நேவித்யம் (ம்ஹூம், தப்பு – நைவேத்யம்)
Posted September 20, 2009
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Crisis Management | Fear | Flight Journey | Learning | Rules | Safety | Security | Travel | Uncategorized
- 9 Comments
சென்ற வாரம், சென்னையிலிருந்து ஒரு தோழி / குடும்ப நண்பர் வந்திருந்தார்.
அவர் கிளம்பும்போது, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, வளையல், பொட்டு, தேங்காய், இன்னும் என்னென்னவோ தாம்பூலமாக வைத்துக் கொடுத்தார் என் மனைவி. அவர் அவசரமாக அதைக் கைப்பையில் கொட்டிக்கொண்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுவிட்டார்.
சில மணி நேரம் கழித்து, அவர் சென்னை சென்று இறங்கியபிறகு நாங்கள் அவரைத் தொலைபேசியில் அழைத்தோம், ‘என்னங்க, சவுகர்யமாப் போய்ச் சேர்ந்தீங்களா?’
‘ஓ’ என்றவர் கொஞ்சம் தயங்கினார், ‘உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே’
‘என்னது?’
‘சொன்னா சிரிக்கக்கூடாது’
‘இதில சிரிக்கறதுக்கு என்ன இருக்கு? தயங்காம சொல்லுங்க!’
’பெங்களூர் ஏர்போர்ட்ல செக்யூரிட்டி செக்கிங்போது என்னைத் தனியா நிறுத்திவெச்சுட்டாங்க’
‘ஏன்? என்னாச்சு?’
‘நீங்க தேங்காய் கொடுத்தீங்க இல்ல?’
‘ஆமா, அதுக்கென்ன?’
‘அந்தத் தேங்காயை ஃப்ளைட்ல அனுமதிக்கமாட்டாங்களாம், அரசாங்க விதிமுறைப்படி, விமானத்தில எந்த Liquid பொருளும் கொண்டுபோகக்கூடாதாமே!’
’என்னங்க காமெடி பண்றீங்களா, தேங்காய் எப்படி Liquid ஆகும்? அது நல்ல கனமான Solidதானே? அதை அப்படியே அந்த ஆஃபீஸர் தலையில அடிச்சு நிரூபிக்கவேண்டியதுதானே?’
‘தேங்காய் Solidதான், ஆனா அதுக்குள்ள Liquidஆ இளநீர் இருக்கில்ல? அதனால அதை ஃப்ளைட்ல அலவ் பண்ணமாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க’
‘அடக் கடவுளே, தாம்பூலம் கொடுக்கறதில இப்படி ஒரு பிரச்னை இருக்கா?’
‘ஆமாங்க, அவங்க அப்படிச் சொன்னதும் நானும் ரொம்ப ஷாக் ஆகிட்டேன், அடுத்து என்ன செய்யறதுன்னே புரியல’
’இதில என்னங்க பெரிய ஷாக்? சாதாரண எட்டு ரூபா தேங்காய்தானே, அங்கயே ஒரு குப்பைத் தொட்டியில தூக்கிப் போட்டுட்டுப் போயிருக்கலாம்ல?’
’அதெப்படி? தாம்பூலமாக் கொடுத்ததை யாராச்சும் வீசி எறிவாங்களா? தப்பில்ல?’
‘அப்புறம் என்ன செஞ்சீங்க?’
’அவங்களுக்குத் தேங்காய் நோ ப்ராப்ளம், இளநீர்தான் பிரச்னை’
‘அதனால?’
’அங்கயே தேங்காயை ரெண்டா உடைச்சு, இளநீரைக் காலி செஞ்சுட்டோம், அப்புறம் ரெண்டு மூடியையும் ஹேண்ட் பேக்ல போட்டுகிட்டு ஜாலியா ஃப்ளைட் ஏறிட்டேன்’
’தேங்காய் உடைக்கறதுதான் உடைச்சீங்க, அப்படியே இளநியை ரெண்டு சுத்து சுத்தி, ஃப்ளைட் எந்தப் பிரச்னையும் இல்லாம சென்னை போய்ச் சேரணும்ன்னு வேண்டிகிட்டு ஏர்போர்ட் பகவானுக்கு நேவித்யம் செஞ்சிருக்கலாமே!’
***
என். சொக்கன் …
20 09 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
9 Responses to "நேவித்யம் (ம்ஹூம், தப்பு – நைவேத்யம்)"

ஆஹா! இப்படியெல்லாம்கூட பிரச்னை வருமா? ஃப்ளைட்லே விக்கலெடுத்தா குடிக்கத் தண்ணி தருவாங்களா, மாட்டாங்களா? எனக்கு ஒரு யோசனை! ஒவ்வொரு ஏர்போர்ட்லேயும் ஒரு பிள்ளையார் கோயில் கட்டி வெச்சுட்டோம்னா, உடைக்கிற தேங்காயை அவருக்கு உடைச்சு, பத்திரமா போய்ச் சேர வேண்டிக்கிட்டு கிளம்பின மாதிரியும் இருக்குமே!


இன்னும் கொஞ்ச நாளில ஃப்ளைட்ல ஏர்றதுக்கு முன்னால பயணிகள் எல்லாரும் கம்பல்ஸரி பாத்ரூம் போய்ட்டு வந்துருங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க. (அதாங்க liquid not allowed தானே?). ஹிஹி!
அது சரி அது நேவித்யமா? நைவேத்யமா?


அது சரி, விமானத்தில் ஏன் திரவப் பொருளைக் கொண்டு போகக் கூடாதாம்? என்ன காரணம்? தெரிஞ்சுக்கலைன்னா தலையே வெடிச்சுடும் போலிருக்கே!
– கிருபாநந்தினி


remembering Bomb in coconut – goundamani joke in udayageetham :-))


சொக்கன்,
தேங்காய், இளநீரின் முற்றிய வடிவம் அல்லவா? தேங்காயினுள் எப்படி இளநீர் இருக்கும்? தேங்காத்தண்ணி என்றல்லவா சொல்லுவோம்?

1 | எஸ்.சொக்கன்
September 20, 2009 at 5:23 pm
விவேக் பாணியில் – ”ஆனாலும் செக்யூரிட்டியோட கடமை உணர்ச்சிக்கும் ஒரு அளவே இல்லையா”