Archive for May 2010
”ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்” நூல் விமர்சனம்
Posted by: என். சொக்கன் on: May 14, 2010
- In: Books | Reviews | Uncategorized | ViLambaram
- 2 Comments
எனது “ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்” புத்தகத்தின் விமர்சனம்: சத்யராஜ்குமார் (மற்றும் பல எழுத்தாளர்கள், பதிவர்கள்) எழுதும் ’இன்று’ வலைதளத்திலிருந்து:
ஆஸ்கர் மேடையில் ஆரம்பித்த அத்தியாயம் அலுங்காமல் ரஹ்மானின் சின்ன வயதுக்குப் போய், மெதுவாய் அவர் வாலிபத்துக்கு வந்து மறுபடி ஆஸ்கார் மேடையில் முடியும் போதுதான் – அட இங்கேதானே ஆரம்பித்தார் என்று நினைவுக்கு வருகிறது.
ரஹ்மானின் பாடல் வரிகளைக் கொண்டே வைத்த அத்தியாயங்களின் தலைப்புகள் ரசிக்கும்படி இருந்தன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடித்ததும், அத்தியாயத்தின் தலைப்பு என்ன என்று மறுபடி ஒரு முறை பக்கங்களை புரட்டிப் பார்க்க வைத்தன என்பது மட்டுமல்ல; சேப்டரை படித்து முடிக்கும் வரை தலைப்பாக வைக்கப்பட்ட அந்தப் பாடல் ஐ பாட் இல்லாமலே காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது.
நன்கு புகழ் பெற்று விட்ட நிலையிலும் நஸ்ரத் பதே அலிகானிடம் ரஹ்மான் கவ்வாலி கற்றுக் கொண்டார் போன்ற விஷயங்கள் வெற்றியாளர்களின் ரகசியம் என்ன என்பதை பிட்டுப் பிட்டு வைக்கிறது.
இந்த விமர்சனத்தை முழுவதும் படிக்க: http://inru.wordpress.com/2010/05/14/rahmaan/
”ஜெய் ஹோ!: ஏ. ஆர். ரஹ்மான்” புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html
எனது மற்ற புத்தகங்கள்: http://nhm.in/shop/N.-Chokkan.html
***
என். சொக்கன் …
14 05 2010