மனம் போன போக்கில்

ஜெயிச்சது யாரு?

Posted on: December 8, 2009

நம்ம ’ஐன்ஸ்டீன் புகழ்’ லிமரிக் தேர்தலுக்கு ஓரளவு நல்ல வரவேற்பு – ஓட்டுப் போட்ட 70 பேருக்கு நன்றி🙂

இப்போ, முடிவுகள்:

முதல் இடம்:

அக்கா பேரு பொன்னாத்தா

மின்னல் கூட அவ பின்னாத்தா

நேத்து சொன்னா டாட்டா

கிளம்பிப் போனா ராக்கெட்டா

அட திரும்பி வந்தது முந்தா நேத்தா?

சத்யராஜ்குமார்

இரண்டாவது இடத்தில் (ஜஸ்ட் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம்தான்) ரெண்டு பேர்:

ஒரேயொரு ஊருக்கு ஒரேயொரு மந்திரி

சூரியனின் வேகத்தை மிஞ்சும் சொப்பனத்து சுந்தரி

ராசா சார்புல பண்ணைக்கு

கிளம்புனாளாம் இன்னைக்கு

முந்திரியா போய்ச் சேர்ந்தா முந்தாநேத்து ராத்திரி!

வெங்கிராஜா

பளிச்சுனு ஒருத்தி

ஒளிவேகத்தைப் பொருத்தி

கிளம்புனாளாம் இன்னைக்கு

வந்தாளாம் நேத்தைக்கு

என் மூச்சை நிறுத்தி

பப்பு

ஜெயிச்ச ‘தல’ங்களுக்கு வாழ்த்துகள். உங்க (இந்திய) முகவரியை ஈமெயில் செஞ்சீங்கன்னா புத்தகப் பரிசை அனுப்பிவைக்கிறேன் – http://nhm.in/shop/N.-Chokkan.html <– இந்த புத்தகங்கள்ல ஏதாவது 3 தேர்ந்தெடுத்து உங்கள் விருப்ப வரிசையைச் சொன்னால், அதில் ஏதேனும் ஒன்றை (எது கைவசம் இருக்கிறதோ அதை) அனுப்பப் பார்க்கிறேன்!

மற்றவர்களுக்கு, இன்னொரு போட்டி வெச்சுடலாமா? பரிசு நான் எழுதின புஸ்தகம்தான்னு சொன்னா ஏன் இப்படி ஓடறீங்க?

***

என். சொக்கன் …

08 12 2009

10 Responses to "ஜெயிச்சது யாரு?"

ஓ…இதுக்கு பேர்தான் self promotingஆ😉

Jokes apart..a well deserved price🙂

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

//உங்க (இந்திய) முகவரியை ஈமெயில் செஞ்சீங்கன்னா புத்தகப் பரிசை அனுப்பிவைக்கிறேன்//

பொற்கிழியையும் கூடவே அனுப்பலாம் ஆட்சேபனை இல்லை:)))

வெற்றிபெற்ற லிமரிக் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

கலந்துகொண்ட மற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வெற்றிபெற்ற லிமரிக் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்…

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!!!

ஆறுதல் பரிசு இல்லீங்களா?

http://kgjawarlal.wordpress.com

சுவாசிகா, குசும்பன், Peer, vijayashankar, சுப தமிழினியன், Pattaampuchi, பப்பு, Jawahar,

நன்றி🙂

//இதுக்கு பேர்தான் self promotingஆ//

பின்னே? நம்மகிட்டயிருந்து தப்பிக்க நினைச்சாலும் விடமாட்டோம்ல?😉

//பொற்கிழியையும்//

கிழிஞ்சதுபோங்க🙂

//ஆறுதல் பரிசு இல்லீங்களா?//

மெயின் பரிசே புத்தகம்தான், அதுக்கப்புறம் ஆறுதல் பரிசுன்னா பிட்நோட்டீஸ்தான் தரணும், பரவாயில்லையா?🙂

[…] ஹோ’ புத்தகம். எழுத்தாளர் சொக்கன் பரிசாகக் கொடுத்தது. பஸ்ஸிலும், ரயிலிலும், பஸ் […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 492 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 417,662 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2009
M T W T F S S
« Nov   Jan »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
%d bloggers like this: