மனம் போன போக்கில்

மணிமேகலை

Posted on: June 2, 2010

கிழக்கு பதிப்பகம் ஐம்பெரும் காப்பியங்களில் முக்கியமான / முழுமையான மூன்றை (சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி) இந்தக் கால வாசகர்களுக்கு ஏற்ற நாவல் வடிவத்திலும் படக்கதை வடிவத்திலும் வெளியிடுகிறது.

சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை மூன்றுமே கதை வளம், காவியச் சுவை, கவித்துவ எழில் கொண்ட படைப்புகள். இந்த அற்புதமான இலக்கியங்களுக்கு நல்ல தமிழ் உரைகளும் இருக்கின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக இன்றைய வாசகர்கள் வாசித்து, பொருள் புரிந்து காப்பியத்தை ரசிக்கச் செய்யக்கூடிய விதத்தில் அவை இல்லை. பண்டித மொழி அல்லது பாடப்புத்தக மொழியில் எழுதப்பட்டிருக்கும் உரை நூல்களைத் தற்கால வாசகர்கள் அநேகமாகத் தொடுவதே இல்லை.

உரை நூல்களின் தன்மையால் இப்பேரிலக்கியங்கள் சமகால, எதிர்கால வாசகர்களுக்குக் கிட்டாமலேயே போய்விடக்கூடாது என்று கிழக்கு பதிப்பகம் தீவிரமாகக் கருதியதன் விளைவுதான் நாவல் வடிவில் காப்பியங்கள் என்னும் புதிய திட்டம்.

காப்பியங்களின் மூல ஆசிரியர்கள் எழுதியிருப்பதற்குமேல் இம்மியும் இந்நாவல் வடிவில் இருக்காது. அதே சமயம் தற்காலத் தமிழ் உரைநடையின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி, வாசிப்பை எளிமையான, ரசமான, விறுவிறுப்பான அனுபவமாக மாற்றும் முயற்சி இது.

தற்கால நாவல் ஒன்றை வாசிப்பது போலவே நீங்கள் இக்காப்பியங்களை வாசிக்க இயலும். ரசிக்க இயலும். கதையின் தன்மையை, போக்கை, கட்டுக்கோப்பை உள்வாங்கிக்கொள்ள இயலும். இதனை முற்றிலும் ரசித்து வியந்தபிறகு நிச்சயமாக மூல நூலை வாசிக்கும் வேட்கை உங்களை ஆட்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறோம்.

நமது புராதனமான இலக்கியங்களைக் கட்டிக்காப்பது மட்டுமல்ல; காலம் தோறும் தோன்றும் புதிய வாசகர்களுக்கு அவற்றைக் கடத்திச் செல்லவேண்டியதும் நமது கடமை என்று கிழக்கு நம்புகிறது. அதற்கான முதல் படியாக இம்முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் ‘மணிமேகலை’யின் நாவல் வடிவத்தை நான் எழுதியுள்ளேன். அது இன்றைக்கு வெளியாகிறது.

mmgwrapper

’மணிமேகலை’யைப் பொறுத்தவரை, அடிப்படையிலேயே அது ஒரு விறுவிறுப்பான சரித்திர நாவலைப்போல்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகி துறவறம் பூண்டவள் என்பதால் டூயட்டுக்குமட்டும் வாய்ப்பில்லை, மற்றபடி ஒருதலைக் காதல், சூழ்ச்சி, சண்டை, கொலை, பழிவாங்கல், மனம் திருந்துதல், ஃப்ளாஷ்பேக் எல்லாமே உண்டு. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்றாலும், இதைத் தனியாகவும் படிக்கமுடியும்படியே அமைத்திருக்கிறார் சீத்தலைச் சாத்தனார். அதே சுவாரஸ்யத்தை நாவலிலும் கொண்டுவர முயன்றிருக்கிறேன். எப்படி வந்திருக்கிறது என வாசித்துச் சொல்லவும்.

இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640 – இணையத்தில் வாங்குவதற்கான URL இணைப்பு: http://nhm.in/shop/978-81-8493-447-2.html). சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு பதிப்பகத்தின் தி. நகர் புத்தகக் கடையிலோ, நாளை ஐந்து இடங்களில் நடைபெறும் சிறப்புப் புத்தகக் கண்காட்சிகளிலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம். மற்ற ஊர்களில் இன்னும் ஒன்றிரண்டு நாள்களுக்குள் கிடைக்கத் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

***

என். சொக்கன் …

02 06 2010

(இசைராஜாவின் பிறந்தநாள்)

12 Responses to "மணிமேகலை"

நல்ல பதிவு நன்றி பத்ரி

One more feather to your crown.

Congrats!

http://kgjawarlal.wordpress.com

அருமையான விஷயம்ங்க. வாழ்த்துக்கள் சொக்கன்.

///நல்ல பதிவு நன்றி பத்ரி////////
என்ன கொடும சொக்கன் சார் இது?

வாழ்த்துக்கள் சொக்கன் ! ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இலக்கியக் கொலைகள் போதாதா? இது தேவையா? ஐயகோ… சிலப்பதிகாரமாம், மணிமேகலையாம்… நாவலாம்… அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கிறார்களாம்… விட்டால், பாரதி கவிதைகளைக் கூட யாரும் தற்காலத்தில் படிப்பதில்லை என்பதற்காக அதை எளிய முறையில் திருத்தி சுருக்கப் பதிப்பாக வெளியிடுவீர்களா?

நாளை, சொக்கன் எழுதிய மணிமேகலை என்று இதழியல் வரலாற்றில் பதிவாகி விடப் போகிறதய்யா! அது சரியா?

மன்னிக்க வேண்டும் சொக்கன், பத்ரி! இது தேவையில்லை என்பது என் கருத்து. ஆனால்… குழந்தைகளுக்காக இவற்றை எளிய நடையில் ஒரு அறிமுகம் போல குறுங்கதையாகவோ, படக்கதையாகவோ வெளியிட்டால் அவற்றை அவசியம் வரவேற்க வேண்டுவது ஒவ்வொரு தமிழாசிரியன், தமிழார்வலனின் கடமை!

நன்றி!

வாழ்த்துகள்!

மணிமேகலை பற்றி அவ்வப்போது சிறிது படித்திருக்கிறேன். சிலப்பதிகாரம் அளவுக்கு பரிச்சயமானதல்ல. நாவல் வடிவில் படிப்பது மிகவும் அருமையானதொரு அனுபவமாக இருக்கும்.

//நமது புராதனமான இலக்கியங்களைக் கட்டிக்காப்பது மட்டுமல்ல; காலம் தோறும் தோன்றும் புதிய வாசகர்களுக்கு அவற்றைக் கடத்திச் செல்லவேண்டியதும் நமது கடமை//

மிக பெரிய விஷயம் தான், வெறும் ஓலை சுவடிகளில் பொக்கிசமாக வைத்திருந்து பயனில்லை, தக்க படைப்புக்கள் உரிய காலத்தில் சமூகத்தில் நிலைத்திட நாம் ஏதேனும் செய்தே ஆக வேண்டும். இன்று மிக நல்ல நம் காவியங்கள் நூல்கள் இக்கால தலைமுறையினரால் படிக்க இயலாமல் போனதன் காரணமே தமிழின் வளர்ச்சி / அல்லது மாற்றம் தான். தவிர நாவல் குறுநாவல் சிறுகதை எல்லாம் தாண்டி ஐக்கூ போட்டால் மட்டுமே படிக்கும் அவசர காலத்தில் அவர்களை நின்று படிக்க வைப்பதென்பது எத்தனை கடினமென, கடன் வாங்கி ஆயிரம் ஆயிரம் புத்தகங்களை போட்டுவிட்டு வீட்டில் அடுக்கி வைத்திருப்பவருக்கே தெரியும். அதற்காக இலக்கிய தரத்தை குறைத்துக் கொள்வோம் என்றெல்லாம் அர்த்தமல்ல. இது ஒரு உத்தி, சாமானியர்களிடம் சங்க கால படைப்புக்களை அறிமுகப் படுத்தவும், இது போன்று எங்கோ விடு பட்டுப் போன நம் முன்னோரின் உழைப்புக்களை வெளிக் கொண்டு வரவும், இம்மூன்று படைப்புக்களும் ஒரு வழி காட்டியாய் அமையும் சொக்கன் அவர்களே.

விறுவிறுப்பான எழுத்துக்களால் எத்தனையோ வாசக உள்ளங்களை கவர்ந்த நல்ல எழுத்தாளர் நீங்கள், உங்கள் மூலம் இப்பெரும் பணி நடப்பதில் மகிழ்வு கொள்வோம். தாயகம் வருகையில் உங்கள் புத்தகம் பெற்று விமர்சனம் தெரிவிக்க முயல்கிறேன். மென்மேலும் தமிழ் கூறும் நல்லுலகம் உங்களின் பல படைப்புக்களாலும் பொலிவு கொள்ளட்டும்.

வாழ்த்துக்களுடனும்.. நன்றிகளுடனும்..,

வித்யாசாகர்

வாழ்த்துகள் சொக்கன். மிக நல்ல முயற்சி. இந்நாவல் வடிவத்தில் மூலத்தை தொடர்புறுத்தி படிக்குபடி இணைப்பு உள்ளதா?

வாழ்த்துக்கள் சொக்கன் !

நல்ல முயற்சி, கிழக்கு பதிப்பகம் எதையும் புதுமையாக செய்வதில் முதலிடத்தில் உள்ளது 🙂

நன்றி
கணேஷ் பாபு
மதுரை.

நல்ல முயற்சி!! வாழ்த்துகள்!!

6 அத்தியாயம் முடித்துவிட்டேன்..ட்விட்டரில் கூறியது போல ‘I am deeply impressed’.

முழுவதும் படித்துவிட்டு சொல்லுகிறேன் 🙂

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 612,579 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2010
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
%d bloggers like this: