பாரதி நினைவு நாள் (செப்டம்பர் 11)
Posted September 11, 2009
on:- In: Bharathi | In Memory | Poetry | Uncategorized | Wishes
- 11 Comments
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்படவேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசம் ஆவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்!
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்!
மண் பயனுற வேண்டும்,
வானகம் இங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும்
ஓம், ஓம், ஓம், ஓம்!
11 Responses to "பாரதி நினைவு நாள் (செப்டம்பர் 11)"

பாரதி வரிகளை போட்டதற்கு மிக்க நன்றி. புத்துணர்ச்சி அளிக்கிறது.


நன்றி சொக்கன்..- மகாகவியை நினைவுபடுத்தியற்கு
ஆனந்த்
சான் பிரான்சிஸ்கோ


அஹா… மனம் விரும்பியதே!


[…] First Tweet 5 hours ago nchokkan nchokkan Influential ஜஸ்ட் ஐம்பது வார்த்தைகளில் என்ன ஒரு மாயாஜாலம், வாழ்க பாரதி! –> https://nchokkan.wordpress.com/2009/09/11/bharathi/ view retweet […]


சார் நன்றி – மகாகவிபாரதி நினைவுநாளை
நினைவுபடுத்தியதற்க்கு..
நன்றி.


Chokkan,
arumai! appadiye Mahakaviyai paththi oru book podungalen…neraya books avar perla irukku…irundhaalum, neenga nachunu oru book pottaa mahakaviyin arumai theriyadhavarkalukku theriyum.
nanri,
thi.su.ba.

1 | ஆயில்யன்
September 11, 2009 at 11:02 am
//மண் பயனுற வேண்டும்///
நினைவுநாளில் பாரதி தெய்வத்தினை நினைத்து வணங்கிடுவோம் !