மனம் போன போக்கில்

எட்டு வருஷ அனுபவம்

Posted on: November 9, 2009

இன்று காலை, தாய்லாந்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘எங்களுக்கு ஒரு ப்ரொக்ராமர் / கன்சல்டன்ட் தேவைப்படுகிறார். அவருக்குக் கீழ்கண்ட டெக்னாலஜிகளில் குறைந்தபட்சம் எட்டு வருட அனுபவம் இருக்கவேண்டும்!

அவர்கள் கொடுத்திருந்த பட்டியலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். அநேகமாகச் சூரியனுக்குக் கீழே உள்ள சகல தொழில்நுட்பங்களையும் லிஸ்ட் போட்டிருந்தார்கள். இத்தனையிலும் எட்டு வருட அனுபவம் உள்ள ஒருவரைத் தேடவேண்டுமென்றால், மகாவிஷ்ணு மறுபடியும் அவதாரம் எடுத்துவந்தால்தான் உண்டு.

உடனடியாக, என் அலுவலக நண்பரைத் தொலைபேசியில் அழைத்தேன், ‘என்னய்யா இப்படிப் படுத்தறானுங்க, இவ்ளோ எக்ஸ்பீரியன்ஸோட ஒரு ப்ரொக்ராமரை எங்கே தேடறது?’

‘ஒண்ணும் கவலைப்படாதே மாம்ஸ், எல்லாம் நான் பார்த்துக்கறேன்’

‘நீமட்டும் என்ன செய்வே?’

’கொஞ்சம் வெயிட் பண்ணு, ஏழெட்டு ப்ரொஃபைல் அவனுக்கு அனுப்பிவைக்கறேன்’

‘எப்படிய்யா? இவன் கேட்கிற டெக்னாலஜீஸ்ல அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளுங்க நம்மகிட்ட இல்லையே’

‘அதனால என்ன? இருக்கிற பசங்களோட ரெஸ்யூம்ஸை அனுப்புவோம்’

’அவன் என்ன கேனப்பயலா? இதுக்கு எப்படி ஒத்துக்குவான்? நான் கேட்ட எக்ஸ்பீரியன்ஸ் இல்லையே-ன்னு கத்தமாட்டானா?’

நண்பர் சிரித்தார், ‘நம்ம ஆளுங்க கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கும்போது கவனிச்சிருக்கியா? அழகா இருக்கணும், செவப்புத் தோல் வேணும், பெரிய காலேஜ்ல படிச்சிருக்கணும், வேலைக்குப் போகணும், இவ்ளோ சம்பாதிக்கணும்-ன்னு ஆயிரம் கண்டிஷன் போடுவாங்க, அப்புறம், நாலு பொண்ணு பார்த்து ரிஜெக்ட் ஆகிக் கும்பி காய்ஞ்சப்புறம், வத்தலோ, தொத்தலோ, கல்யாணம் ஆனாப் போதும்-ங்கற நிலைமைக்கு வந்துடுவாங்க’

’அதனால?’

’இந்தக் கஷ்டமருங்களும் அதுமாதிரிதான். எட்டு வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ன்னு ஆரம்பிப்பாங்க, பத்து பேரை இண்டர்வ்யூ செஞ்சு தலைவலியை அனுபவிச்சப்புறம், கொஞ்சம் கொஞ்சமா இறங்கிவருவாங்க, கடைசியில, ஜஸ்ட் இப்பதான் காலேஜ்லயிருந்து வெளியே வந்த ஃப்ரெஷ்ஷரைக்கூட ஏத்துக்கத் தயாராயிடுவாங்க’

யம்மாடி. நல்லவேளை நான் ப்ராஜெக்ட்களை மேய்க்கும் உத்தியோகத்தில் இல்லை. இவ்ளோ சைக்காலஜி பார்த்து வேலை செய்வது என் உடம்புக்கு ஆகாது!

***

என். சொக்கன் …

09 11 2009

15 Responses to "எட்டு வருஷ அனுபவம்"

//எப்படிய்யா? இவன் கேட்கிற டெக்னாலஜீஸ்ல அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளுங்க நம்மகிட்ட இல்லையே’

‘அதனால என்ன? இருக்கிற பசங்களோட ரெஸ்யூம்ஸை அனுப்புவோம்’//

:)) அதானே!

கேட்டது கிடைக்காட்டி கிடைச்சத்தை வைச்சு ஒப்பேத்திக்கிடுவாங்க டோன் ஒர்ர்ரி :))))

பொதுவாவே ச்சும்மா கேளுங்கப்பான்னு சொன்னா இந்த சமூகமே இப்படித்தான் பாஸ் கேப்பாங்க :))))

ஆயில்யன்,

நன்றி 🙂

உங்க நண்பர் இந்த தொழிலில் அனுபவமானவர்னு நினைக்கிறேன், செம உதாரணம் 😉
Due to project schedule and budget, we can’t wait indefinitely, sometimes we are forced to accept the recources we get and start. But that’s not the good sign.

அவர் சொன்னது உண்மை தற்போது எல்லா கம்பெனிகளிலும் அப்படித்தான் நடக்கிறது.

இந்த தில்லாலங்கடி வேலை தெரிஞ்சு தான், அவங்க கேட்கும் போதே 8 வருஷம், 10 வருஷம்னு கேட்கறாங்க.

6 மாசம் அனுபவமுள்ள ஆள் வேணும்னு அவங்க கேட்டா, கம்ப்யுட்டரே தெரியாத ஆள தானே அனுப்புவாங்க. :))

என்ன இது குட்டியா பதிவு போட்டுகிட்டு , ஃபுல் மீல்ஸா போடுங்க சொக்கன் :d

//’இந்தக் கஷ்டமருங்களும் அதுமாதிரிதான். எட்டு வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ன்னு ஆரம்பிப்பாங்க, பத்து பேரை இண்டர்வ்யூ செஞ்சு தலைவலியை அனுபவிச்சப்புறம், கொஞ்சம் கொஞ்சமா இறங்கிவருவாங்க, கடைசியில, ஜஸ்ட் இப்பதான் காலேஜ்லயிருந்து வெளியே வந்த ஃப்ரெஷ்ஷரைக்கூட ஏத்துக்கத் தயாராயிடுவாங்க’//

ஆஹா…நான் அனுபவிச்ச கஷ்டத்தை தெள்ளத் தெளிவா எழுதியிருக்கீங்களே.

http://kgjawarlal.wordpress.com

//”யம்மாடி. நல்லவேளை நான் ப்ராஜெக்ட்களை மேய்க்கும் உத்தியோகத்தில் இல்லை. இவ்ளோ சைக்காலஜி பார்த்து வேலை செய்வது என் உடம்புக்கு ஆகாது!”//

உண்மை …..உண்மை …….

அந்தக் காலத்துல நான் படிச்ச பாலிடெக்னிக் – கரும்பலகையில் – யாரோ ஒரு சீனியர் எழுதியிருந்தார் – அது ஞாபகத்துக்கு வந்தது. என்ன எழுதியிருந்தார்?
Sight all
Select 4
meet 3
love 2
marry 1

http://engalblog.blogspot.com

//2 Php Developers For Intl Company (At Home) (2 – 50 Yrs)

Tratta Solucoes Comerciais Ltda

Delhi, Mumbai, Chennai, Kolkata, Bangalore, Hyderabad / Secunderabad, Pune, Thiruvananthapuram(Trivandrum), Ahmedabad, Noida
Tratta Solucoes Comerciais, an 5 years old company based on Brazil want 2 PHP programmers. Necessary: At least 2 year of experience in PHP 5 Mysql ,Html, Xml, Ajax, SVN. Recommended: Json,Scriptaculous, JQuery, Flash, Zend framework and Magento. Candidate must have a great communication and intere..

SMS APPLY CJ543399 To 55050
—————-
எனக்கு வந்த job alert email மேலே attach.செய்துள்ளேன்.அதில் பாருங்கள் 50 வருடங்கள் கேட்கப்பட்டுள்ளது .PHP வந்தே அவ்வளவு வருடங்கள் இருக்காது.ஒருவேளை இது அச்சு பிழையாக இருக்குமோ!!!

//நண்பர் சிரித்தார், ‘நம்ம ஆளுங்க கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கும்போது கவனிச்சிருக்கியா? அழகா இருக்கணும், செவப்புத் தோல் வேணும், பெரிய காலேஜ்ல படிச்சிருக்கணும், வேலைக்குப் போகணும், இவ்ளோ சம்பாதிக்கணும்-ன்னு ஆயிரம் கண்டிஷன் போடுவாங்க, அப்புறம், நாலு பொண்ணு பார்த்து ரிஜெக்ட் ஆகிக் கும்பி காய்ஞ்சப்புறம், வத்தலோ, தொத்தலோ, கல்யாணம் ஆனாப் போதும்-ங்கற நிலைமைக்கு வந்துடுவாங்க’//

//யம்மாடி. நல்லவேளை நான் ப்ராஜெக்ட்களை மேய்க்கும் உத்தியோகத்தில் இல்லை. இவ்ளோ சைக்காலஜி பார்த்து வேலை செய்வது என் உடம்புக்கு ஆகாது!//

ரசிக்க வைத்தது சார்.

ravisuga, Saminathan, Chakra, Prakash, Jawahar, Kesava Pillai, kggouthaman, Abdul, ரவி, நர்சிம்,

நன்றி 🙂

//இந்த தில்லாலங்கடி வேலை தெரிஞ்சு தான், அவங்க கேட்கும் போதே 8 வருஷம், 10 வருஷம்னு கேட்கறாங்க//

அது சரி, இந்த சைக்கிள் இப்படியே தொடர்ந்தா என்ன ஆகறது? 🙂 கீழே அப்துல் சார் சொல்லியிருக்கிறமாதிரி ‘50 வருஷ அனுபவ’த்திலதான் போய் நிக்கும்!

//ஃபுல் மீல்ஸா போடுங்க//

இப்போ கொஞ்சம் வேலை ஜாஸ்தி. கொஞ்சம் பொறுங்க. சீக்கிரம் திரும்பிடறேன் 🙂

//Sight all … Select 4 … meet 3 … love 2 … marry 1//

அட, இந்த கான்செப்ட் ஆஃபீஸ்லமட்டுமில்லாம வாழ்க்கைக்கும் பொருந்துமா? அடடா :)))))

//50 வருடங்கள் கேட்கப்பட்டுள்ளது. PHP வந்தே அவ்வளவு வருடங்கள் இருக்காது.ஒருவேளை இது அச்சு பிழையாக இருக்குமோ!!!//

அப்படிதான் இருக்கணும்ன்னு நான் கடவுளை வேண்டிக்கறேன் 🙂

எனது அனுபவம் பற்றி பேசும்போது நான் பொறியாளனாக 23 ஆண்டுகள், ஜெர்மன் மொழிபெயர்ப்பாளனாக 35 ஆண்டுகள், பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளனாக 32 ஆண்டுகள் ஆக கூட்டு அனுபவம் 90 ஆண்டுகள் என்பேன்.

உங்கள் வயது என்ன எனக்கேட்டால் 64 ஆண்டுகள் என்பேன்.

எப்படி இது சாத்தியம் என்றால், ஓவர்டைம் என்பேன் சிறிதும் சிரிக்காமல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு ராகவன்,

நன்றி 🙂

//எப்படி இது சாத்தியம் என்றால், ஓவர்டைம் என்பேன் சிறிதும் சிரிக்காமல்//

ஏன் சிரிக்கவேண்டும்? கன்ஸல்டண்ட், தனியார் ப்ரொஃபஷனல்ஸ் மத்தியில் இது சகஜமப்பா 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 609,225 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
%d bloggers like this: