மனம் போன போக்கில்

ஓர் ஆச்சர்யம், ஒரு கேள்வி

Posted on: September 29, 2009

நேற்று நங்கையைக் கூட்டிக்கொண்டு ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். வழியில் தென்பட்ட எல்லாப் பொருள்களைப்பற்றியும் நிமிடத்துக்கு ஏழெட்டு கேள்விகள் என்கிற விகிதத்தில் கேட்டபடி நடந்துவந்தாள், பதில்களை எதிர்பார்க்கக்கூட இல்லை.

கடையில் நாங்கள் வாங்கிய பொருள்களின் மொத்த விலை 56 ரூபாய் ஆனது. நான் அறுபது ரூபாய் கொடுத்தேன்.

‘ஒர் ரூவா சில்லறை கொடுங்க சார்’

பர்ஸுக்குள் தேடினேன். ஒற்றை நாணயம் எதுவும் அகப்படவில்லை, ‘இல்லைங்களே’

‘சரி, அப்ப நாலு ரூபாய்க்கு ஏதாச்சும் வாங்கிக்கோங்க’

‘ஓகே, ஏதாவது சாக்லெட் கொடுங்களேன்’

‘ம்ஹூம்’ என்று மறுத்துவிட்டார் அவர், ‘எங்க கடையில சாக்லெட் விக்கறதில்லை’

எனக்கு ஆச்சர்யம். இந்தப் பாரதப் புனித பூமியில் சாக்லெட் விற்காத கடைகளும் உண்டா?

என்னுடைய குழப்பத்தைப் பார்த்த அவர் சிரித்தபடி சொன்னார், ‘உங்களைமாதிரிதான் சார், சில்லறை இல்லாத எல்லோரும் தேவையே இல்லாம சாக்லெட் வாங்கிட்டுப் போறாங்க, அவங்களா விரும்பி வாங்கினாக்கூடப் பரவாயில்லை, Impromptu buying, அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை, அதைத் தின்னு பல் கெடும், உடம்பு குண்டாகும், எதுக்கு? நம்ம கடைக்கு வர்றவங்க ஏதாச்சும் பயனுள்ள பொருள்களைதான் வாங்கணும்-ங்கறது என் பாலிஸி’, நங்கையின் கன்னத்தைத் தட்டினார், ‘என்னம்மா? பென்சில் வாங்கிக்கறியா? எரேஸர், ஷார்ப்னர் எதுனா தரட்டுமா?’

’மூணுமே கொடுங்க’

அவர் சிரித்தபடி இரண்டு கறுப்புப் பென்சில்களைமட்டும் எடுத்துக் கொடுத்தார், ‘நாலு ரூபாய் ஆச்சு சார், நன்றி!’

இப்போது நடந்ததை ப்ளாகில் எழுதினால் யாரும் நம்பமாட்டார்கள், நான் சும்மா ‘Feel Good’ கற்பனைக் கதை எழுதுகிறேன் என்றுதான் சொல்வார்கள் என நினைத்துக்கொண்டே படிகளில் இறங்கிவந்தேன். நங்கை பென்சிலை இறுகப் பற்றிக்கொண்டு புதிய கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.

அவளைக் கொஞ்சம் திசை மாற்றுவதற்காக, ’ஏதாவது விளையாடலாமா?’ என்றேன்.

‘ஓ, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ஒரு சைன்ஸ் கேம் சொல்லிக்கொடுத்தாங்களே’

‘என்னது?’

‘Solid Vs Liquid’

‘அப்டீன்னா?’

‘நான் ஒரு பொருள் பேர் சொல்வேன், அது Solid-ஆ, அல்லது Liquid-ஆ-ன்னு நீ சொல்லணும்’

‘ஓகே’, வழியெல்லாம் பதில் தேவைப்படாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நடப்பதற்கு இந்த அற்ப விளையாட்டு எவ்வளவோ பரவாயில்லை.

நங்கை தன் கையில் இருந்த பழத்தைக் காண்பித்துத் தொடங்கினாள், ‘வாழைப்பழம்?’

‘Solid’

’ஜூஸ்?’

‘Liquid’

எங்களை ஒரு சைக்கிள் கடந்துபோனது, அதைச் சுட்டிக் காட்டி, ’சைக்கிள்?’

‘Solid’

கடைசியாக, சாலைப் பள்ளத்தைக் காண்பித்து, ‘Hole?’

இதற்கு என்ன பதில் சொல்வது? உள்ளே ஏதுமற்ற பள்ளம் Solid-ஆ, Liquid-ஆ? பேய் முழி முழித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

***

என். சொக்கன் …

29 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

19 Responses to "ஓர் ஆச்சர்யம், ஒரு கேள்வி"

ஒரு நேயர் விருப்பம்..
உங்களின் ட்ரேட் மார்க் பதிவுகளைப் படித்து நீண்ட நாட்கள் ஆகிறது.. இப்போதெல்லாம் துண்டு துக்கடான்னு பதிவெழுதி ஊரை ஏமாத்திகிட்டுருக்கீங்க.. 😉

சட்டு புட்டுனு ஒரு நல்ல பதிவா எழுதிப் போடுங்க.. 🙂

யாத்ரீகன், Bee’morgan,

நன்றி 🙂

//துண்டு துக்கடான்னு பதிவெழுதி ஊரை ஏமாத்திகிட்டுருக்கீங்க//

உண்மைதான் 🙂 நேர நெருக்கடிமட்டுமே காரணம் – கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க, இதோ வந்துடறேன் 😉

shopkeeper’s attitude is to be appreciated. Hole is not a object nnu solli samalichiripingalae 🙂

உங்கள் நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம்தான்.பசங்களோட கேள்விக்கு பதில் சொல்வது சவாலானது மட்டுமல்ல,சில நேரங்களில் சாத்தியமில்லாததும் கூட.

இந்த மாதிரி கடைகாரர்கள் கூட உலகில் இருக்கிறார்களா?ஆச்சர்யம்தான்.

கடைகாரர் ரெம்ப நல்லவர். எத்தனையோ கடைகள் சில்லறைக்கு பதில் ஏதாவது சாக்லெட்டை நாம் கேட்காமலே கொடுப்பார்கள்.

//கடைசியாக, சாலைப் பள்ளத்தைக் காண்பித்து, ‘Hole?’
இதற்கு என்ன பதில் சொல்வது?

பேய் முழி முழித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.// ஹி ஹி ஹி…

solid ஆனா ஒரு பொருளில் தானே பள்ளம் பறிக்க முடியும் இல்லையா?

Bee’Morgan //இப்போதெல்லாம் துண்டு துக்கடான்னு பதிவெழுதி ஊரை ஏமாத்திகிட்டுருக்கீங்க// – அதானே.

எத்தனையோ விஷயம் இருக்கே… டெல்லி பயணக்கட்டுரை, பூஜா Holidays, சரஸ்வதி பூஜையன்று படிக்கலாமா கூடாதா? etc…

நம்பத் தயாராக இருக்கிறேன். இன்னும் நிறைய நங்கை துணையுடன் எழுதுங்கள். அவர்கள் உலகம் தனி!

//’மூணுமே கொடுங்க’// 🙂 புதிய தலைமுறை எப்படி இவ்வளவு தெளிவா இருக்காங்க?!

அட இது புதுசா இருக்கே…எல்லாரும் இப்படி யோசிச்சா நல்லா இருக்கும்….

நல்ல கேள்வி… :))

How does she know abt ur பி.ந கதை ‘இருட்டுப் பள்ளம்’

anputan
singai nathan

ஓர் ஆச்சர்யம் ஒரு கேள்விக்கு 9 பதில்கள்னு இருந்தாச் சரி. ஆனா 9 பதில்கள்-க்கு ஓர் ஆச்சர்யம் ஒரு கேள்வின்னு வருதே? கவனிங்க சொக்கன்.

Nice story. Hole.. Solid.. A liquid content can’t make hole! Thanni la otta poda mudiyuma? Therinjadha sonnen.. 🙂

சுவாரஸ்யமான பதிவு.

எங்களிடம் shot Blasting Machine ஒன்று இருக்கிறது. துளையிட்ட சேனல்களை வர்ணம் பூசத் தோதாக மேற்பரப்பை சுத்தம் செய்கிற எந்திரம். அதை புதுசாக வாங்கி கமிஷனிங் செய்த அன்று, உள்ளே அனுப்பிய சேனல் சிக்கிக் கொண்டது. நெடுநேரமாக வெளியே வராத போது ஒரு சக ஊழியர் சொன்னது :

All except the holes are blasted, that’s why only holes are coming out

ஹோல் க்கு அவர் தந்த விளக்கம் நன்றாக இருக்கிறதா?

ravisuga, Karthikeyan, Balakumaran, R.Selvakkumar, சத்யராஜ்குமார், naanal, Singai Nathan, வடகரை வேலன், vijaysampath, Jawahar,

நன்றி 🙂

//Hole is not a object//
//solid ஆனா ஒரு பொருளில் தானே பள்ளம் பறிக்க முடியும் இல்லையா?//
//Hole.. Solid.. A liquid content can’t make hole! Thanni la otta poda mudiyuma?//
//All except the holes are blasted, that’s why only holes are coming out//

இவ்ளோ விளக்கம் எனக்கு அந்த நேரத்தில ஞாபகம் வரலை, பேச்சை மாத்திச் சமாளிச்சேன், அப்புறம் யோசிச்சு ஒரு விளக்கம் கொடுத்தேன் – Hole is not an object by itself, as its really ’empty’ and can’t be a solid or liquid — ideally, we should treat the மண் around it + hole as a single object, in that case it would become a solid-ன்னு. சரியா?

//புதிய தலைமுறை எப்படி இவ்வளவு தெளிவா இருக்காங்க?!//

என் ஆச்சர்யமும் அதுதான் 🙂 எப்படியோ ஒவ்வொரு பதிவிலும் எனக்கு ரொம்பப் பிடித்த வரியைத் தோண்டி எடுத்துவிடுகிறீர்கள், உங்களுக்கு அம்பிகாபதி, ச்சே டெலிபதி தெரியுமா? 🙂

//ஓர் ஆச்சர்யம் ஒரு கேள்விக்கு 9 பதில்கள்னு இருந்தாச் சரி. ஆனா 9 பதில்கள்-க்கு ஓர் ஆச்சர்யம் ஒரு கேள்வின்னு வருதே?//

இது ஏதோ டெம்ப்ளேட் பிரச்னைமாதிரி தெரியுது – விசாரிக்கறேன், சுட்டிக்காட்டியதற்கு நன்றி 🙂

அண்ட சராசரமே அடங்கும் ஒரு கேள்விய இல்ல உங்க பொண்ணு கேட்டா.

”ஹோல்” சாலிடா, லிக்விடா என்ன மேட்டர் அப்படின்னுதானே பிரபஞ்ச விஞ்ஞானிகளெல்லாம் தேடறாங்க!

R Sathyamurthy,

நன்றி 🙂

//”ஹோல்” சாலிடா, லிக்விடா என்ன மேட்டர் அப்படின்னுதானே பிரபஞ்ச விஞ்ஞானிகளெல்லாம் தேடறாங்க//

அப்ப ‘Whole’ மேட்டரும் இந்தக் கேள்வியிலதான் அடங்கியிருக்குன்னு சொல்ல வர்றீங்களா 😉

whole மேட்டரையும் ஒரு holeக்குள்ளேயே அடங்கி போயிடுச்சே.வாழ்க்கையின் யதார்த்தை இப்படியும் விளக்கலாம். ஒரு சின்ன ‘W’ கூட சேர்ந்ததால அர்த்தமே மாறிடுது.

இப்படித்தான் வாழ்க்கையிலும் ஒரு சின்ன விஷயம் சிலது கூடறதுனால பெரிய விஷய்ம் பல மாறிப்போயிடுது.

பதிவோட சேர்த்து உங்க ஒரு பதிலும் பிடிச்சிருந்தது. அது – //Hole is not an object by itself, as its really ‘empty’ and can’t be a solid or liquid — ideally, we should treat the மண் around it // குறிப்பிட்டு சொல்லணும்னா “treat the மண் around it”.

விஜயசாரதி,

நன்றி 🙂

சிறுவர்களிடம் தோற்பது கூட இனிமை தான்..

Good One Sir

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

September 2009
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
%d bloggers like this: