மனம் போன போக்கில்

பாரதி பிறந்த நாள் (டிசம்பர் 11)

Posted on: December 11, 2009

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? அட
மண்ணில் தெரியும் வானம், அது நம்
வசப்படலாகாதோ?
எண்ணி எண்ணிப் பலநாளும் முயன்று இங்(கு)
இறுதியில் சோர்வோமோ? அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!
என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது
சத்தியம் ஆகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றும் உணர்ந்தபின்னும்
தன்னை வென்று ஆளும் திறமை பெறா(து) இங்கு
தாழ்வுற்று நிற்போமோ?

8 Responses to "பாரதி பிறந்த நாள் (டிசம்பர் 11)"

சொக்கன்!

ஒரு தார்மீகக் கடமையாகவே இந்த இடுகையை இட்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். (நான் படித்த சொற்ப பாரதி கவிதைகளில்) எனக்கு(ம் பாலாவுக்கும்!) பிடித்த thought:

தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.

இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

தமிழ் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை மறக்காமல் நினைவு கூரும் சிலரில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி!

நமீதா பிறந்த நாள் என்னன்னு கேட்குற மக்களுக்கு நடுவுலதான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம்னு நினைச்சா 😦

சொக்கன்ஜி இந்தப் பாட்டு சாதாரணமா யார் கண்லயும் படறதில்லை. உங்க கண்ணிலே பட்டிருக்கு. இதுக்கு ஹிந்தோள ராகத்திலே மெட் போட்டிருக்கேன். அருமையான தன்னம்பிக்கை இந்தப் பாட்டிலே!

http://kgjawarlal.wordpress.com

என்ன சார் ஒரு நாள் விட்டு சூப்பர் ஸ்டார் படம் போட்டிருந்தா நல்லா இருந்திருக்குமே. பாரதி யாருன்னு கேக்கற நாட்டுல பாரதியார் படத்த போட்டிருக்கீங்களே.

“நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெட புழுதியில் எறிந்த
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் தமிழ்நாடு”

சற்று தாமதமான பின்னூட்டம்.
பாரதி பற்றி எங்க யார் பேசினாலும், நிறைய பேர் ஆதங்க படுகிறோம். He was not acknowledged/recoginized.
ஆனா தமிழ் படித்த யாரும் பாரதிய மறந்துட முடியாது.
தமிழ் படிக்கிற யாரும் அவர skip பண்ணிட்டு தமிழ் படிச்சுட முடியாது. உண்மையான அங்கீகாரம் இது.

பாரதியார் வாழ்ந்த காலத்துல அவர மதிக்கலைன்னு பொலம்பறத விட, நாம பாரதிய மறக்காம இருப்போம். நம்ம பசங்களுக்கு அவரை அறிமுகம் செய்வோம். அத விட முக்கியம். பாரதியோட படைப்புகளை, படிச்சு புரிஞ்சுக்கற அளவுக்கு நம்ம பசங்களுக்கு தமிழ் கத்து குடுப்போம். பாரதிக்கு மட்டும் இல்ல, தமிழ் வளர்த்த, வளர்க்கற எல்லாருக்கும் நம்ம செய்யற மரியாதை இது தான்.

venkatramanan, SRK, ila, Jawahar, R Sathyamurthy, Priya Kathiravan,

நன்றி 🙂

//இந்தப் பாட்டு சாதாரணமா யார் கண்லயும் படறதில்லை//

பாரதியார் கவிதைகளை எப்பப்பார் படிக்கிற வழக்கம் இல்லை. ஆனால் எப்போதும் என் மேஜையில் இருக்கும், அவ்வப்போது ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டிக் கண்ணில் படும் கவிதையைப் படிப்பேன், அவர்போல consistency வேறு யாருக்கும் இல்லை, வரம் வாங்கிப் பிறந்தவன் என்றுதான் சொல்ல்த்தோன்றுகிறது!

//நாம பாரதிய மறக்காம இருப்போம். நம்ம பசங்களுக்கு அவரை அறிமுகம் செய்வோம்//

நன்றாகச் சொன்னீர்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 593,268 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2009
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
%d bloggers like this: