Archive for July 16th, 2010
சேரன், சோழன், பாண்டியன்: போட்டி முடிவுகள்
Posted by: என். சொக்கன் on: July 16, 2010
- In: Announcements | போட்டி | Books | Poster | Results | Uncategorized | ViLambaram
- 8 Comments
முத்தொள்ளாயிரம் புத்தகம் தொடர்பாக இந்த வலைப்பதிவில் நடத்தப்பட்ட சேரன், சோழன், பாண்டியன் போட்டியில் கலந்துகொண்ட நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி – போட்டி அறிவிக்கப்பட்டு இன்னும் ஒரு வாரம்கூட ஆகாதபோதும், ‘எப்ப ரிஸல்ட்’ என்று chatடில் விடாமல் துன்புறுத்திய நண்பர்(?)களுக்கும் நன்றி 😉
சேரன், சோழன், பாண்டியன் என்ற வார்த்தைகளுக்கு நான் கொடுத்திருந்த உதாரணங்களில் ஆரம்பித்து 80 முதல் 90% சினிமா சம்பந்தப்பட்ட நினைவுகள்தான். ‘தமிழர்களுக்கு சினிமா ஓர் அபின்போல’ என்று ஒரு நண்பர் வருத்தப்பட்டார், அது உண்மைதான் 😦
Anyway, இப்போது முடிவுகள்:
- சேரன்: நடராஜன் வெங்கடசுப்பிரமணியன்
- சோழன்: காஞ்சி ரகுராம்
- பாண்டியன்: <??!!??>
இந்தப் பாண்டியன் மேட்டர்தான் கொஞ்சம் சிக்கலாகிவிட்டது. என்னுடைய கணிப்பில் காவிரிமைந்தன், பினாத்தல் சுரேஷ், சி. எம். லோகேஷ் மூவரும் சம மதிப்பெண் பெறுகிறார்கள்.
அதுமட்டுமில்லை, சேரன், சோழன், பாண்டியன் என்று பிரித்துப் பேசாமல் பொதுவான கருத்துகளைச் சொல்லியிருந்த ஆர். சத்தியமூர்த்தி, இலவசக் கொத்தனார், அரவிந்தன், herve anita ruth ஆகியோரையும் சும்மா விடமுடியாது. ஒன்பது பேருக்கும் முத்தொள்ளாயிரம் தரலாம் என்றால் என்னிடம் அத்தனைப் பிரதிகள் இல்லை 🙂 ஒருவரைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து மற்றவர்களை டீலில் விடுவதும் நியாயமில்லை.
ஆகவே, நடராஜன் வெங்கடசுப்பிரமணியன், காஞ்சி ரகுராம் இருவருக்கும் ஆளுக்கொரு முத்தொள்ளாயிரம், மற்ற நண்பர்கள் ஏழு பேருக்கும் (காவிரிமைந்தன், பினாத்தல் சுரேஷ், சி. எம். லோகேஷ், ஆர். சத்தியமூர்த்தி, இலவசக் கொத்தனார், அரவிந்தன், herve anita ruth) மீதமிருக்கும் இன்னொரு பரிசைப் பிரித்துக் கொடுப்பதாக உத்தேசம்.
பயப்படாதீர்கள், ஒரே புத்தகத்தை ஆளுக்கு 40 பக்கமாகக் கிழித்துத்தரப்போவதில்லை. வேறு வழி ஒன்று யோசித்திருக்கிறேன் – இவர்கள் எனக்கு ஒரு ஈமெயில் போட்டால் மேலே பேசலாம்: nchokkan@gmail.com)
நடராஜன் வெங்கடசுப்பிரமணியன், காஞ்சி ரகுராம்,
வாழ்த்துகள், நீங்களும் எனக்கு ஒரு ஈமெயில் போடணும், புத்தகம் அனுப்ப முகவரி வேணுமல்லோ?
***
என். சொக்கன் …
16 07 2010