பிள்ளையாருக்குப் பொறந்தநாள்
Posted August 23, 2009
on:- In: Bangalore | Creativity | Fun | God | Kids | Memories | Photos | Play | Religion | Uncategorized | Wishes
- 9 Comments
இது எங்க வீட்டுப் பிள்ளையார் – விளையாட்டுக் களிமண் (Funskool Play-Doh) கொண்டு நங்கை செய்தது – கொஞ்சம் உற்றுக் கவனித்தால் பிள்ளையாருடன் மூஞ்சூறு, கொழுக்கட்டை (இனிப்பு தனி, காரம் தனி), லட்டு, பாயசம், அதில் மிதக்கும் முந்திரிப்பருப்பு, வடை, சுண்டல், அப்பம் முதலானவற்றைப் பார்க்கலாம்.
பிள்ளையார்தான் கொஞ்சம் கிறிஸ்துமஸ் தாத்தா சாயலில் இருக்கிறார், அதனால் என்ன? ஹேப்பி பர்த்டே பிள்ளையார்!
***
என். சொக்கன் …
23 08 2009
9 Responses to "பிள்ளையாருக்குப் பொறந்தநாள்"

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்
//கொஞ்சம் உற்றுக் கவனித்தால் பிள்ளையாருடன் மூஞ்சூறு, கொழுக்கட்டை (இனிப்பு தனி, காரம் தனி), லட்டு, பாயசம், அதில் மிதக்கும் முந்திரிப்பருப்பு, வடை, சுண்டல், அப்பம் முதலானவற்றைப் பார்க்கலாம்//
நன்றாக செய்திருக்கிறார்கள் உங்கள் நங்கை.
//பிள்ளையார்தான் கொஞ்சம் கிறிஸ்துமஸ் தாத்தா சாயலில் இருக்கிறார்//
ஹி.. ஹி…
அதனாலென்ன?


Dear Mr.Chokkan,
How is your leg pain? Are you alright?


அழகான பிள்ளையார் ;))


பிள்ளையார் நன்றாகத்தான் செய்திருக்கிறாள். ரிக்ளைனிங் பிள்ளையார் என்று நினைக்கிறேன்.
நங்கை பிற்காலத்தில் நல்ல எம்.எப்.ஹுசைனாக வருவார் போலிருக்கிறது.
நல்ல என்று சொன்னதற்கு காரணம் ஹுசைனின் மாதுரி தீக்ஷித் நினைவுக்கு வருவதால்.
எத்தனை அலட்டலுக்கு பிறகு மூக்கு இல்லாத மாதுரி வரைந்தார். அவருக்கு மாதுரி மேல் என்ன கோபமோ தெரியவில்லை.
ஆனால் உங்கள் பெண்ணுக்கு கண்டிப்பாக பிள்ளையார் மேல் கோபமில்லை. பிள்ளையார் தெளிவாக இருக்கிறார்.

1 | Sridhar Narayanan
August 23, 2009 at 10:17 am
வாழ்த்துகள் பிள்ளையாருக்கும், அவரை செய்த நங்கை நல்லாளுக்கும் 🙂