மனம் போன போக்கில்

தொடர்?

Posted on: February 28, 2009

சென்ற வாரம் சென்னையில் ஒரு பத்திரிகை நண்பரைச் சந்தித்தபோது சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை எழுப்பினார்:

‘இன்றைய தமிழ் தினசரி, வார, மாதப் பத்திரிகைகள்ல, நீங்க தவறாம படிக்கிற, அடுத்த அத்தியாயம் எப்ப வருமோன்னு பதைபதைப்போட எதிர்பார்க்கிற, ஒருவேளை தவறவிட்டுட்டா மனம் வருத்தப்படறமாதிரி தொடர் கதை அல்லது தொடர் பகுதி (Non-fiction Series) ஏதாவது இருக்கா?’

அவர் கேட்டுவிட்டாரே என்பதற்காக எவ்வளவோ யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம், எதுவும் தோன்றவில்லை. நேர்மையாக அன்றி, சும்மா பாவ்லாவுக்காகக்கூட ஒரு பதில் சொல்லமுடியவில்லை.

உங்களுக்கு எப்படி?

***

என். சொக்கன் …

28 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

6 Responses to "தொடர்?"

அடுத்த பகுதியை பதைப‌தைப்புடன் எதிர்பார்க்கும் தொடர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாஞ்சில் நாடனின் ‘தீதும் நன்றும்’ தொடர் பகுதி தமிழ்ச்சுவையுடனும் சமூகச்சிந்தனையுடனும் உள்ளது.

jaggybala,

நன்றி!

தீதும் நன்றும் அவ்வப்போது வாசிக்கிறேன். அது தொடராக அன்றி தனித்தனிக் கட்டுரைகளாக ரசிக்கப்படவேண்டியது என்று நினைக்கிறேன்

Offcourse ..Pa Ragavan Yutham Saranam is belongs to this … for me.

Gana,

நன்றி!

சொன்னால் அடிப்பார். ஆனால், பா.ரா.வின் தொடர்கள் எதையும் நான் வாசிப்பதில்லை, ’டாலர் தேசம்’ தொடங்கி, புத்தகமாக வந்ததும் ஒரே நாளில், அல்லது ஒரு வார இறுதிக்குள் படித்து முடிக்கிற சவுகர்யம் பழகிவிட்டது 😉

அய்யோ வந்திடுச்சே என்று எல்லோரும் பதைபதைக்கும் தொடர் ஒன்று எனக்கு மிக நெருங்கிய ஒரு எழுத்தாளர் எழுதுகிறார்.

அவர் பெயரை நான் சொல்லப்போவதில்லை. வேண்டுமானால் சிலபல க்ளூக்கள் தருகிறேன்.

1. தொடர் வலையில் வருகிறது.

2. தொடர் 27 வருடங்கள் வரப் போகிறது (இன்ஷா அல்லா, கிருஷ்ணா, ஜீஸஸ்)

3. இதுவரை இரண்டுதான் வந்திருக்கிறது; இன்னும் 998 வரப்போகிறது

4. படித்தவர்கள் எல்லோரும் ஒரு மனதாக மகத்தான கழுத்தறுப்பு என்று பாராட்டுகிறார்கள் (சன் டிவி டாப்டென் வலைத்தொடர் என்று ஒன்றிருந்தால் இந்த தொடரை வாங்கி முதல் நம்பரில் போடுவார்கள் என்றால் புரிந்து கொள்ளுங்கள்).

5. சில பேர் “அய்யோ கொல பண்றாம்பா” என்று கூக்குரல் இடுகிறார்கள்.

6. தொடரின் பெயர் “படித்ததும் பிடித்ததும்” – இன்னும் 27 வருடம் தொடரப் போகும் மகா மெகா தொடர்

இத்தனை க்ளூக்களுக்கும் பிறகு கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக – கடைசி க்ளு – எழுதுபவர் பெயர் – ச வில் ஆரம்பித்து தி யில் முடியும், பெயரின் முதல் பாதிக்கு உண்மை என்று அர்த்தம் வரும், இரண்டாவது பாதிக்கு நீங்கள் உருவம் கொடுங்கள்!

R Sathyamurthy,

நன்றி 🙂

நீங்கள் சொல்வது ‘அந்த’ எழுத்தாளர்தானே? எனக்குப் புரிகிறது 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 523 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 502,964 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
%d bloggers like this: