43 Responses to "ஒரு புத்தகம், ஒரு போட்டி!"

சேரன் பாண்டியன் படத்தில் வரும் கவுண்டணி – செந்தில் கிணறு காமெடிதான் நினைவுக்கு வருகிறது… நானே பொண்ணுபாக்க போறேன்.. என்னையப் போயி.. அத எடு. இத எடு.. மட்டைய எடுன்னுகிட்டு…
ஆர். முத்துக்குமார்


சேரன் என்றதுமே கோவையின் சேரன் போக்குவரத்துக் கழகமும் அதன் சின்னமும் நினைவுக்கு வருகிறது. (வில்லும் அம்பும் அதற்கு நடுவே கோபுரமும் என மிக அழகானது.. இப்போதெல்லாம் கோவை பஸ்களில் வெறும் கோவை போக்குவரத்துகழகம்தான்!)
சோழன் என்றதும் அமைதிப்படை படத்தில் வரும் நாகராஜசோழன் எம் ஏ, எம் எல் ஏதான் காரணமேயில்லாமல் நினைவுக்கு வருகிறார்! இன்னொரு நாகராஜசோழன் தேவர் மகன் படத்தில் நடித்தவர் (ஏரிக்கு வெடிவைப்பவராக நடித்தவர் , இறந்துவிட்டார்)
பாண்டியன் என்றதும் தூர்தர்ஷனில் ஞாயிற்றுகிழமை பார்த்த மதுரைமீட்ட சுந்தரபாண்டியன் படத்தின் பெயர் நினைவுக்கு வருகிறது. சின்னவயதில் நிறைய முறை யோசித்திருக்கிறேன் அதென்ன மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.. மதுரையை அடகு வச்சிருப்பாங்களோ என்றெல்லாம்! 😉


இந்த மூன்று பெயர்களிலும் இயக்குனர்கள் இருந்தார்கள்/கிறார்கள். மன்னன் என்றாலும் இயக்குனர் தானே பாஸ் 😉 பதிலில் பிழையானதைக் கழித்துக் கொண்டு மீதிப்பக்கங்களையாவது பரிசாகக் கொடுக்கவும்


முத்தொள்ளாயிரத்துக்கு வாழ்த்துக்கள் சொக்கன்.
எனக்கு சேரன் போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டிஸ்
ட்ரெய்னிங் நைட் ஷிஃப்ட் சமயத்தில் தினம் இரவு பன்னிரண்டு மணிக்கு கேண்டீனில் தக்காளி சாதம் சாப்பிட்டுவிட்டு பஸ்ஸூக்குள் படுத்துத் தூங்கியதும், சோழா கிரியேஷன்ஸ் என்ற பேனரில் துப்பறியும் தொடர் எடுக்கும் சோழன் என்ற நிஜ டிடெக்டிவ் ஏஜென்ஸி ஆசாமியும், சத்யராஜ் மாதிரியே உடம்பு பூரா முடியால் போர்த்தியபடி வரும் பாரதிராஜா பட கிராமத்துக் கதாநாயகன் பாண்டியனும் இப்போதைக்கு ஞாபகம் வருகிறார்கள். அது தவிர ஒரே மாதிரி முகபாவம் கொடுத்து நடிக்கும் டைரக்டர் சேரனும், தசாவதார கிருமி கண்ட சோழனும், சி.பி. ராமசாமி ரோட்டில் என் வீட்டுக்குத் திரும்பும் வழியில் உள்ள பாண்டியன் ஸ்டோரும் உப ஞாபகங்கள்.


பழைய போக்குவரத்துக் கழகங்கள்;
கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன்;
‘ஆயிரத்தின் ஒருவன்’ செல்வராகவன்.
தனித்தனியே வெண்டுமெனில்:
சேரன் – திரைப்பட இயக்குநர்
பாண்டியன் – திரைப்பட நடிகர்
சோழன் – திரைப்படம் (ராஜராஜசோழன் : சினிமாஸ்கோப்!)


நேற்று தான் ஏதோ ஒரு படத்தில் சத்யராஜ் மனுநீதி சோழன் வேடத்தில் நடித்தைப் பார்த்தேன் அது ஞாபகம் வந்தது. இன்று மதியம் அருண் பாண்டியன் பேட்டி. அனந்த விகடனில் இயக்குநர் சேரன புகைப்படம். சினிமா நம்மை விடாது போல். சாமி படத்தில் விவேக் காமெடி தான் ஞாபகம் வருகிறது. (எந்த லா …)
கானா பிரபாவின் தவறுகளுக்காக கிழித்த பக்கங்களை என்னகு கொடுக்கவும் அவை அதிகமாக இருக்க கூடும் 🙂


ஒரு புதைபொருள் ஆராய்ச்சி மாதிரி தமிழின் தொண்மையான நூல்களை, தற்காலத்திற்கு ஏற்ப அவற்றை மறுபிறப்பெடுக்க வைக்கும் தங்களின் படைத்திறனிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். தொடர்க உம் பணி. குளிர்க தமிழ் மனம்.
சோழனென்றதும் என் நினைவிற்கு வருவது கங்கை கொண்ட சோழபுரம். பள்ளி நாளில் சோழ சரித்திரக் கதைகளை தீவிரக் காதலுடன் படித்தவன். ஆதனாலோ என்னவோ…
சோழபுர கோவிலுக்குச் சென்றபோது, சில கிலோ மீட்டர்கள் தள்ளி, அக்கோயிலைக் கட்டிய ராஜேந்திரனின் அரண்மனையின் இருப்பிடம் ஆகழ்வாராய்ச்சியில் இருபதாய்க் கேள்விப்பட்டு, ஒரு ஹயர் சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கே சென்றேன். அடர்ந்த மரங்களினூடே, ஆள் அரவமற்ற அந்த ஒற்றையடிப் பாதையில், பிரேக் பிடிக்காத சைக்கிளைச் செலுத்திய போது…. தீடீரென்று நானே ராஜேந்திரனாய், என் சைக்கிளே புரவியாய் ஒரு எண்ணம் உதித்துவிட்டது. அவ்வளவுதான், பற்பல உணர்ச்சிகளுக்கு ஆளாகி, ஒரு மரக்கிளையை உடைத்து அதை வாள் போல் சுழற்றிக் கொண்டு, ஒற்றைக் கையில் குதிரையைச் செலுத்தியபடி அரண்மனையிடத்தை அடைந்தேன் 🙂


மற்ற இரண்டையும் விட மதுரைக்காரனான எனக்கு ‘பாண்டியன்’ தான் சட்டென்று நினைவு வருவார். சிறுவயதில் பாண்டியன் போக்குவரத்து கழகத்தின் பெயரே பாண்டியன் எனும் கதாபாத்திரத்திற்கு வைத்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது..
பாண்டியன் – கண்ணகி
சேரன் – நடிகர், இயக்குனர்.
சோழன் – ஹோட்டல் சோழா.


பாண்டிய நாடு – பாண்டிய நாட்டு தலை நகரில் பிறந்து இருபது வருடங்களுக்கு மேல், பாண்டிய நாட்டின் தென் பகுதியில்(திருநெல்வேலி-பாளையங்கோட்டை) வாழ்ந்ததால், உடனே நினைவுக்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன்.
சேர நாடு – என் தாத்தாவும், அவர் குருவாயூரில் வியாபாரத்தில் இழந்த சொத்துக்களும் (இலட்சமோ கோடியோ தெரியவில்லை)
சோழநாடு – தஞ்சாவூர் சிற்பங்களும், ஒரு முறை சென்ற போது கறை புரண்ட காவிரியும் (போன வாரம் சென்ற போது காவிரி வற்றியிருந்தது. இன்று பெங்களூரில் நல்ல மழை, காவிரி விரைவில் தஞ்சை பகுதியை நனைக்கும் என்று நம்புகிறேன்)


பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை.
சேரன் – சேரன் ட்ரான்ஸ் போர்ட் கார்பொரேசன். (சி.டி.சி.) கோவை.
சோழன் – கல்லணை கட்டியது கரிகாற்சோழன்.


சேரன் – கேரளநாட்டு பசுமை [கன்னியரும், இயற்கை எழிலும்]
சோழன் இராசராசன் தான்
பாண்டியன் – டேய் பாண்டியா! [ஆண்பாவம் தவக்களை – பாண்டியராசன் காமெடி தான்]


சேரன் சோழன் பாண்டியன் என்றதும் எனக்கு நினைவுக்கு பட்டென்று நினைவுக்கு வந்தது, பூவா தலையா படத்தில் வந்த ”மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே” என்று ஆரம்பித்து பெண்ணை தமிழகமாக வர்ணித்த வாலி எழுதிய அற்புத பாடல்.
பின்னாலேயே வந்த இன்னொரு நினைப்பு மலேசியாவில் எம்.ஆர்.ராதா பேசிய பகுத்தறிவு பேச்சில் அவர் குறிப்பிட்ட “சேரன், சோழன், பாண்டியன், இவனுங்க ஒத்தனுக்கு ஒத்தன் அடிச்சுக்குவான் அதுக்கு அப்பாவி மக்களெல்லாம் சாவணும்” என்கிற வரிகள்.
🙂
மேலே சொன்ன இரண்டும் சொக்கநாதர் இந்த தருமிக்கு கொடுத்த வரிகள். ஏதேனும் குற்றம் குறை இருந்தாலும், நக்கீரர்களுக்கு தெரியாமல் சொக்கநாதரும் – செண்பகப்பாண்டியனும் ஆன தாங்கள் பரிசை தருமிக்கு கொடுத்தருள வேண்டும்.
🙂 🙂


எழுத வந்தேன், கொஞ்சம் பெருசாப் போச்சு. அதனால கொஞ்சம் சிரமம் பார்க்காம இங்க போய் பார்த்துடுங்க.
http://elavasam.posterous.com/22569073
ஹிஹி..


முத்தொள்ளாயிரத்துக்கு வாழ்த்துகள் தல.. ‘கண்ணைப் பார், சிரி’ க்கு வெய்டிங்…
சேரன் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது ஒரு தடவை எங்கள் ஊரில் நடந்த திருவிழாவிற்கு வந்த இன்னிசை குழுவின் பெயர் சேரன் இன்னிசை குழு. அவர்களின் அதிரடி பாடலில் எங்கள் நண்பர்கள் ஆடிய ஆட்டம் எல்லாம் சும்மா சொல்ல கூடாது செம குத்து குத்தினோம்.
எனது உண்மையான பெயர் ராஜராஜன்- சோழன் என்றதும் இதை தவிர வேறு என்ன நினைவுக்கு வரவேண்டும் தலைவரே ???
பாண்டியன் என்றதும் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். என்ன ஒரு கலைநயத்துடன் கட்டப்பட்டு உள்ளது.


பாண்டியன் என்றாலே –
என்றைக்கும் என் நினைவிற்கு வருவது
மறைந்த எழுத்தாளர் / ஆசிரியர்
அரு.ராமநாதன் எழுதிய மறக்க முடியாத
“வீரபாண்டியன் மனைவி” என்கிற
சரித்திர நாவலும் அதில் வரும் முக்கிய
கதா பாத்திரமாகிய “ஜனநாத கச்சிராயர்” உம் தான்.
இன்று வரை இதற்கிணையான ஒரு கதாபாத்திரம்
தமிழில் படைக்கப்படவில்லை. படித்தால் –
நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
எங்கு கிடைத்தாலும் தேடிப்படியுங்கள் !
முடிந்தால் – ஒரு மலிவுப்பதிப்பு போடுங்களேன்.
அன்புடன்
காவிரிமைந்தன்
http://www.vimarisanam.wordpress.com


முத்தொள்ளாயிரத்துக்கு வாழ்த்துகள்ங்க. கலக்குங்க.
//சேரன், சோழன், பாண்டியன்//னு சொன்னா இலவசனார் சொல்லும் ”சே! ரன், சோ ழன், பாண் டியர்” தவிர்க்காம நினைவுக்கு வரும் போல. அக்மார்க் கொத்தனார் ப்ராண்ட் விளக்கம்.
எனக்கு சாண்டில்யன்தான் நினைவில் வருவார். அதிலும் சோழர்கள் பற்றி நிறைய கதை படித்திருந்ததால், சேரர், பாண்டியர் பற்றி ஏதாவது கதை வந்தால் அதிக ஆர்வத்தோடு படிப்பது வழக்கம். சாண்டில்யன் ராஜமுத்திரையில் வீரபாண்டியனை காட்டிவிட்டு பல்லவர் சைடுக்கு போய்விட்டார் என்று வருத்தமுண்டு. அவருடைய இறுதி படைப்பான விஜயமகாதேவி வரை அவர் கதைகளில் பாண்டியர்களை தேடிக் கொண்டே இருந்தேன். எல்லாம் சொந்த ஊர் பாசம்தான் 🙂


சரத்குமாரின் சேரன் பாண்டியன்
இயக்குனர் சேரன்
மஞ்சள் பச்சை சேரன் போக்குவரத்துக் கழக பேருந்து
வஞ்சிக்கோட்டை வாலிபன்
மலபார்
நெடுஞ்சேரலாதன்
இலஞ்சேரலாதன்
சேரன் செங்குட்டுவன் (இப்படிப்பட்ட பெயர்களை யாருக்கும் இப்போது சூடுவதே இல்லை)
சேரன் எக்ஸ்ப்ரெஸ்
‘ராஜ ராஜ சோழன் நான்’ பாடல்
‘சோழபுறத்துக்கிளி செல்லம்மா’ பாடல்
சோழவரம் ஏரி
ராஜேந்திர சோழன்
கரிகாலன்
பூம்புகார், காவேரிப்பூம்பட்டினம்
ஹோட்டல் சோழா
சோழா பூரி
சோழவந்தான்
(நான் பாதியிலேயே கைவிட்ட) ஆயிரத்தில் ஒருவன் படம்
புலி
தஞ்சை
பெரிய கோயில்
தசாவதாரம் சோழ மன்னன் நெப்போலியன்
காக்ரா சோளி (ஹீ ஹீ)
சூப்பர் ஸ்டார் (பாண்டியன் பட நாயகன்)
நெடுஞ்செழியன்
பலே பாண்டியா (பழைய படம்)
பலே பாண்டியா (2010 படம்) 🙂
தமிழ்ச்சங்கம்
மீன் சின்னம்
மதுரை நகரம்
அலெக்ஸ் பாண்டியன்
வளவி வியாபாரி பாண்டியன் (நடிகர்)


சிக்ஸர்! (சே ரன்)
துக்ளக் (சோழ ப்ரம்மஹத்தி)
வானளாவிய அதிகாரம் (பி எச்)


சேரன் – ஏதோ ஒரு பாட்டில் எம்.ஜி.ஆர் பாடுவார் “கல்லினை நாட்டான் சேர மகன்”ன்னு. அதான் ஞாபகம் வருது. அது இமயவரம்பன் தானே!!
சோழன் – டக்கென செல்வாவின் “ஆயிரத்தில் ஒருவன்”.
பாண்டியன் – எங்க ஊரு மதுரைதான் ஞாபகம் வருது.


வாழ்த்துக்கள் தலைவா! இலக்கியத்திலும் உங்கள் கால் பதிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. இப்போது போட்டி விடை-
சோழன் – 1. ’சோழநாடு சோறுடைத்து’ என்ற வாக்கியம். 2. ராஜ ராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயிலின் விந்தை அழகு
பாண்டியன் – 1. கண்ணகியின் சிலப்பதிகாரத்தில் தப்பாக தீர்ப்பளித்த பாண்டிய மன்னன் 2. பாண்டிய ராஜ்ஜியத்தின் மீன் பொருந்திய கொடி.
சேரன் – 1. சேரன் செங்குட்டுவன் 2. இயக்குனர் சேரன் 🙂


சேரன் – யானைகள்..
சோழன் –
பெரியகோவில் – தஞ்சை.
ராஜராஜ சோழன் (MA) – சத்யராஜ் – அமைதிப்படை.
பாண்டியன் – லொடுக்கு பாண்டி.
🙂


சேரன், சோழன், பாண்டியன் யாரை குறிப்பிட்டாலும் எனக்கு “பொன்னியின் செல்வன்” தான் ஞாபகம் வருகிறது.


சேலத்திலிருந்து நாமக்கல் வரும் வழியில் ‘சேரன் சோழன் பாண்டியன்’ என்ற பெயரில் சினிமா தியேட்டர்கள் உண்டு. நான் சொல்வது 1980- களில். இப்பவும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
தவிர, இப்பொழுது பாலகுமாரனின் உடையார் படித்துக் கொண்டிருக்கிறேன். சேரன், சோழன், பாண்டியன் – இந்த மூன்று வார்த்தைகளுமே ராஜராஜ சோழரைத் தான் நினைவுபடுத்துகிறது.


சோழன் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது தம்பி பிரபாகரன்
சேரன் சோழன் பாண்டியன் என்றவுடன் எனக்கு நினைவுக்கு அவர்களிடம் இருந்த ஒற்றுமையின்மை
அரவிந்தன்
பெங்களுர்


சேரன்மாதேவி – பி.எச்.பாண்டியன் தொகுதி
பாண்டியன் – என் தம்பி சுந்தரபாண்டியன்
கோப்பெருஞ்சோழன்


வாழ்த்துக்கள்.
சேரன், சோழன், பாண்டியன் – இதில் எந்த வார்த்தையைக் கேட்டாலும் அந்தப்புரம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.


cheran-keralam
chozhan-thanjai periya koil,rajarajachozhan
pandiyan-muthu,madhurai,meen


பாண்டியன் குதிரை குளம்படியும்- தூள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும்- மதி
தோண்டிய புலவர் சொல்லடியும்- இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை- இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை
-வைரமுத்து


சேரன்: இயக்குநர்
சோழன்: “சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ” – அமைதிப்படை வசனம்
பாண்டியன்: கொற்றவை


பாண்டியன் : குலசேகர பாண்டியனும் அவன் பெயர் தாங்கிய குலசேகரபட்டினம் என்ற சிற்றூரும். திருசெந்தூர்க்கு அருகில் உள்ள இந்த ஊரில் நடக்கும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இருநூறு வருடங்களுக்கு முன்பு இங்கு உள்ள இயற்கை துறைமுகத்தில் இருந்து சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து நடைபெற்றதாக கூறுகிறார்கள். மன்னார் வளைகுடாவில் உள்ள இந்த ஊரில் இருந்து இலங்கை வெறும் 34 கடல் மைல் தான். 1930 களில் இங்கிருந்து கள்ள தோணியில் பொருள் ஈட்ட இலங்கை சென்ற பலரில் எனது கொள்ளு தாத்தாவும் ஒருவர்.
சோழன்: ராஜ ராஜ சோழனும் அவன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலும். இந்த கோயிலை பற்றிய ஒரு வரலாற்று தொடர் ‘ஆயிரம் காலத்து அதிசயம்’ என்ற பெயரில் தின தந்தியில் தொடராக (ஞாயிரு) தோறும் வெளிவருகிறது. இந்த கோயிலில் தான் எவ்வளவு அற்புதங்கள் !!!
சேரன் : கேரளா நாடும், முல்லை பெரியாறு பிரச்சினையும் ஞாபகம் வருகிறது. ஆமாம், அந்நாளைய சேர நாட்டின் தலைநகரம் எது ?


சேரன் சோழன் பாண்டியன் என்ன நினைவுக்கு வருதுன்னா? அதே பெயரை மறுமுறை சரியாக உச்சரிக்கத் தோணுது பாஸ். வாழ்த்துக்கள்.


தனித்தனியா சொல்ல தெரில. ஆனா மூணையும் பார்க்கும்போது நீங்க எனக்கு தரப்போகிற “முத்தொள்ளாயிரம்” புத்தகம்தான் என் கண் முன்னாடி வருது


i remember my fathers family .because the name of the three brothers namely pandiyan(periyapa) ,solan(my father) ,cheran(chithapa). my native is thanjavur.


இதுவரைக்கும் எப்படியோ தெரியாது. இனிமேல் இந்தப் பெயர்களைக் கேட்டால் நண்பர் சொக்கனின் ஞாபகம் தவிர எதுவும் வராது.


சேரன் – எங்க ஊரு ஏரியால நான் தமிழ் படிக்க கத்துகிட்டு இருந்த போது இருந்த போக்குவரத்து கழகம்.. ‘ர’-வோட கால் பகுதி பஸ் பலகை சாஞ்சு மறஞ்சு போக, அதை நான் ‘சோன்’ போக்குவரத்து கழகம்-னு படிச்சு சொல்லி காமெடி பீஸ் ஆனா நெனவு.. கூடவே இயக்குனர் சேரனும்..
சோழன் – சோழர் பரம்பரையில் ஒரு MLA..
பாண்டியன் – “எதுக்கு பொண்டாட்டி.. என்ன சுத்தி..” பாட்டுல வர்ற ஹீரோ..


சேரன், சோழன், பாண்டியன் என்று சொன்னால் வடிவேல், ரஞ்சித், ஆனந்தபாபு ஆகியோர் நடித்த ஒரு மொக்கைப்படம்தான் நினைவுக்கு வருகிறது. தமிழர்கள் போற்றும் தன்னிகரில்லா மன்னர்களை கேவலப்படுத்த வேண்டுமானால் அவர்களை டைட்டிலாக்கி தமிழ்ப்படம் எடுத்தால் போதும்!


[…] ஒரு புத்தகம், ஒரு போட்டி! […]


[…] ஒரு புத்தகம், ஒரு போட்டி! […]


[…] ஒரு புத்தகம், ஒரு போட்டி! July 2010 39 comments 5 […]


அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந் தீப்பட்டதென வெரிஇ
புள்ளினம் தம் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும்

1 | ஆயில்யன்
July 10, 2010 at 4:14 pm
சேரன் – சேர நாட்டிளம் பெண்கள்
சோழன் – சோழமண்டலம் தஞ்சை
பாண்டியன் – பாண்டியன் எக்ஸ்பிரஸ் & பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா :)))