மனம் போன போக்கில்

‘ரதன் டாடா’ நூல் விமர்சனம்

Posted on: August 15, 2009

ரத்தன் டாடா

எனது ‘ரதன் டாடா’ புத்தகத்தின் விமர்சனம்: ’வாரணம்’ தளத்திலிருந்து:

ரத்தன் நவல் டாடா, சுருக்கமாக ரத்தன் டாடா. இந்தியத் தொழிற் துறையின் பீஷ்மர். ஆனால், ஒட்டுமொத்த டாடா குழுமத்தை உருவாக்கியது அவரில்லை. நூற்றாண்டு கண்ட நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர். ஆனால், 1962 ஆம் ஆண்டு அவர் டாடா ஸ்டீலில் ஒரு பயிற்சிபெறும் ஊழியர். ஒரு கடை நிலை ஊழியர், அந்நிறுவனத்தின் தலைவரா? எப்படி? இதை சுவாரசியமான ஒரு புத்தகமாக தந்துள்ளார் என்.சொக்கன்.

புத்தகம் எதோ ரத்தன் டாடாவைப் பற்றி இருந்தாலும், நூறாண்டு கண்ட டாடா நிறுவனத்தின் வரலாற்றையே விவரமாகத் தருகிறது. கவனத்தைக் குவித்துப் படித்தால், இரண்டு மணிநேரத்திலேயே புத்தகம் முழுவதையும் படித்துவிடலாம்.

முழுவதும் படிக்க: http://vaaranam.blogspot.com/2009/08/blog-post_15.html

புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-051-1.html

எனது மற்ற புத்தகங்கள்: http://nhm.in/shop/N.-Chokkan.html

***

என். சொக்கன் …

15 08 2009

7 Responses to "‘ரதன் டாடா’ நூல் விமர்சனம்"

வாழ்த்துக்கள், வாங்கிடவேண்டியது தான்…

Sir,
unga mela enakku “gaandu” adhigamaa irukku.

wiki-pediala irundhum,erkanave,vandha katturaigallil irundhum eduthu,pakkathula irundhu paarthaa pola – urai nadai yai mattum serthu,ippidi panam panreengalennu..

en saar, makkalukku,neenga ratan-oda wiki link-ayum,mudinjaa, tamizh wikila oru padhivayum,neenga pannittaa mudinudaadha?..yen,makkala panam koduthu vaanga vekkireenga?

pi.ku : Nangayum,thangayum nalamaa?

regards,
Venkat

பீர், venkat,

நன்றி 🙂

//wiki-pediala irundhum,erkanave,vandha katturaigallil irundhum eduthu,pakkathula irundhu paarthaa pola – urai nadai yai mattum serthu,ippidi panam panreengalennu..//

நண்பரே, ரதன் டாடாவைப் பக்கத்தில் இருந்து பார்த்துப் பழகியவர்கள்மட்டுமே அவரைப்பற்றி எழுதவேண்டும் என்கிற உங்கள் எதிர்பார்ப்பு மிகவும் நியாயமானது. அப்படி ஒரு புத்தகம் வருங்காலத்தில் எழுதப்பட்டால் நானும் உங்களைப்போலவே ஆவலுடன் வாங்கிப் படிப்பேன்.

அதேசமயம், இந்தப் புத்தகம் விக்கிபீடியாவின் வெற்று நகல் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்கமுடியாது. இந்த வாழ்க்கை வரலாறுக்காக நான் அணுகிய மூல நூல்கள், கட்டுரைகள், பேட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணைய தளங்கள் அனைத்தையும் முறைப்படி புத்தகத்தின் இறுதிப் பகுதியில் (162 முதல் 168வரை ஏழு பக்கங்களுக்கு) குறிப்பிட்டிருக்கிறேன். அந்த sources பயன்படுத்தி எழுதப்பட்ட புத்தகம்தான் இது என்பதை நான் எங்கும் மறைக்கவில்லை, மறுக்கவில்லை.

Secondary Sources கொண்டு எழுதிய புத்தகங்களைப் புறக்கணிப்பது என்று நீங்கள் முடிவெடுத்தால் அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதற்காக இதுமாதிரியான புத்தகங்கள் அனைத்தும் மோசமானவை என்கிற கருத்தை தயவுசெய்து பரப்பவேண்டாம்.

நான் எழுதியது அமர இலக்கியம் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. அதைப் படித்துவிட்டு அது ஏன் மோசமாக இருக்கிறது என்று நீங்கள் கருதுவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள், உங்கள் விமர்சனம் நேர்மையானதாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்கிறேன், அப்படியில்லாமல் இப்படிப் பொத்தாம்பொதுவாகக் குற்றம் சாட்டுவது சரியில்லை.

நீங்கள் விரும்பியதுபோல, ரதன் டாடாவின் விக்கி பக்கத்துக்கு இணைப்பை இங்கே கொடுக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் இதைப் படித்துப் பயன் அடையலாம்:

http://en.wikipedia.org/wiki/Ratan_Tata

//yen,makkala panam koduthu vaanga vekkireenga?//

நண்பரே, மீண்டும் சொல்கிறேன், இந்தப் புத்தகம் எந்தப் புத்தகங்கள், கட்டுரைகள், தகவல்கள், இணைப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்கிற தகவல் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகு அதை வாங்குவதோ, அல்லது, ‘வேண்டாம், எனக்கு ரதன் டாடாவோ அவருடன் பழகிய ஒருவரோ எழுதிய புத்தகம்தான் வேண்டும், Secondary Sources கொண்டு எழுதப்பட்ட புத்தகம் எனக்குத் தேவையில்ல’ என்று வாங்காமல் இருப்பதோ அவரவர் விருப்பம், யாரும் யாரையும் எதையும் ‘வாங்க வைக்க’முடியாது – கவலைப்படாதீர்கள்!

சார், வாழ்த்துக்கள்.
உலக சினிமா பற்றியும் ஒரு உங்கள் புத்தகம் எப்போ வரும்?
நன்றி.

Balakumaran,

நன்றி 🙂

//உலக சினிமா பற்றியும் ஒரு உங்கள் புத்தகம் எப்போ வரும்?//

எனக்கு உலக சினிமா துளியும் அறிமுகமில்லை. ஆகவே அப்படி ஒரு புத்தகம் வர வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன் 🙂

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

Dinamalar,

நன்றி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,274 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2009
M T W T F S S
« Jul   Sep »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Advertisements
%d bloggers like this: