மனம் போன போக்கில்

ஐன்ஸ்டீனும் அஞ்சு வரியும்

Posted on: November 26, 2009

குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஐன்ஸ்டீன்பற்றிய புத்தகம் ஒன்றில், இந்த நகைச்சுவைக் கவிதையைப் படித்தேன் (லிமரிக்-தானே இது?)

There was a young lady named Bright

Who travelled much faster than light,

She started one day

In the relative way

And returned on the previous night

இது கொஞ்சம் அதீத எளிமைப்படுத்தலாகத் தோன்றலாம். ஆனால் அஞ்சு வரியில் ரிலேட்டிவிட்டியை முழுசாக விளக்கிவிடமுடியுமா என்ன?

போகட்டும். இந்த லிமரிக்கைத் தமிழில் மொழிபெயர்க்கமுடியுமா? வடிவம் கெடாமல் செய்தால் சந்தோஷம், இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் கரடுமுரடாகப் பல்லை ஒடிக்காமல் குழந்தைகள்கூடச் சரியாகப் படித்துப் புரிந்துகொள்ளும்படி இருக்கவேண்டும்.

முயற்சி செய்கிறீர்களா? மூன்றுக்கு மேற்பட்ட entries வந்தால், ஒரு poll நடத்தி, ஜெயிக்கும் கவிதைக்குப் புத்தகப் பரிசு கொடுத்துவிடலாம்.

சில குறிப்புகள்:

***

என். சொக்கன் …

26 11 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

36 Responses to "ஐன்ஸ்டீனும் அஞ்சு வரியும்"

சூப்பரு.. இப்ப போறேன்..நெக்ஸ்ட் கவிதையோட மீட் பண்றேன் 🙂

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

இதை ஏற்கனவே சுஜாதா செய்து விட்டார் என்று நம்புகிறேன் – கற்றதும் பெற்றதும்-இல்

ஐன்ஸ்டினின் தியரி சரியென்றால்
இந்த கவிதையை இன்று துவங்கி
நேற்று முடிக்கலாம்

இப்படி இருக்கும் அந்த கவிதை (லிமரிக் நிச்சயமாக இல்லை) – முடிந்தால் அந்த க பெ இருக்கும் pdf கோப்பை உங்கள் மின்னஞ்சலுகு அனுப்புகிறேன்.

சுவாசிகா, சந்திரசேகரன் கிருஷ்ணன்,

நன்றி 🙂

//இதை ஏற்கனவே சுஜாதா செய்து விட்டார் என்று நம்புகிறேன்//

ஆஹா, வாத்தியார் இதையும் அல்ரெடி கவர் பண்ணிட்டாரா, இனிமே அவருக்குப் புத்தகப் பரிசு தரமுடியாதே 🙂

ஒரேயொரு ஊருக்கு ஒரேயொரு மந்திரி

சூரியனின் வேகத்தை மிஞ்சும் சொப்பனத்து சுந்தரி

ராசா சார்புல பண்ணைக்கு

கிளம்புனாளாம் இன்னைக்கு

முந்திரியா போய்ச் சேர்ந்தா முந்தாநேத்து ராத்திரி!

பளிச்சுனு ஒருத்தி
ஒளிவேகத்தைப் பொருத்தி
கிளம்புனாளாம் இன்னைக்கு
வந்தாளாம் நேத்தைக்கு

[…] This post was mentioned on Twitter by nchokkan, Venkatesh Kumarvel. Venkatesh Kumarvel said: @dagalti தல.. சொக்கன் சார் போட்டி அறிவிச்சிருக்காரு, பார்த்தீங்களா? @nchokkan https://nchokkan.wordpress.com/2009/11/26/lim/ […]

பளிச்சுனு ஒருத்தி
ஒளிவேகத்தைப் பொருத்தி
கிளம்புனாளாம் இன்னைக்கு
வந்தாளாம் நேத்தைக்கு
என் மூச்சை நிறுத்தி.

aabba format?

லிமிரிக்கில் ஐன்ஸ்டனைச் சொல்லும்,
வெளிச்சத்தின் வேகத்தை வெல்லும்
வேகத்தில் இன்று கிளம்பியனாள்
நேற்று வந்தாள்,
என்று கதைகள் சொல்லும்.

Attempt 1

ரிலேட்டிவிடி புரிந்துகொள்ள முடியும் உன்னால்
ஓளியை விட வேகமாக கிளம்பினேன் ஒருநாள்
கிளம்பினதோ ஆடி
நான் பலே கில்லாடி
திரும்பிடடேனே ஆனியிலே ஒரு மாசம் முன்னால்

பொண்ணு ஒருத்தி இருந்தாளாம்
ஒளியோட வேகத்தில் பறந்தாளாம்
அவள் தொடங்கினது என்னமோ இனனிக்கு
சார்புநிலை வழியில்
வந்து சேருவாள் நேத்தைக்கு

அந்த வயோதிக வாலிபனின் பெயர் பிரகாசம்
வேகமாய்ச் சென்று ஒளியைச் செய்வான் பரிகாசம்
துவக்கினான் இன்று பயணத்தை அவசரகதியில்
சார்பியல் கோட்பாட்டின் பாதையில்
முந்நாள் இரவு வீட்டிற்குள் அடைந்தான் பிரவேசம்

மின்னலுன்னு பேரு அவளுக்கு
ஒளியா ஓடினாலும் பிடிக்காது சுளுக்கு
ஊரவிட்டு ஓடினா ஒருநாளு
ரி-லேட்டிவிட்டி தியரிக்கது திருநாளு
மொதநா நைட் திரும்பி வந்தா கையப்புடிச்சி குலுக்கு.

இருந்தாளே சின்னப்பொண்ணு நிலா
ஒளியைவிட வேகமாப்போனாளே உலா
கிளம்பினா ஒருநாளின் ராத்திரி
ஐன்ஸ்டீனும் சொன்னது மாதிரி
வந்தாளே முந்தின நாளிலா

ஒளியைவிட வேகமவள் பாத்து
ஓடிடுவா கதைவைநீ சாத்து
ஐன்ஸ்டீந்தான் எங்கஊரு மன்னாரு
அவரும்தான் அழகாவே சொன்னாரு
அவளுமே வருவாபார் நேத்து

குட்டிசெம ஸ்பீடுமாமே பாத்துக்கோ
பெட்டுகட்டி கெலிச்சிருவா ஏத்துக்கோ
டாவுகைய புட்ச்சிக்கினு டாட்டா போனா இன்னிக்கி
சாவுக்ராக்கி ஐன்ஸ்டீன்விதி சந்துபூந்து வந்திச்சி
குட்டிதிரும்பி நேத்துவந்தா ஏத்துக்கோ

அக்கா பேரு பொன்னாத்தா
மின்னல் கூட அவ பின்னாத்தா
நேத்து சொன்னா டாட்டா
கிளம்பிப் போனா ராக்கெட்டா
அட திரும்பி வந்தது முந்தா நேத்தா?

லைட்டை விட பாஸ்ட்டு
ஓடிடுவா பர்ஸ்ட்டு

நெண்டு வரிதான் கம்முது 😦

ரகசியமாய் காதலித்தாள் அழகி ‘பட்டு’
அவள் ஒளியை விட வேகமாய் செல்லும் சிட்டு.
வீட்டை விட்டு ஓடினால் நேத்து.
திரும்பி வந்தாள் முந்தா நேத்து.

srk, நீர் கவிஞர். லிமரிக் சூப்பர்.

அவளுமே ஒளியைவிட வேகம்
அவளுக்கு எடுத்தது ஊர்சுற்றும் தாகம்
கிளம்பிட்டா நீயுமே கொண்டாடு
ஆனாதிரிசங்கு போலாச்சு உன்பாடு
நேத்தேயவ திரும்பறது சோகம்

//19 | மகாகவி பாதிரி
நவம்பர் 26, 2009 இல் 10:36 பிற்பகல்

srk, நீர் கவிஞர்.//

யோவ் பாதிரி, எஸ் ஆர் கே எழுதினது பிடிக்கலைன்னா நேரடியா சொல்லும். அதுக்காக பொதுவில் இப்படி எல்லாம் திட்டறது ரொம்ப இமா. சொல்லிட்டேன்.

இன்னைக்கு அவளுமே உண்டானா
இடுப்புபக்கம் ரொம்பவுமே குண்டானா
இதுக்கேதும் இருக்குதாப்பா மருந்து
ரிலேட்டிவிட்டி தானப்பா விருந்து
கிளம்பிப்போய் போனமாசம் ரிடர்னா?

குட்டியொருத்தி பேரு ஜோதி,
அவ லைட்ட விட வேகமான ஜாதி;
கிளம்பினா ஒரு நாளு,
ஓடுது அவ காலு,
திரும்பிவந்தா முந்தைய தேதி

ஐயோ… வெண்பாவைத்தான் பாம் போட்டு வெடிச்சுப்புட்டாங்க. லிமரிக்கையும் லூசுல விட்டுக் கொல்றாங்களே இப்படி.

சேதாரத்தை குறைக்கும் விதமா நயமான லிமரிக் ஒண்ணு.

சின்னப் பெண் ஒருத்தி பெயரோ சில்வண்டு
சீறிப்பாய்வா ஒளியைத் தாண்டி வேகம் உண்டு
இன்று புறப்பட்டாள் புத்தூருக்கு
சார்பியல் கோட்பாடு வழியிருக்கு
சுற்றித் திரும்பினாள் நேற்றே சிரித்துக் கொண்டு

ஃபிகரு பேரு அஞ்சனா
அவ லைட்டு ஸ்பீடை மிஞ்சுனா
இன்னிக்கு ஜூட் வுட்டா
மின்னலாப் பூட்டா
நேத்திக்கு ரிடர்ன் வந்து கொஞ்சுனா.

வருவாளா சுமதி
தருவாளா அமைதி
வரப் போறோம் நாங்க
பெறப் போறோம் வீங்க.

(இயற்றியவர்: சிங்காரவேலன்)
காலம் : கி.பி. 1991-ம் ஆண்டு

அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு வரா ஷோக்கா
எழுந்து போடா மூக்கா

இயற்றியவர்: யாரோ
காலம் : எதுவோ

சொக்கன் கேட்டார் லிமரிக்கு
ஓடிப் போனேன் குமரிக்கு
ஆனா அவ கிழவி
திரும்பி வந்தேன் நழுவி
கவிதையெல்லாம் வெறும் டப்பா டமுக்கு

வெளிச்சமான பளிச் கன்னி
ஒளியினும் விரைவாய் மின்னி
விடியலில் பயணம் தொடங்கி
முடிகையில் முன்னா லென்றாள்
ஏற்பது சிரமமென்றேன்
சார்பிய லிதுவென்ராள்

http://kgjawarlal.wordpress.com

ஏனுங்க… சரியான மொழிபெயர்ப்பு லிமரிக்குக்கு புத்தகம் பரிசுன்னு சொன்ன மாதிரி நியாபகம். என்னாச்சு….

கிளிபோல் மயில்போல் பெண்ணொருத்தீ
ஒளிபோல் வேகம் கொண்டிருந்தாள்!

நதி மலை தாண்டி
பறந்து விட
புதிதொரு பயணம்
முடிவெடுத்தாள்.

வேற்றிடம் இன்றே சேர்ந்து விட்டாள்!
நேற்றிரவே அட! திரும்பி விட்டாள்!
-ச.மீ.லோகேஷ்

நளினி என்றோர் வஞ்சி
ஒளியின் வேகத்தை மிஞ்சி
ஒருநாள் கிளம்பினாள்
முதல்நாள் திரும்பினாள்

(சுஜாதா – கற்றதும் பெற்றதும் பாகம் 1 – பக்கம் 167 – தகவல்: http://twitter.com/ommachi/status/6229303911)

[…] முந்தைய பதிவில் ஓர் ஆங்கில லிமரிக்கு கொடுத்து […]

அல்ட்டிமேட் அல்ட்டிமேட்…!!!! எதை பாராட்டுறதுன்னு தெரியாம எல்லாமே சூப்பரப்பு…

‘ஒரு பொண்ணிருந்தா பேரு ஜோதி

ஒளி வேகம் அவள் வேகத்தில் பாதி

சட்டுனு கிளம்பிப் போனாள்

சார்பியல் வழியில் ஒரு நாள்

வந்து சேர்ந்தாள் அதுக்கு முந்தா நாள்!’

—–
தவிர சுருக்கமாக ரிலேடிவிடி தியரி பற்றி இப்படியும் சொல்லலாமே
—-
‘எனக்கு வேறு வேலை

இருந்தது. நேற்று நீ

வர வேண்டாம்!’

—-
கே.பி.ஜனா

வெங்கிராஜா, பப்பு, dagalti, அருண், சுப தமிழினியன், மகாகவி பாதிரி, இலவசக்கொத்தனார், SRK, ஆயில்யன், Karthikeyan G, பினாத்தல் சுரேஷ், லிமரிக்கை காப்பாற்றுங்கள், சித்ரன், sureshkannan, Jawahar, C.M.LOKESH, செந்தழல் ரவி, k.b.janarthanan,

நன்றி 🙂

//எனக்கு வேறு வேலை இருந்தது. நேற்று நீ வர வேண்டாம்!//

இது ரொம்ப அழகுங்க 🙂 பாராட்டுகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 593,268 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
%d bloggers like this: