேண்டாம் என்ற முடிவு செய்ய வேண்டும். வேண்டும் என முடிவெடுத்தால் அனைவரும் பகிர்தல்தான் முறை.

இலவசக் கொத்தனார்,

//மின் தூக்கி வேண்டும் வேண்டாம் என்ற முடிவு செய்ய வேண்டும். வேண்டும் என முடிவெடுத்தால் அனைவரும் பகிர்தல்தான் முறை//

உண்மை. ஆனால் 4 பேர் வேண்டும், 4 பேர் வேண்டாம் என்று சொன்னால் ஜனநாயக முறைப்படி அந்த லிஃப்டை என்ன செய்வது? 🙂

உபயோகம் இருக்கோ இல்லையோ, நீங்க உபயோகப்படுத்துறீங்களோ இல்லையோ, பொதுவா இருக்கிறதுக்கு பணம் குடுத்துதான் ஆவனும். நீங்க தண்ணியே உபயோகப்படுத்தறது இல்லைங்கிறதுக்காக காசு கட்டாம இருக்க முடியுமா? நானும் 8 வீட்டுல ஒரு வீட்டை வாங்கினவன். எனக்கும் இந்தப்பிரச்சினை வந்தது. மேலே உள்ளது முடிவுன்னு சொன்னாங்க 8வீட்டு(பட்டி) நாட்டாமை

சொக்கன், உங்க அசோசியேஷன் விதிமுறைகளின் படி வேணுமா வேண்டாமா என்ற முடிவு எடுத்துக்க வேண்டியதுதான். 4-4 என்னும் பொழுது பிரசிடண்ட் ஒரு எக்ஸ்ட்ரா வோட்டு போடலாம் என இருந்தால் அவரு உங்க மாடிக்காரராய் இருத்தல் உத்தமம்!

நண்பரே, அடுக்கு மாடி குடியிருப்புகளில் குடியிருக்கும் போது, இதை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துதான் போக வேண்டும்.

// இப்படி ஒரு ‘சிறிய’ அபார்ட்மென்டில் இருப்பது பலவிதங்களில் வசதி. கிட்டத்தட்ட தனி வீட்டின் சவுகர்யம் உண்டு, அதைவிடக் கூடுதல் பாதுகாப்பு. //

ரூ. 2,500 விட பாதுகாப்பு அவசியமில்லையா..

பணம் வரும், போகும். மற்ற அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள், உங்களிடம் தன்மையாக பழகுகின்றார்கள் என்றால், இருக்கும் இடம் வசதியாக இருந்தால், பணத்தைப் பற்றி கவலைப் படாமல் கொடுத்துவிடலாம்

Its like paying taxes. It should be shared. Simple. What % you use doesn’t matter.

You pay road taxes for the roads you dont use.

அடுத்த முறை இந்தியா வரும் போது, உங்கள் வீட்டுக்கு எப்படி வருவது..

லிஃட் இல்லாட்டி.. கீழே இருந்தே ஹாய்.. பை சொல்ல வேண்டியதுதான்.

I think the following idea may help you

if your apartment is a 4 storied.

then allocate the expense like this

4th floor – 4 portions
3rd Floor – 3 portions
2nd Floor – 2 portions
1st Floor – 1 portions
Ground Floor – Nothing.

ie there are totally 10 portions that needs to be shared

for ex. if the total expense is rs13,400 then rs13400/10 = rs 1340

4th floor residents will pay rs1340*4 = rs 5360
3th floor residents will pay rs1340*3 = rs 4020
2th floor residents will pay rs1340*2 = rs 2680
1th floor residents will pay rs1340*1 = rs 1340

if 4th floor have 2 residents one having 1000 sq feet and other having 3000 sq feet. then let them divide the amount per square feet.

ie 5360/4000= 1.34 /sq.ft

hope this is reasonable

I think the following idea may help you

say if your apartment is a 4 storied.

then allocate the expense like this

4th floor – 4 portions
3rd Floor – 3 portions
2nd Floor – 2 portions
1st Floor – 1 portion
Ground Floor – Nothing.

if you total lift expense is rs13400 then for 1 portion you can allocate
rs 13,400 then rs13400/10 = rs 1340

ie each floor will be sharing the following amount

4th floor residents will pay rs1340*4 = rs 5360
3th floor residents will pay rs1340*3 = rs 4020
2th floor residents will pay rs1340*2 = rs 2680
1th floor residents will pay rs1340*1 = rs 1340

if 4th floor have 2 residents one having 1000 sq feet and other having 3000 sq feet. then let them divide the amount per square feet. (ie 5360/4000= 1.34 /sq.ft)

hope this is reasonable.. I have given higher weightage to top floor since they will be using the lift most

even though me or my family members do not use the lift despite residing at second floor, however we pay the maintenance for lift and etc., every month hence just to have the satisfaction of using the lift what i do is when ever i climb up or climb down just press all the nos in the lift……. while getting down if the lift is stationed then i press 0,1,3, and 4 and start getting down using the stairs while climbing up if the lift is stationed at ground floor then i press 1,2,3,4 and start climbing the stairs. even i know despite the shortage of power what i am doing is wrong i have a satisfaction at the end of the day we are also using the lift….

ila, இலவசக் கொத்தனார், இராகவன், கணேஷ், ரவிச்சந்திரன் பெருமாள், அசோகன் அருணாசலம்,

நன்றி!

//8வீட்டு(பட்டி) நாட்டாமை//

அட, நீங்களும் நம்ம கட்சிதானா? 🙂

//அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள், உங்களிடம் தன்மையாக பழகுகின்றார்கள் என்றால், இருக்கும் இடம் வசதியாக இருந்தால், பணத்தைப் பற்றி கவலைப் படாமல் கொடுத்துவிடலாம்//

உண்மை. அதனால்தான் சில மாற்று ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்

//அடுத்த முறை இந்தியா வரும் போது, உங்கள் வீட்டுக்கு எப்படி வருவது..
லிஃட் இல்லாட்டி.. கீழே இருந்தே ஹாய்.. பை சொல்ல வேண்டியதுதான்.//

அடப் பாவி மனுஷா, ஒரு மாடி ஏறமுடியாதா? இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்!

வேணும்ன்னா, எங்க பால்கனியில இருந்து ஒரு நூல் ஏணி போட்டு நாங்களே உங்களை மேல ஏத்திடறோம், சரியா? 😉

//I think the following idea may help you//

very interesting! ஒரு மினி பட்ஜெட்டே போட்டுக் கலக்கிட்டீங்க!

//while getting down if the lift is stationed then i press 0,1,3, and 4 and start getting down using the stairs while climbing up if the lift is stationed at ground floor then i press 1,2,3,4 and start climbing the stairs//

ஆஹா, செம பழிவாங்கலா இருக்கே 😉

ஊரோடு ஒத்து (spelling correct தானே?) வாழ்!

ஒரு நவராத்திரிக்குக் கூப்பிடக் கூடவா லிப்ட் ஏற மாட்டிங்க?

காணும் பொங்கலுக்கு பீச் இல்லாததுனால கப்பன் பார்க்குக்கு பதிலா மொட்டை மாடிக்கு போனா இந்த ரூபாய் மொத்தமும் வசூல் ஆகிடாது?

சரி, தீபாவளிக்கு (தமிழ்நாடு வராத பட்சத்தில்) மூனுக்கு ராக்கெட் எங்கேயிருந்து விடுவீங்க?

வத்தல், வடாம் எல்லாம் ரெடிமேட் தானா?

சப்போஸ் மூணாவது மாடி ஆள் வீடு விக்கிறாரு, உங்க மனைவி, ஒண்ணாவது மாடிய வித்துட்டு ”ஹனி 3க்கு போகலாம்”னு சொல்றாங்கன்னு வைங்க – அப்போ 1க்கு வருபவர் இதையே சொன்னா சும்மா விடுவீங்களா? (அதுக்கு யோசனைக்கு தானே இந்த பதிவே போட்டிருக்கேன்னு சொல்றீங்களா?)

சத்தியமூர்த்தி,

நன்றி!

//நவராத்திரிக்குக் கூப்பிட, காணும் பொங்கலுக்கு மொட்டை மாடி, மூனுக்கு ராக்கெட், வத்தல், வடாம்//

என்னாங்க இது, லிஃப்ட் சேல்ஸ்மேன்மாதிரி ‘மேலே போவதன் மகிமை’களை அடுக்கறீங்களே? 🙂

//அதுக்கு யோசனைக்கு தானே இந்த பதிவே போட்டிருக்கேன்னு சொல்றீங்களா?//

அதேதான் 😉

//என்னாங்க இது, லிஃப்ட் சேல்ஸ்மேன்மாதிரி ‘மேலே போவதன் மகிமை’களை அடுக்கறீங்களே?//

🙂

வாழ்கையில் நீங்கள் மேலே, மேலே போக வாழ்த்துகிறேன்.

வாழ்க்கையில் இருந்து மேலே அல்ல!

சத்தியமூர்த்தி,

🙂 நன்றி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,274 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Advertisements
%d bloggers like this: