மனம் போன போக்கில்

ஏ. ஆர். ரஹ்மான் புத்தக அறிமுக நிகழ்ச்சி

Posted on: August 1, 2009

நாளை (2 ஆகஸ்ட் 2009, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ஏ. ஆர். ரஹ்மான் புத்தகம்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கி என்னுடன் உரையாடியவர்: திரைத்துறை ஆய்வாளர், எழுத்தாளர் திரு. பா. தீனதயாளன். தொலைபேசிவழியே திரு. ஐகாரஸ் பிரகாஷ், பாடகி ஸ்ரீமதுமிதா ஆகியோரும் பங்கேற்றார்கள்.

ARR_Wrapper

சுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, ’ரோஜா’வுக்கு முன்பிருந்து, ஸ்லம்டாக் மில்லியனர்’வரையிலான ரஹ்மானின் இசைப் பயணத்தைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். நிகழ்ச்சியின் இடையே, ‘ஏ. ஆர். ரஹ்மான்’ புத்தகத்திலிருந்து இரண்டு முக்கியமான பகுதிகளை ஒலி வடிவத்திலும் கேட்கலாம்.

ஆஹா FM சென்னையில்மட்டும்தான் ஒலிபரப்பாகிறது என்று நினைக்கிறேன், பெங்களூரில் நானோ, சேலத்தில் என் பெற்றோரோ இந்த நிகழ்ச்சியைக் கேட்க வாய்ப்பில்லை. இணையத்தில் கிடைக்கிறது என்கிறார்கள், ஆனால் அதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. இணையத்தில் http://www.loka.fm என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டு, அரை மணி நேரத் தாமதத்தில் (அதாவது, இந்திய நேரம் 12 மணி நிகழ்ச்சி 12:30க்கு வரும்) இந்த நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

ஆகவே, சென்னையில் உள்ள நண்பர்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கருத்துச் சொல்லவும், மற்றவர்கள், தங்களுக்குத் தெரிந்த சென்னைவாசிவர்களுக்குத் தகவல் சொல்லவும். நன்றி🙂

Update:

1. நண்பர் கணேஷ் சந்திரா வலைப்பதிவில் இந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவைக் கேட்கலாம், அல்லது MP3 வடிவில் இறக்கிக்(டவுன்லோட் செய்து)கொள்ளலாம்:

http://chumma.posterous.com/kizhakku-pod-cast-2

நன்றி கணேஷ் சந்திரா!

2. இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

***

என். சொக்கன் …

01 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

12 Responses to "ஏ. ஆர். ரஹ்மான் புத்தக அறிமுக நிகழ்ச்சி"

சொக்கன்: இந்த நிகழ்ச்சியின் ஆடியோ அடுத்த வாரம், இணையத்தில் ஏற்றப்படும். அதற்குமுன், முதல் வாரம் நடந்த பங்குச்சந்தை மேட்டரையும் ஏற்றிவிடுவேன்.

வாழ்த்துக்கள்!

நிகழ்ச்சியை… கேட்க ஆவல்.


அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு

Dear Chokkan,

How can I hear that ? (I am in Bahrain). Please provide the website id .

wow… arumai..🙂
inaiyathil http://www.loka.fm il aaha fm ketkalam.🙂

Badri, Vijayashankar, Kesava Pillai, Bee’morgan,

நன்றி🙂

//இந்த நிகழ்ச்சியின் ஆடியோ அடுத்த வாரம், இணையத்தில் ஏற்றப்படும்//

//inaiyathil http://www.loka.fm il aaha fm ketkalam//

ஆஹா, இருவரும் நல்ல சேதி சொன்னீர்கள். இன்னொரு நன்றி🙂

ஆகா…வாழ்த்துக்கள் தல ;))

என்.சொக்கன்,
இப்புத்தகம் நிறைய காப்பிகள் விற்று உங்கள் புகழுக்கு மேலும் மெருகூட்ட என் வாழ்த்துகள். நன்றி. தி.சு.பா.

உங்கள் பேட்டியை webFM இல் கேட்டேன் …
இளையராஜா மற்றும் ரகுமான் இருவரையும் விட்டுகொடுக்காமல் பேசியதை ரசித்தேன்..🙂

//inaiyathil http://www.loka.fm il aaha fm ketkalam//

Ippothaan aaha fm il keettu mudithen. It was good. But Sri Madumitha pechiyadhu remba artificial aaha irrunthathu.

En daughter ikku phone panni book vanga sollivitten..

Shaji blog page ponaththnda? (www.musicshaji.blogspot.com/)

பேட்டியை கேட்டுக் கொண்டிருக்கிறேன், பின்னணியில் வரும் இரைச்சலற்ற பேட்டியை போட்டால் உறுத்தல் இல்லாம கேட்கலாம். முயற்சி செய்து சீர்படுத்தி அனுப்புகிறேன்.

[…] ஏ. ஆர். ரஹ்மான் புத்தக அறிமுக நிகழ்ச்ச… […]

[…] ஏ. ஆர். ரஹ்மான் புத்தக அறிமுக நிகழ்ச்ச… inaiyathil http://www.loka.fm il aaha fm ketkalam// ஆஹா, இருவரும் நல்ல சேதி சொன்னீர்கள். … Ippothaan aaha fm il keettu mudithen. It was good. But Sri Madumitha … […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 492 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 417,389 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2009
M T W T F S S
« Jul   Sep »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: