மனம் போன போக்கில்

த(க)ப்பன்

Posted on: December 29, 2009

நேற்றைக்குத் தயிர் பாக்கெட் வாங்குவதற்காகத் தெரு முனை மளிகைக்கடைக்குச் சென்றிருந்தேன். கடைக்காரரின் நல விசாரிப்புக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது, பின்னால் நச்சரிப்புச் சத்தம், ‘அப்பா, சாக்லெட் வாங்கிக் கொடுப்பா.’

நான் ஓரமாக ஒதுங்கிக்கொள்ள, அந்தப் பிள்ளையின் தந்தை முன்னே வந்தார், ‘ஒரு சாக்லெட் கொடுங்க.’

‘எது சார்?’

‘ஏதாச்சும் ஒண்ணு’ என்றார் அவர் எரிச்சலாக, ‘இப்போதைக்கு இவன் வாய் அடங்கினாப் போதும்.’

கடைக்காரர் ஐந்து ரூபாய் விலையில் ஒரு பட்டை சாக்லெட்டை எடுத்து நீட்டினார். அதை லேசாகப் பிரித்து மகனிடம் கொடுத்துவிட்டு இவர் மளிகை லிஸ்டைக் கையில் எடுத்துக்கொண்டார்.

சாக்லெட்டை லேசாகக் கடித்த அந்தப் பையனுக்கு, அதைச் சுற்றியிருந்த உறை ரொம்ப இடைஞ்சலாக இருந்தது, அப்பாவின் சட்டை நுனியைப் பிடித்து இழுத்து ‘இதை எங்கப்பா போடறது?’ என்றான்.

‘எதை?’

‘சாக்லெட் ரேப்பரை.’

‘குப்பைதானே? அப்படியே ஓரமா வீசிப் போடு’ என்றார் அவர் அலட்சியமாக.

எனக்கு அப்படியே அந்த ஆளை இழுத்துவைத்து அறையலாமா என்று ஆத்திரம் வந்தது. சுயபுத்திதான் இல்லை, அடுத்த தலைமுறையையுமா இப்படிக் கெடுக்கவேண்டும்? குப்பையைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அப்புறமாகக் குப்பைத்தொட்டி எதிர்ப்படும்போது அதில் போடவேண்டும் என்று சொல்லித்தரமுடியாதா?

நான் பார்த்தவரை, இந்த விஷயத்தில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற வித்தியாசமே இல்லை. எப்பேர்ப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர்களும், தங்கள் பிள்ளைகளுக்குப் பல் முளைத்தவுடன் ஆங்கிலம், ஹிந்தி, குதிரையேற்றம், பரதநாட்டியம், கம்ப்யூட்டர், நானோ டெக்னாலஜியெல்லாம் வரிசைக்கிரமமாகச் சொல்லித்தரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள், அதற்காகக் காசைக் கொட்டத் தயாராக இருக்கிறார்களேதவிர, க்யூ வரிசையில் நின்று நம்முடைய முறைக்காகக் காத்திருப்பது, டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்துவது, குப்பையை ஒழுங்காக அதற்குரிய இடத்தில் போடுவது என்பதுபோன்ற சின்னச் சின்னச் சமூகப் பொறுப்பு சமாசாரங்களைக் கற்றுத்தர நினைப்பதில்லை. இதெல்லாம் அவசியமில்லை என்று தீர்மானித்துவிடுகிறார்களோ என்னவோ.

போன வாரத்தில் ஒருநாள், மதியச் சாப்பாட்டு நேரம், எங்கள் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து நடைபாதையில் நடந்துகொண்டிருந்தேன். பின்னால் ஹாரன் ஒலி கேட்டது, திரும்பிப் பார்த்தால் சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பையன், பின்னால் அதே வயதில் ஒரு பெண், பிளாட்ஃபாரத்தில் நடப்பதற்கான பாதையில் பைக்கை ஓட்டிக்கொண்டு வந்திருந்தார்கள்.

வழக்கமாக இதுபோல் யாராவது ஹாரன் அடித்தால் ஒதுங்கி வழிவிடுவதுதான் என் வழக்கம். அன்றைக்குப் பசி காரணமோ என்னவோ, கொஞ்சம் கோபமாக, ‘Platform Footpath is meant for walking’ என்றேன்.

உடனே அந்தப் பையன் ‘போடா மயிரு’ என்றான் (தமிழில்), பின்னால் உட்கார்ந்திருந்த அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

***

என். சொக்கன் …

29 12 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

19 Responses to "த(க)ப்பன்"

//பிடித்து இழுத்து ‘இதை எங்கப்பா போடறது?’ என்றான்.//

கொஞ்சமா எதோ சொல்லிக்கொடுத்திருக்காங்க போல அதான் புள்ளை கொஸ்டீனு போட்டிருக்கு 🙂

ஆனா கடைசியில வர்ற ரெண்டு கேரக்டர்ஸ் நல்லாவே வளர்த்திருக்காங்க !

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

//Footpath // இதை விட walkway கச்சிதமா பொருந்தும் 🙂

//வழக்கமாக இதுபோல் யாராவது ஹாரன் அடித்தால் ஒதுங்கி வழிவிடுவதுதான் என் வழக்கம். அன்றைக்குப் பசி காரணமோ என்னவோ, கொஞ்சம் கோபமாக, ‘Platform is meant for walking’ என்றேன்.

உடனே அந்தப் பையன் ‘போடா மயிரு’ என்றான் (தமிழில்), பின்னால் உட்கார்ந்திருந்த அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்.//

அறிவுரை யாருக்கும் பிடிப்பதில்லை!

//Footpath இதை விட walkway கச்சிதமா பொருந்தும்

Pavements ஒத்து வராதோ?

// ‘போடா மயிரு’ என்றான் (தமிழில்), பின்னால் உட்கார்ந்திருந்த அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்.

பதிலுக்கு நீங்க என்ன செஞ்சீங்க? 🙂 இப்படி வலைத்தளத்தில் புலம்பிட்டீங்களா? 🙂

விடுங்க வாத்தியாரே!

கலக்கல் பதிவு…. மிக நன்று……
உங்களின் கதை என் ஊரின் ஞாபகம் வர செயகிறது, ஆனால் கெட்ட சைகைகள் காரைக்காலில் இலலை, சென்னயில் இருக்கமோ???

@ http://wp.me/KkRf @ http://yazhuspages.blogspot.com/

இழுத்து வெச்சு நாலு சாத்து சாத்தியிருக்கனும்.

இதுக்கெல்லாமா தண்டிப்போறாங்கன்னுதானே தப்பைச் செய்ய்றோம்- சுஜாதா

>> குப்பைதானே? அப்படியே ஓரமா வீசிப் போடு’

எருமை மாடுகளே இதற்கு பெட்டர். அவை கூட வீதிகளை இவ்வளவு அசுத்தப் படுத்துவதில்லை.

>> உடனே அந்தப் பையன் ‘போடா மயிரு’ என்றான் ….

இது எனக்கு இன்னும் அதிக ஆத்திரத்தைத் தருகிறது. கேடு கெட்ட நாய்கள். என்ன நெஞ்சழுத்தம்! புளிய மிளாறு வைத்து முதுகில் வீற வேண்டும்.

நற்பண்புகளை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சகிப்புதன்மை (Tolerance) அவசியம் தேவை. நல்ல பயனுள்ள பதிவு.
Wish you and your family very happy new year 2010.

//உடனே அந்தப் பையன் ‘போடா மயிரு’ என்றான் (தமிழில்), பின்னால் உட்கார்ந்திருந்த அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்//

அடுத்த தடவ இந்த மாதிரி நடந்ததுன்னா இழுத்து வைச்சு நாலு சாத்து சாத்துங்க..

நான் ஒரு தடவ rashஆ ஒட்டின ஒரு பையனை overtake பண்ணி நிறுத்தி கன்னதுல்ல ஒண்ணு விட்டேன்..கூடவே மக்கள் சிலரும் சேர்ந்து கண்டிச்சு அனுப்பினோம்..வேற வழியில்லை..இவிங்க்ளால சில சமயம் நம் வாழ்க்கையும் பாதிக்க படும் வாய்ப்பு அதிகம்

நேற்றைக்கு கூட மதன் கார்க்கி rash drivingனால ஒரு அப்பாவி உயிர் போனதை எழுதி வருத்தப்பட்டார்..

புத்தாண்டு நல்வாழ்த்துகள்..இந்த வருடத்தை விட நிறைய புகழும் வெற்றியும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது(எப்படின்னு கேட்காதீங்க..futureஅ கொஞ்சம் எட்டிப் பாத்துட்டேன் 😉 )

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

இதே இடத்தில நானா இருந்தா,
கண்டிப்பா இரத்தம் பார்த்திருப்பேன்.

//அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்.//
என்ன திமிரு பாருங்கள்?

சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் சரி… தன் மீதிருக்கும் தவறையும் மீறி எப்படி தான் இப்படி வார்த்தைகளை உபயோகப்படுத்த முடிகிறதோ…

என்னுடைய பள்ளி நாட்களில் நீதி போதனை என்றொரு வகுப்பு இருந்தது. காலப் போக்கில் அதை பாடத்திட்டத்தில் இருந்து எடுத்து விட்டார்கள்.

உங்களுக்கும், இந்த வலைப்பதிவு வாசகர்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

சாக்லேட் விற்கும் கடையருகே குப்பைக் கூடையில்லையே ?

நடைபாதையில் வண்டி ஓட்டுபவரைத் தடுக்க காவலர்கள் இல்லையே ?

புத்தாண்டில் இவற்றையும் கேட்போம்.

மிகவும் முக்கியமான ஒரு சமாசாரத்தை எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் பல பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற சிறிய ஆனால் முக்கியமான நற்பண்புகளை சொல்லித்தருவதில்லை.

உங்கள் பதிவை படித்தவர்களாவது செய்வார்கள் என்று நம்பலாம்.

அந்த திமிர் பிடித்த ஜோடி, அரசாங்க விதிகள் மட்டுமல்ல, மனிதமும் மீறியிருக்கிறார்கள். ஒன்று நிச்சயம் சொல்லமுடியும், அவர்களுக்கு அந்த திமிரை அப்பா, அம்மாவிடம் கற்றிருக்க மாட்டார்கள்.

அவர்களை உதைப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. இந்த ஜோடியின் திமிருக்கு கொதித்து உதைக்கவேண்டும், ரத்தம் பார்க்கவேண்டும் என்று சொல்லும் பதிவு நண்பர்கள் (நான் உள்பட) பலரும், அரசியல் தலைவர்கள் கொள்ளையடிப்பதை பேப்பரில் படித்துவிட்டு ஆபீஸ் போய் பேசுவதோடு சரியென்று இருக்கிறார்கள் இல்லையா?

R Sathyamurthy//பேப்பரில் படித்துவிட்டு ஆபீஸ் போய் பேசுவதோடு சரியென்று இருக்கிறார்கள் இல்லையா?//
ஏற்கனவே நான் கண்ணாடிய உடைத்திருக்கிறேன் இங்கே(குவைதில், இன்னும் வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கு),

ஆனால் சில விசயங்களில் நீங்கள் சொல்வது போல் தான்

ஆகா…தல..இளா அண்ணே சொன்னது மாதிரி செய்திருக்கானும்…ஆனா பெண்ணு ஒன்னு இருக்கும் போது…ஹூம்..வேலைக்காது ;(

தல இனிய மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் 😉

உங்க புண்ணியத்துல “ரத்தன் டாடா” படிச்சிக்கிட்டு இருக்கேன் 😉

//தங்கள் பிள்ளைகளுக்குப் பல் முளைத்தவுடன் ஆங்கிலம், ஹிந்தி, குதிரையேற்றம், பரதநாட்டியம், கம்ப்யூட்டர், நானோ டெக்னாலஜியெல்லாம் வரிசைக்கிரமமாகச் //

:)))))

//க்யூ வரிசையில் நின்று நம்முடைய முறைக்காகக் காத்திருப்பது, டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்துவது, குப்பையை ஒழுங்காக அதற்குரிய இடத்தில் போடுவது //

சொக்கன்… நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கும் இந்த விஷயங்களை எல்லாம் குழந்தைக்கு ”சொல்லி”க்கொடுக்க முடியாது என்று தான் தோன்றுகிறது. அவர்களாக ”பார்த்து” தான் கற்றுக்கொள்ள வேண்டும். இவை யாவும் பெற்றோர்கள் செய்தால் மட்டுமே குழந்தைகளையும் சென்றடையும். வரிசையில் நிற்பது என்பது நமது காலகட்டத்தின் அடிப்படை குணமான “எல்லோருடனும் போட்டி”க்கு எதிரானது. கொஞ்சம் கஷ்டம் தான்.

மிக சுவாரஸ்யமான எழுத்து உங்களுடையது. நன்றி.

ஆயில்யன், கோடீஸ் ஈரோடு, Ganesh Gopalasubramanian : கோ. கணேஷ், IQBAL SELVAN, ila, Priya Raju, RaviSuga, சுவாசிகா, balakumaran, naanal, SRK, bmurali80, R Sathyamurthy, கோபிநாத், Siddharth, Ram,

நன்றி 🙂

//இதை விட walkway கச்சிதமா பொருந்தும்//

//Pavements ஒத்து வராதோ?//

எனக்குச் சரியாத் தெரியலை. இங்கே ஃபுட்பாத்-ன்னுதான் சொல்றாங்க ‘கேர் ஆஃப் ஃபுட்பாத்’ன்னு ஒரு படம்கூட வந்தது.

//அறிவுரை யாருக்கும் பிடிப்பதில்லை!//

ஆமாம். தவறு தங்கள்மேல் இருந்தால் அறிவுரை இன்னும் பிடிக்காததாகிவிடுகிறது!

//பதிலுக்கு நீங்க என்ன செஞ்சீங்க? இப்படி வலைத்தளத்தில் புலம்பிட்டீங்களா?//

ஆமா. என்னால முடிஞ்சது அவ்ளோதானே!

//இழுத்து வெச்சு நாலு சாத்து சாத்தியிருக்கனும்//

அது என்னால் முடியாது. நான் சாதாரணமான (பயந்த) குடிமகன் என்பது ஒரு காரணம். இதற்கெல்லாம் வன்முறை தீர்வாகாது என்பது இன்னொரு காரணம் – இங்கே கருத்துச் சொல்லியிருக்கும் பல நண்பர்களின் கோபத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும் அதற்கு அடிதடியைப் பதிலாகச் சொல்வது இன்னும் அபாயம் என்று நினைக்கிறேன்.

//நற்பண்புகளை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்//

//நீதி போதனை என்றொரு வகுப்பு இருந்தது. காலப் போக்கில் அதை பாடத்திட்டத்தில் இருந்து எடுத்து விட்டார்கள்//

மிக மிக உண்மை!

//சாக்லேட் விற்கும் கடையருகே குப்பைக் கூடையில்லையே?//

அங்கே இல்லை. சற்றுத் தள்ளி இருந்தது – அப்படி இல்லாவிட்டாலும் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அடுத்த குப்பைத் தொட்டி வரும்வரை காத்திருப்பதுதான் முறை – தனி மனித ஒழுக்கம் இல்லாதவரை சட்டம் இருந்து என்ன புண்ணியம்?

//நடைபாதையில் வண்டி ஓட்டுபவரைத் தடுக்க காவலர்கள் இல்லையே ?//

இது மிக நியாயமான கேள்வி. கேட்கவேண்டும்.

//இந்த விஷயங்களை எல்லாம் குழந்தைக்கு ”சொல்லி”க்கொடுக்க முடியாது என்று தான் தோன்றுகிறது. அவர்களாக ”பார்த்து” தான் கற்றுக்கொள்ள வேண்டும். இவை யாவும் பெற்றோர்கள் செய்தால் மட்டுமே குழந்தைகளையும் சென்றடையும்//

நானும் அதைதான் சொல்கிறேன். வார்த்தைகளால் சொன்னால் சந்தோஷம், செய்து காட்டினால் இன்னும் சந்தோஷம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 593,268 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2009
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
%d bloggers like this: