மனம் போன போக்கில்

இளம் டாக்டர்

Posted on: August 17, 2009

நேற்று மதியம் இரண்டரை மணி, கதவு மெதுவாகத் தட்டப்பட்டது, திறந்து பார்த்தால் இன்னும் மீசை முளைக்காததுபோன்ற தோற்றத்தில் ஓர் இளைஞன், ‘ஹலோ’ என்றான்.

‘ஹலோ?’

‘நாங்க மேலே 201க்குப் புதுசாக் குடிவந்திருக்கோம், என் பேர் ஜேம்ஸ்’

‘ஓகே?’

’எங்க வீட்ல ஒரு சின்ன எலக்ட்ரிக்கல் ப்ராப்ளம், உங்களுக்குத் தெரிஞ்ச எலக்ட்ரீஷியன்ஸ் யாராச்சும் இருக்காங்களா?’

டைரியைப் புரட்டித் தேடி நம்பரைக் குறித்துக்கொடுத்தேன், ‘ஆனா இவருக்குக் கன்னடம்மட்டும்தான் பேச வரும்’

‘பரவாயில்லைங்க, ஐ கேன் மேனேஜ்’ என்றான் அவன், ‘ரொம்ப தேங்க்ஸ்’

’இட்ஸ் ஓகே’

அவன் இரண்டிரண்டு படிகளாகத் தாண்டி மேலே சென்றான். நான் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தேன்.

அப்போதுதான் பால்கனியிலிருந்து வந்த என் மனைவி விசாரித்தார், ‘யாரு கதவைத் தட்டினது?’

’யாரோ சின்னப் பையன், மேலே 201க்குக் குடிவந்திருக்காங்களாம்’

’சின்னப் பையனா?’ அவர் என்னை விநோதமாகப் பார்த்தார், ‘201தானே சொன்னாங்க?’

‘ஆமா, அதுக்கென்ன?’

’201ல ஜேம்ஸ்ன்னு ஒரு டாக்டர்தான் புதுசாக் குடிவந்திருக்காரு’

‘என்னது? டாக்டரா?’ நான் அதிர்ந்துபோனேன், ‘சின்னப் பையன்மாதிரி இருக்கானே!’

‘ஆமா, சின்னப் பையன்தான், ஆனா டாக்டர்’

சட்டென்று என் குரலில் மரியாதை ஏறிக்கொண்டது, ‘அவரைப் பார்த்தா டாக்டர்மாதிரியே தெரியலை’

என்னைப்போன்ற வெகுஜனங்களுக்கு டாக்டர் என்றாலே குறைந்தபட்சம் நாற்பது வயதாகியிருக்கவேண்டும். அதற்குக் கீழே இளமையாக ஒரு டாக்டரைப் பார்த்த நினைவில்லை.

விநோதம் என்னவென்றால், இதற்கு நேர் எதிராக, ‘எஞ்சினியர்’ என்றாலே இளமையான பிம்பம் ஒன்று தோன்றிவிடுகிறது. ஆனானப்பட்ட சுஜாதாவே ஆனாலும், முதியவரானதும் அவரும் ஓர் எஞ்சினியர் என்பது சுத்தமாக மறந்துபோயிருந்தது.

சில வாரங்களுக்குமுன்னால் எங்கள் வீட்டு மின் இணைப்பை என் பெயருக்கு மாற்றுவதுகுறித்து ஓர் அரசாங்க அதிகாரியைச் சந்திக்கப் போயிருந்தேன், ‘அப்படி உட்காருங்க, ஜூனியர் எஞ்சினியர் வருவாரு’ என்றார்.

சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருந்தபிறகு, அந்த ‘ஜூனியர் எஞ்சினியர்’ வந்தார், அவருக்கு வயது ஐம்பது கடந்திருக்கும்.

ஜூனியரே 50+ என்றால், இவருடைய சீனியர் எஞ்சினியருக்கு என்ன வயதாகியிருக்கும்? எனக்குத் தலை சுற்றியது.

கடைசிவரை, என்னால் அந்த 50+ பேர்வழியை எஞ்சினியராக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதேபோல்தான் இந்த 20+ டாக்டரையும்.

வருங்கால எஞ்சினியர்களும் டாக்டர்களும் ஒன்றாகதான் ப்ளஸ் டூ படிக்க ஆரம்பிக்கிறார்கள், அதன்பிறகு, எஞ்சினியர் என்றால் இளமை, டாக்டர் என்றால் முதிர்ச்சி என்கிற அசட்டுத்தனமான Prejudice பிம்பம் எப்படி வருகிறது?

நான் வழக்கம்போல் திருதிருவென்று குழம்பிக்கொண்டிருக்க, என் மனைவி 201-புராணம் பாட ஆரம்பித்தார் – இந்த ஜேம்ஸ், மிகச் சமீபத்தில்தான் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் பணிக்குச் சேர்ந்திருக்கிறாராம், போன மாதம்தான் திருமணம் முடிந்ததாம், அவருடைய மனைவி எலக்ட்ரானிக் சிட்டி பக்கம் ’விப்ரோ’வில் வேலை பார்க்கிறாராம்.

’விப்ரோவிலயா? இன்ஹவுஸ் டாக்டர்-ங்கறாங்களே, அந்தமாதிரி வேலையா?’

’டாக்டரா? யாரு?’

‘ஜேம்ஸோட மனைவி?’

‘ஹலோ, ஜேம்ஸ்தான் டாக்டர், அவரோட வொய்ஃப் உன்னைமாதிரி சாஃப்ட்வேர்ல இருக்காங்க’

நான் மறுபடியும் அசடு வழிந்தேன், டாக்டர்கள் சக டாக்டர்களைமட்டும்தான் திருமணம் செய்துகொள்வார்கள் என்கிற இன்னொரு வெகுஜன Mythஐயும் இந்த ஜேம்ஸ் கண்டுகொள்ளவில்லைபோல.

‘அப்புறம்?’

‘இங்கே என்ன கதையா சொல்றாங்க, அவ்ளோதான் விஷயம்’

’நாளைபின்னே நமக்கு உடம்பு சரியில்லைன்னா மேலே 201க்குப் போனாப் போதுமா? டாக்டர் ஜேம்ஸ்கிட்டே இலவசமா வைத்தியம் பார்த்துக்கலாமா?’

‘ம்ஹூம், சான்ஸே இல்லை’

’ஏன்?’

‘அவர் ஓசியில வைத்தியம் பார்க்கமாட்டாராம், குறிப்பா, அவரைச் சின்னப் பையன்னு மட்டம் தட்டறவங்களுக்கு’

நியாயம்தான்!

***

என். சொக்கன் …

17 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

11 Responses to "இளம் டாக்டர்"

//ஜூனியரே 50+ என்றால், இவருடைய சீனியர் எஞ்சினியருக்கு என்ன வயதாகியிருக்கும்? எனக்குத் தலை சுற்றியது.//

:)))

தமிழ்நாடு பொதுப்பணி துறை பக்கம் வந்து பார்த்தீங்கன்னா இதே ரேஞ்சுல பலரும் ரிட்டையர்டே ஆகியிருப்பாங்க !

//நான் மறுபடியும் அசடு வழிந்தேன், டாக்டர்கள் சக டாக்டர்களைமட்டும்தான் திருமணம் செய்துகொள்வார்கள் என்கிற இன்னொரு வெகுஜன Mythஐயும் இந்த ஜேம்ஸ் கண்டுகொள்ளவில்லைபோல.//

பெரும்பான்மையா இருக்கிறது டாக்டர் ஜோடிக்கள்தான் ! அதற்கு அடுத்து இதே வெகுஜன Myth ஐடி மக்களுக்கும் :))

என் வசிப்பிடம் சுற்றி வழுக்கைத் தலைகளுடன் நிறைய PWD என்ஜினீயர்களும், மின் வாரிய என்ஜினீயர்களும் இருந்ததால் எனக்குள் அப்படி ஒரு பிம்பம் பதிவாகவில்லை. என்ஜினீயர் தத்தா என்றால் வயதானவர். என்ஜினீயர் ராகுல் என்றால் இளம் பொறியாளர். 🙂

//சட்டென்று என் குரலில் மரியாதை ஏறிக்கொண்டது//

>நம்ம டாக்டருக்கு< கொடுக்கிற மரியாதை தானே அது… 😉

தல, போலி டாக்டர் இல்லைனு வெரி5 பண்ணுங்கோ 🙂 , Since PHD’s also called as Dr, onetimeI was embarassed when I disturbed my Dr. neighbour for urgent treament only to know that he is PHD Dr :-). Good to have neighbours from variety of the fields which will help us many times.

//எஞ்சினியர் என்றால் இளமை, டாக்டர் என்றால் முதிர்ச்சி//

நாம எப்போவும் இளமை தாங்க. ஆமா நீங்களும் engineer தான?

//அசட்டுத்தனமான Prejudice பிம்பம் எப்படி வருகிறது?//
நாம அவர்களை professionalல பார்க்காம, குழந்தைல இருந்து பெரிய image mindல set ஆகிடுச்சு.

//வருங்கால எஞ்சினியர்களும் டாக்டர்களும் ஒன்றாகதான் ப்ளஸ் டூ படிக்க ஆரம்பிக்கிறார்கள், அதன்பிறகு, எஞ்சினியர் என்றால் இளமை, டாக்டர் என்றால் முதிர்ச்சி என்கிற அசட்டுத்தனமான Prejudice பிம்பம் எப்படி வருகிறது?//

விடை இங்கே http://www.payanangal.in/2009/08/blog-post_18.html

தல

\\‘அவர் ஓசியில வைத்தியம் பார்க்கமாட்டாராம், குறிப்பா, அவரைச் சின்னப் பையன்னு மட்டம் தட்டறவங்களுக்கு’\\

;))))))

பொதுவா எல்லோரும் டாக்டர் என்ஜினியர்னு சொல்றாங்களே, எஞ்சியிருக்கிற ஆடிட்டரையும் வக்கீலையும் விட்டது ஏனோ?

ஒருவேளை இந்த ரெண்டு ஆளுங்களை விட முந்தைய ரெண்டு ஆளுங்க அதிக வெகு ஜன உபயோகத்தில இருக்கறதாலேயோ?

“ஜூனியரே 50+ என்றால், இவருடைய சீனியர் எஞ்சினியருக்கு என்ன வயதாகியிருக்கும்? எனக்குத் தலை சுற்றியது.”
கிரேசி மோகனையே மிஞ்சி விட்டீர்கள்

ஆயில்யன், சத்யராஜ்குமார், பீர், RaviSuga, Balakumaran, புருனோ, கோபிநாத், சத்தியமூர்த்தி, கணேஷ்,

நன்றி 🙂

//என்ஜினீயர் தத்தா என்றால் வயதானவர். என்ஜினீயர் ராகுல் என்றால் இளம் பொறியாளர்//

எஞ்சினியர் ராகுலுக்கு வயதாகும்போது அவர் தன் பெயரை மாற்றிக்கொண்டுவிடுவாரா என்ன? 🙂

//ஆமா நீங்களும் engineer தான?//

இல்லையா பின்னே? 😉 மறைமுகமா என்னை ‘யூத்’துன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி 😉

//விடை இங்கே http://www.payanangal.in/2009/08/blog-post_18.html//

விளக்கமான பதிலுக்கு நன்றி டாக்டர் 🙂

//எஞ்சியிருக்கிற ஆடிட்டரையும் வக்கீலையும் விட்டது ஏனோ?
ஒருவேளை இந்த ரெண்டு ஆளுங்களை விட முந்தைய ரெண்டு ஆளுங்க அதிக வெகு ஜன உபயோகத்தில இருக்கறதாலேயோ?//

அதேதான். தவிர, ஆடிட்டர், வக்கீல் பேசற மொழி யாருக்கு சார் புரியும்? 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 531 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 595,922 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

August 2009
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: