Archive for August 1st, 2009
ஏ. ஆர். ரஹ்மான் புத்தக அறிமுக நிகழ்ச்சி
Posted by: என். சொக்கன் on: August 1, 2009
- In: A. R. Rahman | Announcements | Books | Invitation | Media | Music | Radio (FM) | Uncategorized | ViLambaram
- 12 Comments
நாளை (2 ஆகஸ்ட் 2009, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ஏ. ஆர். ரஹ்மான் புத்தகம்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கி என்னுடன் உரையாடியவர்: திரைத்துறை ஆய்வாளர், எழுத்தாளர் திரு. பா. தீனதயாளன். தொலைபேசிவழியே திரு. ஐகாரஸ் பிரகாஷ், பாடகி ஸ்ரீமதுமிதா ஆகியோரும் பங்கேற்றார்கள்.
சுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, ’ரோஜா’வுக்கு முன்பிருந்து, ஸ்லம்டாக் மில்லியனர்’வரையிலான ரஹ்மானின் இசைப் பயணத்தைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். நிகழ்ச்சியின் இடையே, ‘ஏ. ஆர். ரஹ்மான்’ புத்தகத்திலிருந்து இரண்டு முக்கியமான பகுதிகளை ஒலி வடிவத்திலும் கேட்கலாம்.
ஆஹா FM சென்னையில்மட்டும்தான் ஒலிபரப்பாகிறது என்று நினைக்கிறேன், பெங்களூரில் நானோ, சேலத்தில் என் பெற்றோரோ இந்த நிகழ்ச்சியைக் கேட்க வாய்ப்பில்லை. இணையத்தில் கிடைக்கிறது என்கிறார்கள், ஆனால் அதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. இணையத்தில் http://www.loka.fm என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டு, அரை மணி நேரத் தாமதத்தில் (அதாவது, இந்திய நேரம் 12 மணி நிகழ்ச்சி 12:30க்கு வரும்) இந்த நிகழ்ச்சியைக் கேட்கலாம்.
ஆகவே, சென்னையில் உள்ள நண்பர்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கருத்துச் சொல்லவும், மற்றவர்கள், தங்களுக்குத் தெரிந்த சென்னைவாசிவர்களுக்குத் தகவல் சொல்லவும். நன்றி 🙂
Update:
1. நண்பர் கணேஷ் சந்திரா வலைப்பதிவில் இந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவைக் கேட்கலாம், அல்லது MP3 வடிவில் இறக்கிக்(டவுன்லோட் செய்து)கொள்ளலாம்:
http://chumma.posterous.com/kizhakku-pod-cast-2
நன்றி கணேஷ் சந்திரா!
2. இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html
***
என். சொக்கன் …
01 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க